ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

முதல்வர் ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் எம்பி திடீர் கோரிக்கை!

 

உச்சநீதிமன்ற ஆணையின் அடிப்படையில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்குங்கள்

மாண்புமிகு தமிழக முதல்வருக்கு ரவிக்குமார் எம்.பி வேண்டுகோள்

முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பின்வருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்:

“ கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவெங்கிலுமுள்ள சிறைகளில் இருக்கும் சிறைவாசிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து உச்சநீதிமன்றம் தானே முன்வந்து கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்தது (Suo Motu writ Petition ( C ) No.1 /2020). நேற்று (07.05.2021) அவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முக்கியமான சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின் நான்காவது அம்சமாக, ”ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் பரோல் வழங்கப்பட்ட சிறைவாசிகளுக்கு மேலும் 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“we direct that, those inmates who were granted parole, pursuant to our earlier orders, should be again granted a parole for a period of 90 days in order to tide over the pandemic”
என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

2020 நவம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றத்தால் பரோல், வழங்கப்பட்டு தற்போது புழல் சிறையில் இருக்கும் பேரறிவாளன் சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். இணைநோய்களின் ( co morbidities) காரணமாக கொரோனா தொற்று ஏற்பட்டால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சிறை மருத்துவரும் சான்றளித்துள்ளார். எனவே, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்கிட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். “
– அறிஞர் ரவிக்குமார்MP

437 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன