சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

எழுமின் சினிமா பார்க்க தியேட்டருக்கு வந்த ஆயிரம் மாணவ, மாணவிகள்!

எழுமின் சினிமா பார்க்க தியேட்டருக்கு வந்த ஆயிரம் மாணவ, மாணவிகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  1000 பள்ளி மாணவ, மாணவியர்கள் கண்டு களித்த ‘எழுமின்’! வி பி விஜி இயக்கத்தில் விவேக் மற்றும் தேவயாணி நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம்தான் ‘எழுமின்’. குழந்தைகளின் தற்காப்புக் கலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பத்திரிக்கையாளர்களாலும் பெரும் நட்சத்திரங்களாலும் பாராட்டப்பட்ட இப்படம் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி திரையரங்கில், விகாஷ் வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 1000 பேர் இப்படத்தை கண்டு களித்தனர். பள்ளி நிர்வாகம் மூலம் இந்த காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்காப்பு கலையின் முக்கியத்துவத்தையும் அதன் அவசியத்தையும் இப்படத்தின் மூலம் தெரிந்து கொண்டோம் என்று படத்தினை பார்த்த மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். மேலும், பல மாவட்டங்களில் பல பள்ள...
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் முகாம்!

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் முகாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஜெயலலிதா மறைவுக்கு பின்னால் கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு சிக்கல்களை அ.தி.மு.க. சந்தித்து வருகிறது. முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற நிலையில், அ.தி.மு.க.வை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு (2017) ஆகஸ்டு மாதம் 22-ம் தேதி அப்போது கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். அன்றைய தினமே சபாநாயகர் ப.தனபாலை சந்தித்த அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன், “அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவுக்கு எதிராக 19 பேரின் செயல்பாடு உள்ளது” என்று புகார் அளித்தார். அதன் அடிப்படையில், 19 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் ப.தனபால் நோட்டீஸ் அனுப்பினார். 19 பேரில் ஜக்கையன் (கம்பம் தொகுதி) மட்டும் சபா...
மீண்டும் கதை திருட்டு புகார் சாட்டையை வீசிய பாக்யராஜ்! அப்செட்டான முருகதாஸ்!!

மீண்டும் கதை திருட்டு புகார் சாட்டையை வீசிய பாக்யராஜ்! அப்செட்டான முருகதாஸ்!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மீண்டும் கதை திருட்டு புகார் சாட்டையை வீசிய பாக்யராஜ்! அப்செட்டான முருகதாஸ்!! நடிகர் விஜய் நடிக்கிற படங்களை எப்போதெல்லாம் முருகதாஸ் இயக்குகிறாரோ அப்போதெல்லாம் அந்த கதை அடுத்தவர் கதையாகவே குற்றம்சாட்டப்பட்டு கோலிவுட் பரபரப்பாகும்... ஒரு படம் என்றால் ஏதோ காழ்ப்புணர்ச்சியில் சொல்கிறார்கள் எனலாம்... இரண்டாவது கதை என்றாலும் அதே நிலையை சொல்லிக் கொள்ளலாம் வரிசையாக எடுக்கிற படங்கள் எல்லாம் அடுத்தவர் கதையாக இருந்தால்... அதிலும் கூட உதவியாளராக இருந்தவர் கதையையே நம்ப வைத்து திருடினால்... இந்த குற்றச்சாட்டடில் இந்தமுறை மிக நுட்பமாக சிக்கியிருக்கிறார் இயக்குனர் முருகதாஸ்... கத்தி, ஏழாம் அறிவு போன்ற படங்களைப்போல இந்த சர்கார் கதையையும் அத்தனை சீக்கிரம் முருகதாஸ் கடந்து போய்விட முடியாது... சரி... இந்த சர்கார் கதை எப்படி... யாரிடம் இருந்து திருடப்பட்டது என்ற விவரத்தை பார்ப்போம்... பல ...
நானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் – தனுஸ்ரீ தத்தா

நானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் – தனுஸ்ரீ தத்தா

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  பிரபல பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் நடிகர் விஷாலுடன் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகரான நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் கூறியுள்ளார். 2008-ம் ஆண்டு ‘ஹார்ன் ஒகே பிளீஸ்’ என்ற இந்தி படத்தின் பாடல் காட்சி படமாக்கப்படும் போது அவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றம் சாட்டி இருந்தார். தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை நானா படேகர் மறுத்து வந்தார். தனு ஸ்ரீதத்தா பொய் கூறுவதாக தெரிவித்தார். இந்த நிலையில் நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர்சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகிய 4 பேர் மீது தனுஸ்ரீ தத்தா மும்பை ஒஹிவாரா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து நானா படேகர் உள்பட 4 பேர் மீது போலீசார் 354 மற்றும் 509 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்...
சின்மயி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் – வைரமுத்து

சின்மயி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் – வைரமுத்து

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்த நிலையில், சின்மயி மீண்டும் வைரமுத்து மீது குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் சுவிட்சர்லாந்தில் நடந்த ‘‘வீழமாட்டேன்?’’ என்ற நிகழ்ச்சிக்கு வைரமுத்து தான் அழைப்பு விடுத்தார். அவர் மீது வைத்திருந்த மரியாதை காரணமாக ஒப்புக்கொண்டு சென்றேன். நிகழ்ச்சி முடிந்ததும் எங்களை மட்டும் விடுதியில் தங்க வைத்தனர் அப்போது தான் இந்த சம்பவம் நடந்ததாக என் தாயார் கூறினார். அதன்பின்னர் வைரமுத்துவிடம் கையெழுத்து வாங்க சென்றபோது என் மீது அத்துமீறல் நடந்தது. அவர் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டது உண்மை என்று கூறியிருந்தார். மேலும் வைரமுத்து மீது புகார் அளிப்பீர்களா? என்ற கேள்விக்கு, என்னுடைய வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வருகிறேன். விரைவில் வழக்கு தொடர்வேன்’ என்றார். htt...
ஆளுநர் மாளிகையின் கன்னத்தில் விழுந்த அறை – வைகோ

