ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பிரதான கட்சிகள் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சூறாவளி பிரசாரத்தை தொடங்குகிறார். இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் தொடர்பாக நேற்று முன்தினம் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘அ.தி.மு.க.வை நிராகரிப்போம்’ என்ற பிரசார இயக்கத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தொடங்கிய முதல் 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதில் பதிவிட்டுள்ளனர். நாளை (புதன்கிழமை) முதல் 10 நாட்கள் தி.மு.க.வை சேர்ந்த 1,600 நிர்வாகிகள், 16 ஆயிரம் கிராமங்களில், கிராம சபை கூட்டத்தை நடத்த உள்ளனர். அதில், அ.தி.மு.க. அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்ட...
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிக அளவில் உள்ளன. இவற்றில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு முதல் இடம் பிடித்து உள்ளது அந்த நாடு. இதற்கிடையே கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்து கண்டறியப்பட்டது அந்நாட்டு மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு ஜனவரியில் அவர் பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில், அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் நியூவார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டு உள்ளது. அப்போது பேசிய அவர், மருந்து கிடைக்கும்பொழுது அதனை எடுத்துக் கொள்ளுங்கள் என நாட்டு மக்களை  வலியுறுத்தியுள்ளார்....
இளையராஜாவை அனுமதிக்க முடியாது – ஸ்டுடியோ நிர்வாகம்

இளையராஜாவை அனுமதிக்க முடியாது – ஸ்டுடியோ நிர்வாகம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் 1976-ம் ஆண்டு முதல் தனது படங்களுக்கு இசையமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில், பிரசாத் ஸ்டுடியோ இடத்தில் இருந்து இளையராஜா வெளியேற வேண்டும் என ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை 17-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தன் பொருட்களை எடுத்துக்கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் எனவும், தியானம் செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும் இளையராஜா வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இளையராஜாவை அனுமதிக்க முடியாது அவர் பிரதிநிதிகள் வந்து பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்றும் பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பொருட்களை எடுக்க வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிப்பதாகவும், அவருடன் இளையராஜா, பிரசாத் ...
சாதிவாரி விவரங்களை கேட்ட மனுவை தள்ளுபடி  செய்து பாமக ராமதாசுக்கு “கொட்டு” வைத்த கோர்ட்!

சாதிவாரி விவரங்களை கேட்ட மனுவை தள்ளுபடி செய்து பாமக ராமதாசுக்கு “கொட்டு” வைத்த கோர்ட்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சாதிவாரி விவரங்களை கேட்ட மனுவை தள்ளுபடி செய்து பாமக ராமதாசுக்கு "கொட்டு" வைத்த கோர்ட்! அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டோரின் சாதிவாரி, வகுப்புவாரி விவரங்களை வழங்க உத்தரவிடக் கோரிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பாமக தலைவர் ராமதாஸ் சார்பில், உயர்நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களின் சாதி வாரியாக கணக்கு குறித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில்,  1989ஆம் ஆண்டு முதல் இதுவரை பணிக்குத் தேர்வு செய்யப்பட்டோரின் விவரங்களைச் சாதி வாரியாக விவரம் வெளியிட   தமிழகஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் இன்று  விசாரணைக்கு வந்தது.  இதற்கு தமிழகஅரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், சட்டம் ஒழுங்...
வாக்குப்பதிவு இயந்திரங்களை முதற்கட்டப் பரிசோதனை சில குறைபாடுகளை தேர்தல் கமிஷனுக்கு சுட்டிக் காட்டிய திமுக

வாக்குப்பதிவு இயந்திரங்களை முதற்கட்டப் பரிசோதனை சில குறைபாடுகளை தேர்தல் கமிஷனுக்கு சுட்டிக் காட்டிய திமுக

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வாக்குப்பதிவு இயந்திரங்களை முதற்கட்டப் பரிசோதனை செய்வது தொடர்பான சில குறைபாடுகளை தேர்தல் கமிஷனுக்கு சுட்டிக் காட்டியுள்ளது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரத்தொடங்கியுள்ளன. இந்நிலையில், அவற்றை முதற்கட்டமாகப் பரிசோதனைகள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சில இடங்களில், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் இல்லாமலேயே அந்தப் பணி நடைபெற்றதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில்தான், இந்த விஷயத்தை தேர்தல் கமிஷனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது திமுக. இனிமேல் நடைபெறுகின்ற அனைத்துவித பரிசோதனைகளும் சரியான முறையில் நடைபெறுவதை தேர்தல் கமிஷன் உறுதிசெய்ய வேண்டுமென திமுக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. திமுக தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; உயர்சக்தி கொண்ட ஜேம்மர்க...
சச்சின் மகள் சாரா டெண்டுல்கர் சுப்மான் கில் கிசுகிசு!

சச்சின் மகள் சாரா டெண்டுல்கர் சுப்மான் கில் கிசுகிசு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  2020 ஐபிஎல் தொடரில் மும்பைக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையேயான ஆட்டத்தில் மும்பை வீரர் சூர்யாகுமார் யாதவ் அடித்த பந்து ஒன்றை டைவ் அடித்து பிடித்தார் சுப்மான் கில். இந்த நிகழ்வு அப்போது இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டதோ இல்லையோ இப்போது பேசப்படுகிறது. காரணம் சச்சின் மகள் சாரா தான். சச்சின் டெண்டுல்கர் அனைவராலும் பாராட்டப்படும் ஒரு மதிப்பு மிக்க வீரர். அவர் கிரிகெட் வாழ்கையில் எந்தவொரு சர்ச்சை, கிசுகிசுக்களிலும் வைரலானது இல்லை. ஆனால் அவரது மகள் சாரா டெண்டுல்கர் சச்சின் மகள் என்பதை தாண்டி கிசுகிசு மூலமே பிரபலமாகி வருகிறார். காரணம் அவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி சுப்மான் கில் புகைப்படத்தை பகிர்வது தான். ஐபிஎல் தொடரில் அவர் டைவ் அடித்து பிடித்த நிகழ்வை பகிர்ந்து ஹார்ட் போட்டு பகிர்ந்துள்ளார். குறிப்பாக சுப்மான் கில் மட்டும் இருக்கும் புகைப்படத்தை பகிர்வது, அதற்கு ஹார்டின் சிம்பல் கொ...
சட்டசபை தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தை தாண்டாது – பிரசாந்த் கிஷோர் சவால்

சட்டசபை தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தை தாண்டாது – பிரசாந்த் கிஷோர் சவால்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மேற்குவங்காள சட்டசபை தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தை தாண்டாது - பிரசாந்த் கிஷோர் மேற்குவங்காள மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் வர உள்ளது. இதற்காக  திரிணாமூல் காங்கிரசும், பா.ஜ.க.வும் வரிந்து கட்டி தேர்தல் வேலைகளில் இறங்கி உள்ளன. மேற்குவங்காள மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பெரிய அரசியல் தலைவராகக் கருதப்படும் சுவேந்து அதிகாரியை பா.ஜ.க.வுக்கு வரவேற்றார். அமித்ஷா கலந்துகொண்ட கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,எம்எல்ஏக்கள், அங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இது மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா,  மம்தா அரசின் மீது, மக்களுக்கு இருக்கும் கோபத்தின் வெளிப்பாடாக தான் பலர் பாஜகவில் இணைந்த வருகின்றனர். மாநிலத்தில் நிலவிவரும் அரசியல் வன்முறை, கடத்தல், ஊழல் மற்றும் வங்க தேசத்தின...
வாகன ஓட்டிகள் ஜனவரி 1 முதல்  இத செய்யாம போனா சிக்கல்தான்!

