ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அலகுத்தேர்வு!

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அலகுத்தேர்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அலகுத்தேர்வு! தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேசமயம், பிளஸ் 2 பொதுத்தேர்வை திட்டமிட்டபடி நடத்தி முடிக்க, பள்ளிக் கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் 12-ஆம் வகுப்பு மாணவர்களைப் பொதுத்தேர்வுக்குத் தயார்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் மூலம் அலகுத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வாட்ஸ் அப்பில் மாணவிகளுக்குத் தனியாகவும், மாணவர்களுக்குத் தனியாகவும் குழு ஏற்படுத்த வேண்டும். மாணவ மாணவிகளுக்குத் தனித்தனியாக உள்ள வாட்ஸ் அப்  குழுவில் வினாத்...
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி- திருப்பூரில் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி- திருப்பூரில் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி- திருப்பூரில் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்! தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்க உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைப்பார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட, சுகாதாரத்துறை சார்பில் ரூ.46 கோடி செலுத்தி, அதில் 9 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது என்றும், ஆட்டோ டிரைவர்கள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார். இந்நிலையில், 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை, முதலமைச்சர் ஸ்டாலின், திருப்பூரில் நாளை தொடங்கி வைக்க உள்ளார். பதிவு செய்யப்பட்டவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி போடப்படுகிறது. இதேபோல் பெருந்தொற்று காலத்தில் மக்கள் கூடுவ...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகை! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் இருந்து கார் மூலமாக கோவைக்கு நாளை காலை 11 மணிக்கு வருகிறார். பின்னர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் பங்கு பெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரி கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு அங்கு 250 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆலோசனை கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை கலை, அறிவியல் கல்லூரிக்கு செல்கிறார். அங்கு கொரேனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். பின்னர் அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்று மதிய உணவு முடித்த பின்னர் விமானம் மூலமாக சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சட்டம், ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரை கண்ணன் தலை...
கொரோனா நிவாரண நிதியாக இதுவரை ரூ.69 கோடி – தமிழக அரசு

கொரோனா நிவாரண நிதியாக இதுவரை ரூ.69 கோடி – தமிழக அரசு

HOME SLIDER, NEWS, politics
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை காரணமாகவும் முதல்வர் நிவாரண நிதிக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொழில் அதிபர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதி அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.69 கோடி பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது அதன்படி, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மே 17-ந்தேதி வரை இணையதளம் வழியாக ரூ.29.44 கோடி, நேரடியாக ரூ.39.56 கோடி என மொத்தம் ரூ.69 கோடி நன்கொடையாக வந்துள்ளது கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ள நன்கொடையில் இருந்து கொரோனா சிகிச்சைக்கு நிதி ஒதுக்க மு...
உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு தினந்தோறும் உணவு வழங்கும் யோகிபாபு பட தயாரிப்பாளர்!

உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு தினந்தோறும் உணவு வழங்கும் யோகிபாபு பட தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு தினந்தோறும் உணவு வழங்கும் யோகிபாபு பட தயாரிப்பாளர்! கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு டிஸ்கவர் ஸ்டூடியோ பிலிம் கம்பெனி எனும் தயாரிப்பு நிறுவனம் உதவி வருகிறது. இந்நிறுவனம், தற்போது தினேஷ் மாஸ்டர் மற்றும் யோகிபாபு நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறது. எஸ்.பி.ராஜ்குமார் இப்படத்தை இயக்குகிறார். சென்னையில் ரோட்டோரம் உணவின்றி தவிக்கும் 100 ஏழைகளுக்கு பார்சலில் உணவு மற்றும் ஜூஸ் வழங்கி வருகின்றனர். டிஸ்கவர் ஸ்டூடியோ பிலிம் கம்பெனி எனும் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் இசையமைப்பாளர் வி.ஆர்.ராஜேஷின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன....
இ-பதிவு பெறுவதற்கான காரணங்களில் திருமணமும் சேர்ப்பு!

இ-பதிவு பெறுவதற்கான காரணங்களில் திருமணமும் சேர்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இ-பதிவு பெறுவதற்கான காரணங்களில் திருமணமும் சேர்ப்பு! தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றாலும் அவசர பயணத்துக்காக இ-பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இ-பதிவு முறை நேற்று முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் இ-பதிவு பெறாமல் யாராவது வாகனங்களில் வெளியில் சுற்றினால் அவர்களது வாகனங்கள் கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இ-பதிவு முறையில் ஏராளமானோர் திருமணத்திற்காக பயணிப்பதால் அந்த காரணம் நீக்கப்பட்டிருந்தது. தற்போது உரிய ஆவணங்களுடன் இ-பதிவு முறையில் திருமணத்திற்காக பயணிக்க...
அரசு கொடுத்த ரூ.2,000 பணத்தை முதல்வர் நிதிக்கு அனுப்பிய மூதாட்டி!

அரசு கொடுத்த ரூ.2,000 பணத்தை முதல்வர் நிதிக்கு அனுப்பிய மூதாட்டி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அரசு கொடுத்த ரூ.2,000 பணத்தை முதல்வர் நிதிக்கு அனுப்பிய மூதாட்டி! தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகிறது. அந்தந்த ரேசன் கடைகள் மூலம் கடந்த 15-ந் தேதி முதல் இந்த நிதி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை காரணமாகவும் முதல்வர் நிவாரண நிதிக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதி அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சுக்காங்கால்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி மனைவி ரத்தினம்மாள் (வயது 74) என்பவர் தங்களுக்கு அரசு கொடுத்த ரூ.2 ஆயிரம் பணத்தை முதல்வ...
பிரபஞ்ச அழகியாக மெக்சிகோ பெண் தேர்வு!

பிரபஞ்ச அழகியாக மெக்சிகோ பெண் தேர்வு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
பிரபஞ்ச அழகியாக மெக்சிகோ பெண் தேர்வு! 69-வது பிரபஞ்ச அழகிப் போட்டி புளோரிடாவில் ஹாலிவுட் அரங்கில் உள்ள ராக் ஹோட்டல் அண்ட் கேஸினோவில் நடந்தது. கொரோனா வைரஸ் பரவல் இருப்பதால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மிகுந்த பாதுகாப்புடன் அழகிப் போட்டி நடத்தப்பட்டது. 74 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். இதில் மெக்சிகோ நாட்டின் 26 வயதான ஆண்ட்ரியா மெஸாவும், பிரேசிலின் ஜூலியா காமாவும் (28) இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். இதில் பிரபஞ்ச அழகியாக ஆண்ட்ரியா மெஸா அறிவிக்கப்பட்டார். கடந்த ஆண்டின் பிரபஞ்ச அழகியான தென் ஆப்பிரிக்காவின் ஜோஜிபினி டுன்ஸி, இந்த ஆண்டின் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டவரின் பெயரை அறிவித்தார். தனது பெயர் அறிவிக்கப்பட்டவுடன் ஆண்ட்ரியா மெஸா மகிழ்ச்சியில் உற்சாகக் குரலிட்டார். கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. பின்னர் மெஸாவுக்கு மிஸ் யு...
கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதி

கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதி

HOME SLIDER, NEWS, நடிகர்கள்
கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதி தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர். முன்னதாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கி இருந்தனர் இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.50 லட்சம் வழங்கி உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நிதியுத...
இஸ்ரேலுக்கு எதிராக அணி திரளும் இஸ்லாமிய நாடுகள்!

இஸ்ரேலுக்கு எதிராக அணி திரளும் இஸ்லாமிய நாடுகள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
இஸ்ரேலுக்கு எதிராக அணி திரளும் இஸ்லாமிய நாடுகள்! கிழக்கு ஜெருசலேமில், அல்-அக்ஸா மசூதியில், இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேலிய காவல் துறை மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதை அடுத்து காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் ஜெருசலேம் நோக்கி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை  வீசியது. ஆனால், இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பான Iron Dome மூலம் இவை தடுத்து நிறுத்தப்பட்டதால், பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. சனிக்கிழமையன்று, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் காசா (Gaza) பகுதியில், இருந்த அல்ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் மற்றும் பிற செய்தி ஊடகங்களின் அலுவலகங்கள் இருந்த மிகப்பெரிய கட்டிடம் தகர்க்கப்பட்டது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான மோதல்கள் தொடர்ந்து இரு வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) அனை...