திருப்பதி செல்லும் வழியில் சென்னை வரும் ஜனாதிபதி!
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திருப்பதி செல்லும் வழியில் நாளை காலை டில்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறாா். இதையடுத்து சென்னை பழைய விமானநிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை காலை 6.30 மணிக்கு டில்லி பாலம் விமானநிலையத்திலிருந்து தனி விமானத்தில் புறப்படுகிறாா். காலை 9.15 மணிக்கு சென்னை பழைய விமானநிலையம் வருகிறாா்.அங்கு ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்பு காலை 9.45 மணிக்கு சென்னை பழைய விமானநிலையத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் திருப்பதி புறப்பட்டு செல்கிறாா்.
அதன்பின்பு நாளை மாலை திருப்பதியிலிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு சென்னை பழைய விமானநிலையம் வருகிறாா்.ஜனாதிபதியை வரவேற்று வழியனுப்புகின்றனா்.இதையடுத்து மாலை 5.45 மணிக்கு சென்னை பழைய விமானநிலையத்திலிருந்து தனி விமானத்தில் டில்லி புறப்பட்டு செல்கிறாா்...









