ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலா மகள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலா மகள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலா மகள்! தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடிகர் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகென் ராவும், 4-வது சீசனில் நடிகர் ஆரியும் வெற்றி பெற்றுள்ளனர். தமிழில் முதல் மூன்று சீசன்களும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தொடங்கப்பட்ட நிலையில், 4-வது சீசன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைந்தது. இந்நிலையில் பிக்பாஸ் ஐந்தாவது சீசனை ஜூன் மாதம் 3 வாரத்திலிருந்து ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிக்பாஸ் 5 நிகழ்ச்சிக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியிருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இதனிடையே இந்தமுறை கலந்து கொள்ள இருப்பதாக ஒரு சில திரைபிரபலங்களின் பெயரும் அடிபட தொடங்கியுள்ளது. ஏற்கனவே நடிகர்கள் ராதாரவி, மன்...
நடிகர் மாதவனின் குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி!

நடிகர் மாதவனின் குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
நடிகர் மாதவனின் குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி! இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பையில் வசித்து வரும் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் நடிகர் மாதவனுக்கும் கடந்த வாரம் கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மாதவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தனது குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் மாதவன் நடிப்பில் தற்போது ராக்கெட்ரி எனும் படம் உருவாகி உள்ளது. இப்படத்தை அவரே இயக்கியும் உள்...
கொலை மிரட்டல் வழக்கில் சிக்கிய பாஜக அண்ணாமலை!

கொலை மிரட்டல் வழக்கில் சிக்கிய பாஜக அண்ணாமலை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொலை மிரட்டல் வழக்கில் சிக்கிய பாஜக அண்ணாமலை! திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டிய புகாரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு. அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, தேர்தல் பிரச்சாரத்தின்போது, கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை தூக்கிப் போட்டு மிதிப்பேன் என்றும் நான் வன்மத்தை கையிலெடுக்க தயாராக இல்லை. அகிம்சைவாதியாக அரசியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது என மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கு திமுக மகளிரணி தலைவர் கனிமொழி எம்பி திமுகவினர் மீது நீ கை வைத்து பார். உங்கள போல் நாங்கள் எத்தனை பேரை பார்த்துவிட்டு வந்திருப்போம்.எங்களது உடன்பிறப்புகளை யாரும் மிரட்டி விட முடியாது. நாங்கள் எழுந்து நின்றால் தாங்க மாட்டீர்கள் என்று அதிரடியாக பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில், கரூர் தி...
தனுஷின் ‘கர்ணன்’ படத்தை கைப்பற்றிய மோகன்லால்!

தனுஷின் ‘கர்ணன்’ படத்தை கைப்பற்றிய மோகன்லால்!

HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனுஷின் ‘கர்ணன்’ படத்தை கைப்பற்றிய மோகன்லால்! மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால், கவுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ளார். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், கர்ணன் படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கைப்பற்றி உள்ளாராம். முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையையும் மோகன்லால் தான் பெற்று இருந்தார் என்பதும் அந்த படத்தில் மூலம் மோகன்லாலுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது என...
ராஜீவ்காந்தி கொலை வழக்கு- ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்க சிறை நிர்வாகம் மறுப்பு!

ராஜீவ்காந்தி கொலை வழக்கு- ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்க சிறை நிர்வாகம் மறுப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ராஜீவ்காந்தி கொலை வழக்கு- ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்க சிறை நிர்வாகம் மறுப்பு! முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் உள்ளார். இவருக்கு 30 நாட்கள் விடுமுறை வழங்க கேட்டு அவரது தாய் ராஜேஸ்வரி சிறை நிர்வாகத்திற்கு ஒரு மனு அனுப்பியிருந்தார். அதில் தனக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் துணைக்காக ரவிச்சந்திரனை ஒரு மாதம் விடுப்பில் அனுப்ப வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை பரிசீலித்த சிறை நிர்வாகம் விடுமுறை அளிக்க மறுத்து விட்டது. தற்போது தேர்தல் நேரம் என்பதால் ரவிச்சந்திரனுக்கு வழி பாதுகாப்பு தர இயலாது என்றும் அவர் தங்குவதாக குறிப்பிட்டுள்ள முகவரி அருகே இலங்கை அகதிகள் முகாம் இருப்பதால் ரவிச்சந்திரன் அங்கு தங்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது....
இந்தியாவில் இருந்து சர்க்கரை, பருத்தி இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி!