வாகன ஓட்டிகள் ஜனவரி 1 முதல் இத செய்யாம போனா சிக்கல்தான்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
வாகன ஓட்டிகள் ஜனவரி 1 முதல் இத செய்யாம போனா சிக்கல்தான்! ஓட்டுநர் உரிமம், ஆர்.சி போன்றவை ஜனவரி 1 முதல் புதுப்பிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம், உடற்பயிற்சி சான்றிதழ் மற்றும் பதிவு சான்றிதழ் போன்ற காலாவதியான வாகன ஆவணங்களை வைத்திருப்பவர்கள் விரைவில் புதுப்பிக்க வேண்டும். ஏனெனில் காலாவதியான ஆவணங்களை வைத்திருப்பவர்களுக்கு வழக்குகளில் இருந்து விலக்கு அளிப்பதற்கான நடவடிக்கை டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஒன்பது மாதங்களாக நடைமுறையில் உள்ள இந்த விலக்கு, நாட்டில் கொரோனா வைரஸால் பரவலால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது தற்போது டிசம்பர் 31ல் முடிவுக்கு வருகிறது. ஜனவரி 1, 2021 முதல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MORTH) இதை மேலும் நீட்டிக்க வழிமுறைகளை வழங்காவிட்டால் புதுபிக்காத ஆவணங்களை வைத்திருப்பவர்கள் மீது வழக்குகள் போடப்படும்....
முகக்கவசம் அணியாமல் ஒரு பெண்ணுடன் கடற்கரையில் செல்ஃபி எடுத்த ஜனாதிபதிக்கு அபராதம்!

முகக்கவசம் அணியாமல் ஒரு பெண்ணுடன் கடற்கரையில் செல்ஃபி எடுத்த ஜனாதிபதிக்கு அபராதம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
முகக்கவசம் அணியாமல் ஒரு பெண்ணுடன் கடற்கரையில் செல்ஃபி எடுத்த சிலி நாட்டின் ஜனாதிபதி செபாஸ்டியன் பினேராவுக்கு வெள்ளிக்கிழமை 3,500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. COVID-19 தொற்றுநோய் பரவும் இந்த வேளையில், ​​சிலி அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவதுகட்டாயம் என விதிகளை விதித்தது, மீறினால் தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருந்தது. இதனால் முகக்கவசம் அணியாத மக்களுக்கு அபராதங்களும், சிலருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் அந்நாட்டின் ஜனாதிபதி எடுத்த செல்பி டிசம்பர் தொடக்கத்தில் சமூக ஊடகங்களில் விரலாக பரவியது. அதன் பின்னர் அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார். சிலி கடலோர நகரமான கச்சுகுவா நகரில் உள்ள தனது வீட்டிற்கு அருகிலுள்ள கடற்கரையில் தனியாக நடந்து கொண்டிருந்ததாகவும் அப்போது ஒரு பெண் அவரை அடையாளம் கண்டு அவருடன் புகைப்படம் கேட்டதாகவும் பினெரா கூறினார...
எரிமலையின் வெப்பகுழம்பு வெளியேறியபோது இயற்கையின் அற்புதமான காட்சி!

எரிமலையின் வெப்பகுழம்பு வெளியேறியபோது இயற்கையின் அற்புதமான காட்சி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை சமீபத்தில் வெடித்தது. எரிமலையின் வாயிலிருந்து வெப்பகுழம்பு வெளியேறியபோது, ​​எரிமலையின் மேற்பரப்பிலிருந்து ஒரு மைல் தூரத்திற்கு மேல் சாம்பல் புகைகள் உயர்ந்தன. அப்போது, ​​மேற்பரப்புக்கு மேலே ஒரு மின்னல் புயல் உருவானது. இதன் விளைவாக இயற்கையின் ஒரு அற்புதமான காட்சி புகைப்படமாக பதிவாகியுள்ளது. சகுராஜிமா எரிமலையின் மினமிடேக் பள்ளத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருண்ட அடர்த்தியான புகை 3,000 மீட்டர் உயர்ந்துள்ளது. ராய்ட்டர்ஸ் புகைப்படக் கலைஞர் இந்த நிகழ்வைக் கைப்பற்றுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். சகுராஜிமா எரிமலை வீச்சு உலகின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலை தளங்களில் ஒன்றாகும். குறிப்பாக மின்னல் புயலுடன் இணைந்த வெடிப்புகள் இயற்கையின் மிக சக்திவாய்ந்த மோதல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மின்னல் எரிமலை மீது ...