1000 வாகனங்களில் தொண்டர்கள்… விடுதலையாகும் சசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு!
1000 வாகனங்களில் தொண்டர்கள்...
விடுதலையாகும் சசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு!
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதைத்தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி முதல் பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது தண்டனை காலம் முடிவடைவதை தொடர்ந்து வருகிற 27-ந்தேதி சசிகலா விடுதலையாவார் என்று சிறைத்துறை அறிவித்துள்ளது. இளவரசி அடுத்த மாதம் 5-ந்தேதியும், சுதாகரன் அபராத தொகை செலுத்தியதும் விடுதலை செய்யப்படுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா விடுதலை ஆவதையொட்டி அ.ம.மு.க.வினர் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து சசிகலாவை வரவேற்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை அவர்கள் செய்து வருகிறார்கள். சிறைத்துறை தகவல...









