பிரமீடு அருகே எகிப்தின் பண்டைய கால உடையணிந்து புகைப்படம் எடுத்த மாடல் அழகி கைது
எகிப்து நாட்டில் மாடலிங் துறையில் பிரபலமானவர் சல்மா அல்-ஷைமி. மாடல் அழகியான இவர் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமிலும் மிகவும் பிரபலநபராக இருந்துவந்தார்.
இதற்கிடையில், சல்மா அல்-ஷைமி கடந்த வாரம் தலைநகர் கெய்ரோவில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் 4 ஆயிரத்து 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த டிஜொசெர் பிரமீடுகள் அமைந்துள்ள இடத்திற்கு சென்றுள்ளார்.
தனது புகைப்படக்கலைஞருடன் பிரமீடுகள் அமைந்துள்ள இடத்திற்கு சென்ற அவர் அங்கு எகிப்தின் பண்டைய கால உடையணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். தான் எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் சல்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும், எகிப்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை மீறி பிரமீடு பகுதியில் கவர்ச்சியான முறையில் புகைப்படங்கள் எடுத்ததாக சல்மா மீது குற...









