கமல்ஹாசனுக்கு பின்னால் திமுக! – விஜயகாந்த் ஓப்பன் டாக்!
கூட்டணி ஆட்சிக்கு மட்டும் மு.க.ஸ்டாலின் 2016-ல் ஒத்து கொண்டிருந்தால் இன்று அவரும், நானும் அமைச்சர்களாக இருந்திருப்போம். 2016-ம் ஆண்டு எங்களுடன் கூட்டணி அமைத்தி ருந்தால் இப்போது மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்திருப்பார்.நல்ல ஒரு வாய்ப்பை ஸ்டாலின் இழந்து விட்டார். இனி அவரால் ஒரு போதும் முதல்வராகவே முடியாது என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டி இதோ:,
காவிரி விவகாரம் தொடர்பாக திமுக கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தேமுதிக ஏன் கலந்து கொள்வதில்லை?
ஸ்டாலினை மையப்படுத்தியே அனைத்தும் நடைபெறுகிறது. மற்ற அரசியல் கட்சிகளுக்கென்று தனி நிலைப்பாடு இருக்காதா? ஏன் அந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டு ஸ்டாலினை புகழ் பாட வேண்டும்? அவர் என்ன மு கருணாநிதியா? ஸ்டாலின் தன்னை கருணாநிதியாகவே கற்பனை செய்து கொள்கிற...









