ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதித்த சீனா!

மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதித்த சீனா!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள சீனா அனுமதித்துள்ளது. சீனாவில், கடந்த 1979 ஆம் ஆண்டு முதல், தம்பதிகள், ஒரு குழந்தையை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும் என்ற கொள்கை நடைமுறையானது. இந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டில் அந்தக் கொள்கையில் திருத்தம் கொண்டுவந்த சீன அரசாங்கம், தம்பதிகள் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதியளித்தது. எவ்வாறிருப்பினும், சீனாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளில், பிறப்பு வீதம் செங்குததான சரிவைக் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வருடாந்த பிறப்புகள் 2020 ஆம் ஆண்டில், தொடர்ந்து 12 மில்லியனாக குறைந்துள்ளதாக தேசிய புள்ளிவிவர பணியகம் கடந்த மாதம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதித்து சீன அரசாங்கம் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன....
டுவிட்டருக்கு தடை..!

டுவிட்டருக்கு தடை..!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த நாட்டு ஜனாதிபதி மொஹமட் புஹாரி அண்மையில் டுவிட்டரில் பதிவிட்ட கருத்து நீக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொஹமட் புஹாரிக்கு எதிராக நைஜீரியாவின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. இந்நிலையில் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தூண்டுவது போன்று அவர் பதிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தங்களது விதிகளை மீறும் வகையில் அவர் கருத்து வெளியிட்டதாக அறிவித்த டுவிட்டர் அவரது பதிவையும் நீக்கியது. இந்நிலையில் காலவரையன்றி அந்நாட்டில் டுவிட்டர் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது...
மீண்டும் வருகிறது சூப்பர்சோனிக் விமானம்!

மீண்டும் வருகிறது சூப்பர்சோனிக் விமானம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
மீண்டும் வருகிறது சூப்பர்சோனிக் விமானம் ஒலியைவிட வேகமாக செல்லக்கூடிய சூப்பர்சோனிக் விமானங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இறங்கி உள்ளது. இதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த பூம் நிறுவனத்திடம் இருந்து முதற்கட்டமாக 15 புதிய சூப்பர்சோனிக் பயணிகள் விமானங்களை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ள யுனைடெட் ஏர்லைன்ஸ், 2029ம் ஆண்டு விமானம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில் அட்லாண்டிக் வழித்தடத்தில் பயணித்தால் பயண நேரம் பாதியாக குறையும். உதாரணமாக, லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு 3.5 மணி நேரத்தில் செல்ல முடியும். யுனைடெட் நிறுவனத்தின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி விமானங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் விமான சேவையில் 1976ம் ஆண்டு நுழைந்த கா...
கம்போடியாவில் பணியிலிருந்து ஓய்வுபெற்ற ராட்சத எலி!

கம்போடியாவில் பணியிலிருந்து ஓய்வுபெற்ற ராட்சத எலி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  கம்போடியாவில் பணியிலிருந்து ஓய்வுபெற்ற ராட்சத எலி கம்போடியாவில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க 7 வயதான ஆப்பிரிக்க எலி பயிற்சி பெற்று இருந்தது. இதன் மூலம் 2 லட்சத்து 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் வெடிகுண்டுகளை நுகர்ந்து கண்டுபிடிக்கும் திறன்கொண்டது. தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட இந்த எலியானது, கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப்போல, உருவத்தில் சிறியதாக இருந்தாலும், இதுவரை 71 கண்ணி வெடிகளைக் கண்டு பிடித்து பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. இதனால், மகவாவிற்கு கடந்த வருடம் தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஏராளமான கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து பலரின் உயிரைக் காப்பாற்றி, கம்போடியாவின் நாயகனாக வலம் வந்த ஆப்பிரிக்க ராட்சத எலி "மகவா" தன் பணியிலிருந்து ஓய்வுபெற்றது....
கோர்ட்டு தீர்ப்புக்காக காத்திருக்கும் கமல்ஹாசன்!

கோர்ட்டு தீர்ப்புக்காக காத்திருக்கும் கமல்ஹாசன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கோர்ட்டு தீர்ப்புக்காக காத்திருக்கும் கமல்ஹாசன்! கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் பாதியில் நிற்கும் நிலையில் இயக்குனர் ஷங்கர் தெலுங்கிலும், இந்தியிலும் படங்கள் இயக்க தயாராகி உள்ளார். இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கும்படி தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டுக்கு சென்றுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்கவும் கமல்ஹாசன் ஒப்பந்தமாகி உள்ளார். ஊரடங்கு முடிந்ததும் இதன் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர். ஆனால் இந்தியன் 2 வழக்கு இதற்கு தடையாக உள்ளது. இந்தியன் 2 படத்தை முடித்து விட்டுத்தான் ஷங்கர் வேறு படங்களை இயக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தால் விக்ரம் படப்பிடிப்பு தள்ளிப்போகும் என்று தெரிகிறது. அதே நேரம் ஷங்கருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் இந்தியன் 2 படத்தை தள்ளி வைத்துவிட்டு விக்ரம் படத்தில் கமல் நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவ...
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு! தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7-ந்தேதி அதிகாலை வரை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14-ந்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது....
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை! தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வருகிற 7-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கால் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், சுகாதாரச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்....
கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம்-மளிகை பொருட்கள் தொகுப்பு: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம்-மளிகை பொருட்கள் தொகுப்பு: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம்-மளிகை பொருட்கள் தொகுப்பு: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்! முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின்   தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக கூறி இருந்தார். அதில் கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் முக்கியமான திட்டமாகும். அதன்படி  மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக மே 7-ந்தேதி பதவி ஏற்றதும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்திட்டார். இதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டார். அதன்படி கடந்த மாதம் ரே‌ஷன் கடைகளில் 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ரூ.2 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்பட்டது. 2-வது கட்டமாக கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை கருணாநிதி பிறந்த நாளான இன்று (வியாழக்கிழமை) சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் ம...
கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, கனிமொழி, சேகர்பாபு, உதயிநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து மாவட்டந்தோறும் 1,000 மரக்கன்றுகள் வீதம் 38,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்...
முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனு தாக்கல்!

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனு தாக்கல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, Photos, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர் சாந்தினி. நாடோடிகள் சினிமா படத்தில் நடித்துள்ளார். மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொன்னார். 5 வருடங்கள் நானும், அவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன். அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன். இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார், என்று தெரிவித்து இருந்தார். இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த புகாரை மணிகண்டன் மறுத்து பேட்டி கொடுத்தார். நடிகை சாந்தினி யார், என்றே எனக்கு தெரியாது என்று கூறினார். பணம் பறிக்கும் கும்பல் பின்னணியில் இந்த பொய்யான புகார் கொடுக்...