இந்தியாவில் இருந்து சர்க்கரை, பருத்தி இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
இந்தியாவில் இருந்து சர்க்கரை, பருத்தி இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி! காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. இதனால் இந்தியாவிலிருந்து சர்க்கரை மற்றும் பருத்தி இறக்குமதி செய்வதற்கு பாகிஸ்தான் தடை விதித்தது. இந்த நிலையில் கடந்த மாதம் இரு நாடுகளின் எல்லையில் உள்ள சர்வதேச கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீட்டெடுத்ததன் இருநாடுகள் இடையிலான பதற்றம் தணிந்தது. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து சர்க்கரை மற்றும் பருத்தி இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பாகிஸ்தான் தற்போது நீக்கியுள்ளது....
அமெரிக்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிய திட்டம் – ஜோ பைடன் அறிவிப்பு!

அமெரிக்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிய திட்டம் – ஜோ பைடன் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
அமெரிக்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிய திட்டம் - ஜோ பைடன் அறிவிப்பு! அமெரிக்காவில் தொற்று நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அவர் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவின் உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு வசதிகளை மேம்படுத்த சுமார் 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அதிபர் ஜோ பைடன்  புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க்கில் பேசிய போது ஜோ பைடன் கூறியதாவது: உள்கட்டமைப்பு வசதிகள், தட்பவெப்ப மாற்றம், கொரோனா தொற்று போன்றவற்றால் அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அவற்றை மீண்டும் கட்டமைக்க வேண்டியது அவசியம். அதனால், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த இதுவரை இல்லா...
சுரங்கப்பாதையில் ரெயில் தடம்புரண்டு விபத்து -36 பயணிகள் உயிரிழப்பு!

சுரங்கப்பாதையில் ரெயில் தடம்புரண்டு விபத்து -36 பயணிகள் உயிரிழப்பு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
சுரங்கப்பாதையில் ரெயில் தடம்புரண்டு விபத்து -36 பயணிகள் உயிரிழப்பு! தைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் ரெயில், ஹூவாலியன் அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையை நெருங்கியபோது விபத்தில் சிக்கியது. திடீரென தடம்புரண்ட ரெயில், சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவரில் மோதியபடி சிறிது உள்ளே தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நின்றது. இதனால் ரெயில் பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தன. உள்ளே இருந்த பயணிகள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் கூக்குரலிட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்ததாகவும், 72 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணி ...
மிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்- மு.க.ஸ்டாலின்!

மிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்- மு.க.ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்- மு.க.ஸ்டாலின்! அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மகள் செந்தாமரை வீட்டில் ஐ.டி. சோதனை நடத்தி வருவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பிரசாரத்தில் அவர் கூறியதாவது: * மிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன். * ஐடி.ரெய்டு மூலம் வீட்டுக்குள் திமுகவினரை முடக்கி வைக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. * ரெய்டு போன்ற சலசலப்புக்கு எல்லாம் திமுக அஞ்சாது. அதிமுகவை மிரட்டுவது போல் திமுகவை மிரட்ட முடியாது. * மிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன். * ஐ.டி. ரெய்டு மூலம் வீட்டுக்குள் திமுகவினரை முடக்கி வைக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்....
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் 31 பேருக்கு கொரோனா!

திருப்பூர் பனியன் நிறுவனத்தில் 31 பேருக்கு கொரோனா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் 31 பேருக்கு கொரோனா! திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,384 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் முககவசம் அணிவதுடன், கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சி வாஷிங்டன் நகரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளி ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவரை பரிசோ...