ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

பொங்கல் பரிசு 2500 டோக்கன் வழங்குவதில் முறைகேடா – ஸ்டாலின் அறிக்கை

பொங்கல் பரிசு 2500 டோக்கன் வழங்குவதில் முறைகேடா – ஸ்டாலின் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மக்கள் வரிப்பணத்தை - மக்களுக்கே திரும்ப வழங்கும் ரூ.2500 பொங்கல் பரிசு மற்றும் டோக்கன் வழங்கும் பணிகளில் முறைகேடுகளுக்கு இடமளிக்கக்கூடாது; அதிமுகவினர் மூலம் டோக்கன் வழங்குவதை உடனே நிறுத்த வேண்டும்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை. “பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2500 வழங்கப்படும்” என 19.12.2020 அன்று முதலமைச்சர் திரு. பழனிசாமி தனது தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கி வைத்த போது அறிவித்தார். அரசாணையில் “ஜனவரி 4-ஆம் தேதியிலிருந்து இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பேச்சு, செய்திக் குறிப்பு அரசாணையில் மேற்கோள் காட்டப்பட்டு - இந்தத் தேதி அறிவிக்கப்பட்டாலும் - இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் அடுத்தடுத்து குழப்பங்களைச் செய்து - தேர்தலை மனதில் வைத்து, இது ஏதோ அ.தி....
நாளை நீங்கள் கூட முதல்வர் ஆகலாம் – பிரச்சார கூட்டத்தில் எடப்பாடி

நாளை நீங்கள் கூட முதல்வர் ஆகலாம் – பிரச்சார கூட்டத்தில் எடப்பாடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அதிமுகவின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- தமிழக வரலாற்றிலேயே 30 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை அமைத்தது அ.தி.மு.க. தான். மேடையில் அமர்ந்து இருப்பவர்கள் யாரும் தொழிலதிபர்கள் கிடையாது, சாமானியர்கள். எதிரிகள் கூட உச்சரிக்க கூடிய தலைவர்தான் எம்.ஜி.ஆர்.  எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கத்தை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கும் வாரிசு கிடையாது. அவர்களுக்கு நாம்தான் வாரிசு. அதிமுகவையும் ஆட்சியையும் விமர்சிப்பவர்கள் தங்கள் குடும்பத்திற்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். தொண்டர்கள் கூட முதல்வராக கூடிய ஒரே கட்சி அ.தி.ம...
முழு ஓய்வு மருத்துவர்கள் ரஜினிக்கு கட்டளை

முழு ஓய்வு மருத்துவர்கள் ரஜினிக்கு கட்டளை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  முழு ஓய்வு மருத்துவர்கள் ரஜினிக்கு கட்டளை நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்த போது அங்கே பணியாற்றிய சிலருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரஜினி உடனடியாக படப்பிடிப்பில் இருந்து ஓட்டல் திரும்பினார். பின்னர் ரஜினிக்கு வைரஸ் சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையில் திடீரென ரத்த அழுத்த பாதிப்பால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ரஜினி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்தின் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் அனைத்தும் வந்துவிட்டன என்றும் அவற்றில் கவலைப்படும்படி எதுவும் இல்லை என்றும் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை இன்று காலை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று மதியம் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்து அதன் பின்னர் அவரை டிஸ்சார்ஜ் செய்தார்கள். அவருக்கு ரத்த அழுத்தம்...
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அதிமுகவின் தேர்தல் பரப்புரை கூட்டம் சென்னையில் தொடங்கிய நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் ஒரே மேடையில் பங்கேற்றனர். ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அமைச்சர்கள், அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் என 94 இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளன....
திருவேலீஸ்வரர் ஆயத்தில் சனிப்பெயர்ச்சி விழா

திருவேலீஸ்வரர் ஆயத்தில் சனிப்பெயர்ச்சி விழா

HOME SLIDER, NEWS, செய்திகள்
    திருவேலீஸ்வரர் ஆயத்தில் சனிப்பெயர்ச்சி விழா நாமக்கல்  பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோயிலில் உள்ள சனீஸ்வரபகவானுக்கு சனிப்பெயர்ச்சி விழா, இன்று ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில் நடைபெற்றது. இந்த திருவேலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ சனீஸ்வரபகவான் தனி சன்னதிகொண்டு அனுக்கிரஹ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சனிப்பெயர்ச்சி இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும். இன்று டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி காலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியடைந்தார். இதையொட்டி,  இக்கோயிலில் ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு சிறப்பு யாகம், அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இந்த சனிப் பெயர்ச்சி பூஜை, ஆராதனைகளை ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்தனர்....
அரசு வாகனங்களில் பம்பர்களை கழற்ற உத்தரவு

