19 தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவிக்கு அறிவாலயத்தில் இன்று மனுதாக்கல் !
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.முக. மாவட்டச் செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
அங்கு மோதல் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க.வில் 5 ஆண்டுக்கு ஒருமுறை உட்கட்சி தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி கிளைக் கழகம் முதல் பேரூர், நகரம், ஒன்றியம், மாநகரம், வட்டம், பகுதி என பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதன் அடுத்த கட்டமாக மாவட்டக்கழக செய லாளர்கள் பதவிக்கு இப்போது தேர்தல் நடத்தப்படுகிறது. தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன.
இதில் மாவட்ட செயலாளர் பதவிதான் அதிகாரம் மிக்க உயர்ந்த பதவியாகும். இந்த பதவியை கைப்பற்ற ஒவ்வொரு மாவட்டத்திலும் கடும் போட்டி உள்ளது.
ஆனாலும் கட்சித் தலைமை யாரை விரும்புகிறதோ அவர்களுக்குத்தான் மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும்.
இதற்காக கடந்த 2 நாட்களாக அண்ணா அறிவாலயத்தில் ஒவ...









