ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

கொரோனா நிவாரண நிதி 2வது தவணை – முதல்வர் ஸ்டாலின் ஜூன் 3ல் தொடங்கி வைக்கிறார்!

கொரோனா நிவாரண நிதி 2வது தவணை – முதல்வர் ஸ்டாலின் ஜூன் 3ல் தொடங்கி வைக்கிறார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா நிவாரண நிதி 2வது தவணை - முதல்வர் ஸ்டாலின் ஜூன் 3ல் தொடங்கி வைக்கிறார்! தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 10-ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. பால், மருந்து பொருட்கள் மற்றும் குடிநீர் ஆகியவை தவிர வேறு எந்த விநியோகத்திற்கும் அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த மாதம் முதல் தவணையாக ரூ.2000 ரேஷன் கடைகளில் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா நிவாரண நிதியின் 2-வது தவணை ஜூன் 3ம் தேதி வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங...
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்!

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்! 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மதித்து வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு இதுவரை முன்வரவில்லை * வேளாண் சட்டங்களை திரும்பப்பெற தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். * 6 மாத காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்னும் தீர்வு ஏற்படவில்லை. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார். விவசாயிகளின் இன்றைய நாடு தழுவிய போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற சட்டசபையில் தீர்மானம்...
பத்மா சேஷாத்ரி பள்ளியா? பள்ளியறையா?? முட்டு கொடுப்பவர்கள் முன்னுக்கு வரவும்!

பத்மா சேஷாத்ரி பள்ளியா? பள்ளியறையா?? முட்டு கொடுப்பவர்கள் முன்னுக்கு வரவும்!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
பத்மா சேஷாத்ரி பள்ளியா? பள்ளியறையா?? முட்டு கொடுப்பவர்கள் முன்னுக்கு வரவும்! https://youtu.be/PWUcxb52fl0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை! கொரோனா 2-வது அலை பரவல் தமிழகத்தையே ஆட்டிவைத்து கொண்டிருக்கிறது. தடுப்பூசி போடும் பணிகளும், தடுப்பு நடவடிக்கைகளும் என அரசு ஒருபுறம் நடவடிக்கைகளை கையாண்டாலும், கொரோனா பரவல் தீவிரம் குறைந்தபாடில்லை. இரவு நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு, கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு என பல கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் கொரோனா வீரியத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையே இருக்கிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் ஒருவார காலம் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்தார். ஊரடங்கையொட்டி பொதுமக்கள் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள ஏதுவாக 2 நாட்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கடைகள் திறக்கப்பட்டன. மக்களும் தேவையான பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டனர். அந்தவகையில் தமிழகம் முழுவதும் ஒருவார கால தள...
கடந்த 5 ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட பத்மாசேஷாத்திரி  பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன்! 

கடந்த 5 ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட பத்மாசேஷாத்திரி  பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன்! 

HOME SLIDER, NEWS, செய்திகள்
கடந்த 5 ஆண்டுகளாக 11,12-ம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட பத்மாசேஷாத்திரி  பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன்! சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபல பள்ளியான  பத்மாசேஷாத்திரி  பள்ளி  மாணவிகளுக்கு வணிவியல் ஆசிரியர் ராஜகோபாலன்  பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், ஆன்லைன் வகுப்பு எடுக்கும்போது, அரை நிர்வாணமாக காட்சி அளித்து, பாலியல் ரீதியிலான சேட்டை செய்ததாகவும், பள்ளி மாணவிகள் பலர் புகார் தெரிவித்துள்ளனர். ஆசிரியர் அந்த  ராஜகோபாலன் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இவர் மீது முன்னாள் மாணவர்கள் பலர் புகார் அளித்துள்ளனர். அதாவது ஆசிரியர் ராஜகோபாலன், பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் , மாணவர்களுக்கு ஆபாச படங்களின் இணையதள பக்கங்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் அவர்கள் தங்கள் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். இந்த விவகாரம் பெரும...
தமிழகம் முழுவதும் 4,380 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை- தமிழக அரசு ஏற்பாடு!