அரசு வாகனங்களில் பம்பர்களை கழற்ற உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அரசு வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ‘கிராஸ் பார்’ (பம்பர்) கம்பிகளை உடனடியாக அகற்றவேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, முதல்-அமைச்சர் அலுவலகம், அனைத்து அமைச்சர்களின் சிறப்பு தனி உதவியாளர்கள், அனைத்து அரசு செயலாளர்கள், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர்கே.சண்முகம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- வாகனங்களில் ‘கிராஸ் பார்’(பம்பர்) என்ற கம்பிகளை அகற்றுவது தொடர்பாக கடந்த நவம்பர் 10-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அதில், ‘வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ‘கிராஸ் பார்’ கம்பிகளை அகற்றுவதற்கு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பாக மிக மிக முக்கியமானவர்கள் மற்றும் மிக முக்கிய நபர்கள் மற்றும் மற்ற வாகனங்களில் இந்த ‘கிராஸ் பார்’ கம்பிகளை அகற்றுவது குறித்து எட...
டிச., 28 முதல் தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

டிச., 28 முதல் தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  டிச., 28 முதல் தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு* சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் டிச., 28 முதல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்கள், நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிச., 29 மற்றும் 30ல் கடலூர், தஞ்சை, திருவாரூர் நாகப்பட்டிணம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  ...
கொடிகாத்த குமரனாய் மாறிய அமைச்சர் ஜெயக்குமார்!

கொடிகாத்த குமரனாய் மாறிய அமைச்சர் ஜெயக்குமார்!

NEWS
  அதிமுக கொடியை ஏந்தியபடி பைக்கில் வலம் வந்து நான்கு மணி நேரத்தில் 40 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்! எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அதிமுக சார்பில் வடசென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அன்னதானம் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என அமைச்சர் ஜெயக்குமார் ஏற்பாட்டின் பேரில் நிகழ்ச்சிகள் களைகட்டி இருந்தன. ஒரே நாளில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் பங்கேற்க முடியுமா என்ற சந்தேகம் கட்சி நிர்வாகிகள் பலருக்கும் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து காரில் வந்தால் சரிப்பட்டு வராது,நேரத்திற்கு செல்ல முடியாது, எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க முடியாது என்று எண்ணினார் அமைச்சர் ஜெயக்குமார். அதிரடியாக கட்சி நிர்வாகி ஒருவரது பைக்கில் அதிமுக கொடியை ஏந்தியபடி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தார். சென்னையின் பல்வேறு சாலைகளில் அமைச்சர் கொடியை ஏந்தியப...
103 கிலோ தங்கம் மாயம் – சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருட்டு வழக்கு பதிவு

103 கிலோ தங்கம் மாயம் – சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருட்டு வழக்கு பதிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தங்கம் மாயமான வழக்கு சூடு பிடித்துள்ளது. சென்னையில் கடந்த 2012-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் சுரானா நிறுவனத்தில் சோதனை நடத்தினர். இதில் 400.47 கிலோ தங்கம் சிக்கியது. சட்ட விரோதமாக தங்கத்தை இறக்குமதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்த நகைகளை சுரானா நிறுவனத்தில் லாக்கரில் வைத்திருந்தனர். இந்த நகைகளில் 103.86 கிலோ தங்கம் மாயமானது. அது எப்படி காணாமல் போனது என்பது தெரியவில்லை. இதுபற்றிய அதிர்ச்சி தகவல் சமீபத்தில்தான் தெரிய வந்தது. இதையடுத்து 103 கிலோ தங்கம் மாயமானது பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இ...
ரஜினியின் உடல் நிலை தொலைபேசியில் விசாரித்த மோகன்பாபு!

ரஜினியின் உடல் நிலை தொலைபேசியில் விசாரித்த மோகன்பாபு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரஜினியின் உடல் நிலை தொலைபேசியில் விசாரித்த மோகன்பாபு! உயர் ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத் ஜுப்ளிஹில்சில் உள்ள மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார். ரஜினிகாந்த், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தகவல் அறிந்ததும் அவரது நெருங்கிய நண்பரும், தெலுங்கு நடிகருமான மோகன்பாபு கடும் அதிர்ச்சி அடைந்தார் தற்போது திருப்பதியில் உள்ள மோகன்பாபு, ரஜினியின் உடல் நிலை குறித்து அவரது மனைவி லதா ரஜினிகந்த், மகள் ஐஸ்வர்யா ஆகியோரிடம் தொலைபேசியில் விசாரித்தார். “கவலைப்படும் படியாக எதுவும் இல்லை. சாதாரண ரத்த அழுத்தம் தான்” என அவர்கள் மோகன்பாபுவிடம் தெரிவித்துள்ளனர். இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த மோகன்பாபு, “ரஜினிகாந்த் உறுதியான மனமும், திடமான உடலும் கொண்டவர். விரைவில் பூரண குணம் அடைந்து ஷுட்டிங்கில் கலந்து கொள்வார்” என குறிப்பிட்டார்....