மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!
நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுநீரக கல் பிரச்சனைக்காக மன்சூர் அலிகானுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 ரொக்கப்பணம் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த 7-ந்தேதி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டார்.
அவர் பதவி ஏற்றதும் முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதி உதவி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார். கொரோனா பாதிப்பால் மக்கள் சிரமப்படும் இந்த சூழலில் ரூ.4 ஆயிரத்தில் இந்த மாதமே முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் வகையில் ஆணை பிறப்பித்தார்.
இதைத்யொட்டி அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டது.
இதைதொடர்ந்து ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச...
இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் மரணம்!
இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன், நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவாராக விளங்கினார். இவரது மூத்த மகன் வெங்கட் பிரபு, வெற்றிகரமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம்வருகிறார். இளையமகன் பிரேம்ஜி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில், கங்கை அமரனின் மனைவியும், வெங்கட் பிரபு, பிரேம்ஜியின் தாயாருமான மணிமேகலை நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 69. உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றிரவு 11:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்....
முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது- பஸ்கள் ஓடவில்லை, கடைகள் அடைப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
இதையடுத்து புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார்.
அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு கடை பிடிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களும் (சனி, ஞாயிறு) அனைத்து கடைகளையும் திறந்துவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. வருகிற 24-ந்தேதி வரை 2 வாரங்களுக்கு இந்த ஊரடங்கு கடை பிடிக்கப்படும். முழு ஊரடங்கு காரணமாக இன்று பஸ், கார், ஆட்டோக்கள் ஓடவில்லை.
அரசு துறைகளில் மின்சாரம், குடிநீர், உள்ளாட்சி துறை உள்ளிட்ட முக்...
தமிழக முதல்- அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் 11-ந் தேதி தொடங்குகிறது!
தமிழக முதல்- அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் நாளை மறுநாள் (11-ந் தேதி) சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
இதில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் புதிய எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த கூட்டத்தொடரிலேயே சபாநாயகர், துணை சபாநாயகருக்கான தேர்தல்களும் நடைபெறுகின்றன.
இதுதொடர்பாக தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது.
ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கலைவாணர் அரங்கில் 3-வது தளத்தில் உள்ள பல்வகை கூட்ட அரங்கில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
அப்போது இந்திய அரசமைப்பின் கீழ் உறுப்பினர்கள் உறுதி...
சித்தப்பா இரும்பு மனிதர்... ரம்யா பாண்டியன்!
நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் தற்போது அவருடைய மகள் கவிதா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் தனது தந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு மட்டுமின்றி இதயத்திலும் பிரச்சனை இருந்தது என்றும் இதய குழாய்களில் இரண்டு அடைப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் தற்போது நலமாக இருப்பதாகவும் பதிவு செய்திருந்தார்.
இதனை அடுத்து அருண்பாண்டியன் விரைவில் நலம் பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கவிதா பாண்டியனின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவுக்கு கமெண்ட் செய்துள்ள பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன், ’சித்தப்பா ஒரு இரும்பு மனிதர், அவரை யாராலும் எதுவும் அசைக்க முடியாது. ...
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!
தமிழக சட்டமன்ற தேர்தலில் 159 இடங்களைக் கைப்பற்றி தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. நேற்று முன்தினம் கவர்னர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் 33 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
இதையடுத்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் ஒரே நாளில் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இதைத்தொடர்ந்து பதவியேற்ற முதல் நாளே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
மேலும், மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது. காய்கறி, மளிகை கடைகள், பால் கடைகள் ஆகியன மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்ட...
உச்சநீதிமன்ற ஆணையின் அடிப்படையில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்குங்கள்
மாண்புமிகு தமிழக முதல்வருக்கு ரவிக்குமார் எம்.பி வேண்டுகோள்
முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பின்வருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்:
“ கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவெங்கிலுமுள்ள சிறைகளில் இருக்கும் சிறைவாசிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து உச்சநீதிமன்றம் தானே முன்வந்து கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்தது (Suo Motu writ Petition ( C ) No.1 /2020). நேற்று (07.05.2021) அவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முக்கியமான சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின் நான்காவது அம்சமாக, ”ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் பரோல் வழங்கப்பட்ட சிறைவாசிகளுக்கு மேலும் 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“we dire...
செப்டம்பர் மாதத்தில் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்த இலங்கை விருப்பம்!
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொரோனா பாதிப்பு காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜாவில் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடந்தது.
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி கடந்த மாதம் 9-ந்தேதி தொடங்கியது. சென்னை, மும்பையில் போட்டி முடிந்த நிலையில் டெல்லி, அகமதாபாத்தில் ஆட்டங்கள் நடைபெற்று கொண்டு இருக்கும்போது 4 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் (கொல்கத்தா), விருத்திமான் சகா (ஐதராபாத்), அமித் மிஸ்ரா (டெல்லி), ஆகியோருக்கு பாதிப்பு இருந்தது. அதோடு சி.எஸ்.கே. அணியை சேர்ந்த பயிற்சியாளர்கள் எல்.பாலாஜி, மைக் ஹஸ்சி ஆகியோருக்கும் தொற்று உறுதியானது.
இதனால் கிரிக்கெட...
என்னைத் தவிர வீட்டில் அனைவருக்கும் கொரோனா... பிரபல நடிகை வருத்தம்!
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் குடும்பத்தினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.
இதுகுறித்து ஷில்பா ஷெட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது: என்னுடைய பெற்றோர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் என்னுடைய கணவர் உள்பட எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி எங்கள் வீட்டில் பணிபுரியும் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.
ஆனால் அதே நேரத்தில் கடவுளின் அருளால் எனக்கு மட்டும் கொரோனா வைரஸ் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. எங்கள் வீட்டில் ...