ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

அண்ணா பிறந்த நாள்: நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் கைதிகள் விடுதலை- அரசாணை வெளியீடு!

அண்ணா பிறந்த நாள்: நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் கைதிகள் விடுதலை- அரசாணை வெளியீடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அண்ணா பிறந்த நாள்: நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் கைதிகள் விடுதலை- அரசாணை வெளியீடு! தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் கைதிகள் நல்லெண்ண அடிப்படையில் அண்ணா பிறந்த நாளையொட்டி விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டு இருந்தார். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- சிறை கைதிகளின் முன் விடுதலை தொடர்பான சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாளையொட்டி (வருகிற (2022-ம் ஆண்டு) செப்டம்பர் 15-ந்தேதி) நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் ...
நீதிபதி அனுமதியளித்தும் வீட்டுக்குள் போக மறுத்த நடிகர் மன்சூரலிகான்!

நீதிபதி அனுமதியளித்தும் வீட்டுக்குள் போக மறுத்த நடிகர் மன்சூரலிகான்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நீதிபதி அனுமதியளித்தும் வீட்டுக்குள் போக மறுத்த நடிகர் மன்சூரலிகான்! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான மன்சூரலிகான், பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு அறப்போட்டங்கள் மூலமாகவும், சட்ட ரீதியிலும் தீர்வு கண்டு வருகிறார். இந்த நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள நடிகர் மன்சூரலிகானின் வீடு, அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்டதாக கூறி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு, தனது வீட்டில் மாட்டிக்கொண்ட தான் வளர்க்கும் பூனையை மீட்பதற்காக வீட்டை திறக்க வேண்டும், என்ற கோரிக்கையும் வைத்தார். வெளிநாட்டை சேர்ந்த மன்சூரலிகானின் செல்ல பூனை அந்த வீட்டுக்குள் சிக்கிக்கொண்டு சுமார் ஒரு மாதம் ஆன நிலையில், சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி, பூனையை மீட்பதற்காக 1 மணி நேரம் மட்டும் வீட்டை திறந்துவிடுமாறு உத்தரவிட்டார். ஆனால், பூனை ஒரு மாதமாக உணவு இன்றி உயிரிழந்ததா...
திரைத்துறை முற்றிலும் அழிந்துவிடும் முதல்வருக்கு சிம்பு பட தயாரிப்பாளர் வேண்டுகோள்

திரைத்துறை முற்றிலும் அழிந்துவிடும் முதல்வருக்கு சிம்பு பட தயாரிப்பாளர் வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். திரைத்துறை வெகுநாட்களாக நலிந்துவிட்டது. படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் முறை பிறந்ததிலிருந்து திரையரங்கங்கள் வெறிச்சோடத் துவங்கிவிட்டன. அதிலிருந்து மீண்டுவர பெரிய படங்களே உதவுகின்றன. அண்ணாத்தே மக்களை திரையரங்கிற்கு வரவைத்தது. அம்பது விழுக்காடு இருக்கை ஆக்ரமிப்பு என்ற நிலையை மாற்றி நூறு சதவீத இருக்கை ஆக்ரமிப்பை தந்தது திரைத் துறையினருக்கு நெஞ்சில் பால் வார்த்தது. அனைவரும் தங்களின் அனுமதியை தொழில் செய்யும் வெகுமதியாகப் பார்த்தோம் நன்றியோடு! ஆனால், இப்போது வேக்சினேசன் செலுத்தினால் மட்டுமே திரையரங்க அனுமதி என்பது அத்தனை திரைத்துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுக்க தடுப்பூசி இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை. பதினெட்டு வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கு இன்னும் தடுப்பூசியே கண்டுபிடிக்கவில்லை. அவர்கள...
சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு- அரசாணை வெளியீடு!

சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு- அரசாணை வெளியீடு!

HOME SLIDER, NEWS, politics, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு- அரசாணை வெளியீடு! தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பணியிடங்களில் சிறந்த சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டசபையில் அரசு அறிவித்தது. சிலம்பம் விளையாட்டை 3 சதவீத விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தேசிய மற்றும் மாநில அளவில் சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இந்த இட ஒதுக்கீடு பெற தகுதியானவர்கள். மத்திய அரசின் புதிய கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் சிலம்பம் விளையாட்டு சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது....
சினேகாவை ஏமாற்றிய ஏற்றுமதி நிறுவனம் – போலீசில் புகார்!