தமிழகம் முழுவதும் 4,380 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை- தமிழக அரசு ஏற்பாடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகம் முழுவதும் 4,380 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை- தமிழக அரசு ஏற்பாடு! இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையொட்டி கடந்த 2 நாட்களாக அனைத்து கடைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டது. மக்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக இந்த தளர்வு வழங்கப்பட்டது. ஏராளமானோர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். என்றாலும் காய்கறி, பழம் ஆகியவை மக்களின் அன்றாட தேவைக்கு மிகவும் அவசியமாகும். எனவே அவற்றை அரசு மூலம் வாகனங்களில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு வார காலம் நடமாடும் வாகனங்கள் மூலம் நாள்தோறும் வீதி வீதியாக வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. வீதி, வீதியாக சென்று வீடுகளிலேயே இவை விற்பனை செய்யப்படுகின்றன. வேளாண் துறை சார்பில் தோட்டக்கலையினர் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவர...
தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு அமலுக்கு வந்தது!

தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு அமலுக்கு வந்தது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு அமலுக்கு வந்தது! தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், சட்டமன்ற குழு உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களை கலந்து பேசி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து மக்கள் நடமாட்டத்தை குறைக்க தமிழகத்தில் படிப்படியாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆரம்பத்தில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை...
தடுப்பூசி உற்பத்தியை தடுத்து நாட்டின் சுகாதாரத்துறையை நாசமாக்கியது பாமகவின் அன்புமணி ராமதாஸ்… ஷாக் ஆகாம தொடர்ந்து படிங்க…

தடுப்பூசி உற்பத்தியை தடுத்து நாட்டின் சுகாதாரத்துறையை நாசமாக்கியது பாமகவின் அன்புமணி ராமதாஸ்… ஷாக் ஆகாம தொடர்ந்து படிங்க…

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தடுப்பூசி உற்பத்தியை தடுத்து நாட்டின் சுகாதாரத்துறையை நாசமாக்கியது பாமகவின் அன்புமணி ராமதாஸ்... ஷாக் ஆகாம தொடர்ந்து படிங்க... 138 கோடி மக்கள் வாழக்கூடிய இந்தியா,  கொரோனாவை சமாளிக்க தனியார் நிறுவனங்களின் தயவை எதிர்பார்த்து காத்து, விழி பிதுங்கி  நிற்கிறது. இந்தியாவில் அரசின் பொதுத் துறை தடுப்பூசி தன்னிறைவு குலைந்தழிந்து போனதற்கு முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர்  அன்புமணியே காரணம்! – ஆங்கில பத்திரிகை அம்பலப்படுத்துகிறது! ‘’தடுப்பூசி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாகத் திகழ்ந்த நமது இந்தியா இன்று இரண்டு தனியார் நிறுவனத்தின் தயவை நம்பி இருப்பது ஏன்?’’ என்ற கேள்வி இன்று அனைவர் மனதிலும் எழுகிறது! மே 8 ஆம் தேதி ஒரு பொது நல வழக்கில் இந்த கேள்வி மதுரை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளால் எழுப்பப் பட்டது. இந்த கேள்வி நம்மை போன்ற பொதுமக்களுக்கு நாளும் மனதில் உறுத்திக் கொண்டு இருந்தது தா...
பேமிலிமேன் 2 வெப் தொடருக்கு சீமான் எதிர்ப்பு !

பேமிலிமேன் 2 வெப் தொடருக்கு சீமான் எதிர்ப்பு !

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பேமிலிமேன் 2 வெப் தொடருக்கு சீமான் எதிர்ப்பு ! சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் வெப் தொடர் ‘தி பேமிலிமேன் 2’. இந்த தொடர் வரும் ஜூன் மாதம் நான்காம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த தொடரின் டிரைலர் வெளியானது. இந்த டிரைலர் மாபெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருந்தாலும் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரை வெளியிடக்கூடாது என்று கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தத் வெப்தொடரை வெளியிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். இந்த நிலையில் சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் ’அமைதியாக இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள்’ என்று பதிவு செய்து மார்ட்டின் லூதர் கிங்கின் பொன்மொழியான ’முழுப்பாதையும் தென்படாவிட்டாலும் முதலடியை எட...