ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

பிக்பாஸ் சீசன் 5 எப்போது?

பிக்பாஸ் சீசன் 5 எப்போது?

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பிக்பாஸ் சீசன் 5 எப்போது? தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர். வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும். ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால், பிக்பாஸ் 4 நிகழ்ச்சி திட்டமிட்டபடி ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. பின்னர் அக்டோபர் மாதம் தொடங்கி இந்தாண்டு ஜனவரி 16-ந் தேதி வரை ‘பிக்பாஸ் 4’ நடைபெற்றது....
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை!

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை! தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வருகிற 14-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று பரவல் தொடர்ந்து கூடுதலாகவே இருந்ததால் முழு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டது. ஒருசில தளர்வுகள் மட்டும் அங்கு அறிவிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு  முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உயர் அதிகாரிகளுடன்  ஊரடங்கு  குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லாத ஊரடங்கு  அமல...
ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வருமா?- மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை!

ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வருமா?- மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வருமா?- மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை! தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து கொரோனா வைரஸ்  2-வது அலை பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. கடந்த மாதம் 2-வது வாரத்திற்கு மேல் பாதிப்பு உச்சத்தை தொட்டது. 21-ந் தேதி அதிகபட்சமாக தினசரி பாதிப்பு 36 ஆயிரத்து 184ஆக இருந்தது. மேலும் பலி எண்ணிக்கையும் 467ஆக உயர்ந்தது. இதனால் தமிழ்நாட்டில் 24-ந்தேதி முதல் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து பாதிப்பு 30 ஆயிரத்துக்கு மேல் இருந்ததால் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு தொற்று தொடர்ந்து சரிந்து வந்ததால் கடந்த 7-ந்தேதி முதல் சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. கோவ...
பொதுமக்கள் முதலமைச்சரிடம் புகார் அளிக்க  புதிதாக இணையதளம் !

பொதுமக்கள் முதலமைச்சரிடம் புகார் அளிக்க புதிதாக இணையதளம் !

HOME SLIDER, NEWS, செய்திகள்
பொதுமக்கள் முதலமைச்சரிடம் புகார் அளிக்க புதிதாக இணையதளம் ! முதல்வரின் தேர்தல் பிரசாரத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இத்துறையில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. http://cmcell.tn.gov.in  என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் புகார்களை அளிக்கலாம். புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்....
தமிழக சட்டசபை விரைவில் கூடுகிறது- அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல்!

தமிழக சட்டசபை விரைவில் கூடுகிறது- அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக சட்டசபை விரைவில் கூடுகிறது- அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல்! தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மே 11-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர். 2-வது நாள் சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. இதில் போட்டியின்றி சபாநாயகராக அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டதால் அன்றைய தினமே சபாநாயகராக அப்பாவு பதவி ஏற்றார். அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், , எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட சட்டமன்ற கட்சி தலைவர்கள் வாழ்த்தி பேசினார்கள். அத்துடன் சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. முந்தைய அ.தி.மு.க. அரசு இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி மாதம் 23-ந்தேதி தாக்கல் செய்தது. புதிதாக ஆட்சி அமைத்துள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு இந்த கூட்டத்தொடரில் ம...
சுத்தம் செய்யப்படாத ஏ.சி எந்திரங்களால் புற்றுநோய், இதய நோய் ஏற்படும் அபாயம்!

சுத்தம் செய்யப்படாத ஏ.சி எந்திரங்களால் புற்றுநோய், இதய நோய் ஏற்படும் அபாயம்!

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
சுத்தம் செய்யப்படாத ஏ.சி எந்திரங்களால் புற்றுநோய், இதய நோய் ஏற்படும் அபாயம்! அமீரகத்தில் சுத்தம் செய்யப்படாத ஏ.சி. எந்திரங்களால் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த யூகோவ் அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களில் கூறியிருப்பதாவது. அமீரகத்தில் தற்போது கடும் கோடைக்காலம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்டிடங்களுக்குள் ஏ.சி.எந்திரம் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் அந்த எந்திரங்களை சரியாக பராமரித்து, அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் அதனை சுத்தம் செய்வது சுகாதாரமாகும். இதுபோன்று அறைகளுக்குள் ஏ.சி எந்திரங்களை சரியாக தூய்மை செய்யாவிட்டால் பல்வேறு உடல்நலக்கோளாறுகள் ஏற்படுகின்றது. இதனை அமீரகத்தில் உள்ள தனியார் மருத்துவர்கள் டைம் பாம் என எச்சரிக்கிறார்கள். சுத்தம் செய்யப்படாத ஏ...
போலீசார் நடிகை சாந்தினியிடம் ரகசிய வாக்குமூலம் பெற நடவடிக்கை!

போலீசார் நடிகை சாந்தினியிடம் ரகசிய வாக்குமூலம் பெற நடவடிக்கை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
போலீசார் நடிகை சாந்தினியிடம் ரகசிய வாக்குமூலம் பெற நடவடிக்கை! சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி  நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார். மலேசிய குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், ‘மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்தார். 5 வருடங்கள் நானும், அவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன். அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன். இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்’ என்று தெரிவித்து இருந்தார். இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மணிகண்டன் மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அடுத்தகட்டமாக மணிகண்டன...
தமிழகத்திற்கு நாளை முதல் கூடுதல் தடுப்பூசிகள் வருகை!

தமிழகத்திற்கு நாளை முதல் கூடுதல் தடுப்பூசிகள் வருகை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்திற்கு நாளை முதல் கூடுதல் தடுப்பூசிகள் வருகை! தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ரூ.39.05 கோடி செலவில் தடுப்பூசிகளை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு நாளை முதல் கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் வர உள்ளன. இந்த மாத இறுதிக்குள் 42.58 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வர உள்ளன. நாளை 63,370 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், நாளை மறுநாள் 40,000 கோவாக்சின் தடுப்பூசிகளும் வர உள்ளன. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குள் தடுப்பூசி தட்டுப்பாடு நீங்கும் என தகவல் வெளியாகியுள்ளது....
ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன- சென்னையில் வாகன சோதனை தீவிரம்!

ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன- சென்னையில் வாகன சோதனை தீவிரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன- சென்னையில் வாகன சோதனை தீவிரம்! தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ந்தேதி முதல் 2 வாரங்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவுக்கு வந்துள்ளது. இன்று முதல் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை 6 மணியில் இருந்து அமலுக்கு வந்தது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் நோய் தொற்று அதிகமாக இருப்பதால் இந்த மாவட்டங்களில் மட்டும் குறைந்த அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த மாவட்ட...
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது!

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது! தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடந்த மாதம் 10-ந் தேதி முதல் 7-ந் தேதி (இன்று) காலை 6 மணி வரை அமலில் இருக்கிறது. இந்த நிலையில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது 14-ந் தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டித்து, முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டுனம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று அதிகமாக உள்ளதால் சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அறிவிக்கப்பட்டுள்ள தளர்...