சினேகாவை ஏமாற்றிய ஏற்றுமதி நிறுவனம் – போலீசில் புகார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
சினேகாவை ஏமாற்றிய ஏற்றுமதி நிறுவனம் - போலீசில் புகார்! நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்து புகழ் பெற்றவர். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு பிரசன்னாவுடன் நடித்தபோது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இருவருக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளது. திருமணத்திற்கு பின்னரும் இருவரும் திரைப்படங்கள் மற்றும் விளம்பரப்படங்களிலும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை சினேகா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தனியார் நிறுவனம் தங்கள் நிறுவனத்துக்கு பெரும் தொகையை பங்காக கொடுத்தால் மாதம் குறிப்பிட்ட சதவீதம் லாபம் தருவதாக ஆசைக்காட்டியதன் பேரில் ஆன்லைன் மூலம் ரூ.25 லட்சமும், நேரில் ரூ.1 லட்சமும் கொடுத்ததாகவும் இதற்காக மாசம் ரூ.1.80 லட்சம் லாபம் தருவதாக அவர...
வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது… சூர்யா!

வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது… சூர்யா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது... சூர்யா! த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அது தொடர்பான அறிக்கையை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக 'ஜெய் பீம்' படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரி வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் மூலம் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலு...
கரையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

கரையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கரையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது, மேலும் தீவிரமடைந்து அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மண்டலமாக மாறும்பட்சத்தில், வடதமிழக கடலோரப் பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது, சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ., தொலைவில் கிழக்கு-தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியால், இன்று அதி ...
சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை கரையை நெருங்கும்- சில இடங்களில் 20 செ.மீ. மழை பெய்யலாம்!

சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை கரையை நெருங்கும்- சில இடங்களில் 20 செ.மீ. மழை பெய்யலாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை கரையை நெருங்கும்- சில இடங்களில் 20 செ.மீ. மழை பெய்யலாம்! தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி பெய்த கனமழையால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சென்னையில் ஒரே நாள் இரவில் 23 செ.மீ. அளவுக்கு மழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளித்தது. மழை நீர் வடிகால் சரிவர தூர்வாரப்படாததால் தண்ணீர் போக வழியின்றி குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சென்னையில் முக்கிய வியாபார மையமாக உள்ள தி.நகரில் மழை வெள்ளம் தேங்கியதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. 3 நாட்களுக்கு பிறகே நிலைமை ஒரளவுக்கு சரி செய்யப்பட்டது. மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு சென்னை மற்றும் புறகர் பகுதிகள் மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு திரும்பி வந்துள்ள நிலையில் மீண்டும் சென்னையில் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது கலக்கத்தை ஏற்படுத்த...
20 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

20 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
20 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேசன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 2022ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய  தொகுப்பினை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்...
மழை வெள்ளத்தில் இருந்து காக்க ஜப்பானில் பூமிக்கு அடியில் ஒரு கோவில்!

மழை வெள்ளத்தில் இருந்து காக்க ஜப்பானில் பூமிக்கு அடியில் ஒரு கோவில்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
மழை வெள்ளத்தில் இருந்து காக்க ஜப்பானில் பூமிக்கு அடியில் ஒரு கோவில்! வெயில் சுட்டெரித்தால் வறட்சி. மழை பெய்தால் வெள்ளம். இதுதான் தமிழக தலைநகர் சென்னையின் பரிதாப நிலை. வெயில் காலத்தில் குடிநீருக்கு அலையாய் அலைகிறோம். மழை காலத்தில் வெள்ள பாதிப்பில் சிக்கி தவிக்கிறோம். நமக்கு வெயிலாலும் பிரச்சினை. மழை பெய்தாலும் பிரச்சினை. ஆண்டில் 10 நாள் பெய்யும் மழைநீரை முழுவதுமாக சேமித்து வைத்தாலே, சென்னையில் ஒரு ஆண்டுக்கு தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்து விட முடியும். வெயில் காலத்திலும் குடிநீருக்கு கவலையின்றி வாழலாம். ஆனால் நம்மிடம் நீரை சேமிக்கும் திறன் இல்லாமல் போய்விட்டது. மழை பொழிந்தால், நீர் தனது இருப்பிடமான ஏரியை நோக்கி செல்கிறது. ஆனால் சென்னையில் ஏரிகள் மாயமாகிவிட்டதால் அந்த நீர் குடியிருப்பை சூழ்ந்து நின்று வெள்ள பாதிப்பை ஏற்படுத்துகின்றது. சென்னையின் வளர்ச்சிக்கு பின்னால் மாபெரு...