ஆளுநர் மாளிகையின் கன்னத்தில் விழுந்த அறை – வைகோ

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஆளுநர் மாளிகையின் கன்னத்தில் விழுந்த அறை செய்தியாளர்களிடம் வைகோ சங்கொலி வாரப் பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில் நானும் பத்திரிகையாளர் என்பதால் உங்களிடம் பேசுகிறேன். பத்திரிகைத் துறையை மிரட்டி அச்சுறுத்தி பயமுறுத்தி ஏழு வருடம் சிறைக்கு அனுப்பக் கூடிய பிரிவுகளில் வழக்கு போட்டு ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்து பேச்சுரிமை, கருத்துரிமையைப் பறித்து விடலாம் என்று ஆளுநர் மாளிகை திட்டமிட்டு சுயமரியாதையை இழந்து விட்ட முதுகெலும்பற்ற அ.தி.மு.க. அரசின் காவல்துறையைப் பயன்படுத்தி நக்கீரன் வார இதழின் ஆசிரியர் கோபால் அவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 124 ஆவது பிரிவின் கீழ் ஆளுநரையோ குடியரசுத் தலைவரையோ வேலை செய்ய விடாமல் தடுக்கின்ற சட்டப்பிரிவு 124-இன்படி ஏழு வருடம் சிறைக்கு அனுப்பலாம். அந்தப் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் இருக்கின்ற ஒரு அதிகாரி டெபுடி செக்ரட்டரி...
நக்கீரன் கோபால் மீதான வழக்கு செல்லாது!

நக்கீரன் கோபால் மீதான வழக்கு செல்லாது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நக்கீரன் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் கோபால். இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். அப்போது சென்னை போலீசார் அவரை திடீரென கைது செய்தனர். விமான நிலையத்தில் வைத்து சிறிது நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் சிந்தாதிரிப் பேட்டை போலீஸ் நிலைய மாடியில் உள்ள திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து நக்கீரன் பத்திரிகையில் செய்திகள் வெளியானது. அதில் கவர்னர் மாளிகையை தொடர்புபடுத்தி எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி கவர்னர் ம...
3வது மனைவி மீது 2வது மனைவி கொலைவெறி தாக்குதல் வேடிக்கை பார்த்தாரா மன்சூர் அலிகான்!

3வது மனைவி மீது 2வது மனைவி கொலைவெறி தாக்குதல் வேடிக்கை பார்த்தாரா மன்சூர் அலிகான்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் மன்சூர் அலிகான் அவர்களின் 2வது மனைவி பேபி என்கிற ஹமீதா, 2வது மனைவியின் வாரிசுகளான மகள் லைலா அலிகான்(வயது சுமார் 22), மகன் மீரான் அலிகான்(வயது சுமார் 15) ஆகிய இருவரும் மன்சூர் அலிகானின் 3வது மனைவியான வஹிதா அவர்களை இரும்பு கம்பிகளால் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் நடக்கும் வேளையில் மன்சூர் அலிகான் மற்றும் அவருடைய 2வது மனைவி பேபி என்கிற ஹமீதா வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளனர். இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டுள்ள வஹிதா தற்போது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான், வஹிதா, லைலா அலிகான் மற்றும் மீரான் மீது புகார் தெரிவித்துள்ளார். பின்னர் வஹிதா அவருடைய சகோதரியுடன் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மன்சூர் அலிகானின் 2வது மனைவி வஹிதா, மன்சூர் அலிகானின் அக்கா மகள் என்பது குறிப்பிடத்தக்கது....
பழங்குடி இன சுதந்திர போராளி பிர்ஸா முண்டா கதையை கையில் எடுத்த கோபி நயினார்!

பழங்குடி இன சுதந்திர போராளி பிர்ஸா முண்டா கதையை கையில் எடுத்த கோபி நயினார்!

NEWS
அறம் படம் மூலம் தனது இயக்கத் திறமையை உலக சினிமாவிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் இயக்குனர் கோபி நயினார். தற்போது ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து சமூக அக்கறை கொண்ட ஒரு படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தின் வேலைகள் பிஸியாக சென்று கொண்டிருக்கும் போதே அடுத்த படத்திற்கான வேலைகளையும் கையில் எடுத்துள்ளார் இயக்குனர் கோபி நயினார். தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக் இவரது இந்த படத்தின் கதை தான். அப்படி என்ன கதை என்று யோசிக்கிறீர்களா..?? வட இந்தியாவைச் சேர்ந்த பிர்ஸா முண்டாவின் கதை தான் அது. பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் மட்டும் இல்லாமல், பழங்குடி இன மக்களுக்காக போராடி உயிர் நீத்தவர். 25 வயது வரைக்குமே உயிரோடு வாழ்ந்த இவரின் வாழ்க்கை வரலாறு தற்போது உலகம் முழுக்க பேசப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்களை இம்மண்ணில் இருந்து விரட்ட மிகப்பெரிய புரட்சியை செய்து காட்டியவர். ...
சூர்யா பட இயக்குனரின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”!!

சூர்யா பட இயக்குனரின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”!!

NEWS, செய்திகள்
  கேளடி கண்மனி, ஆசை, சூர்யாவின் நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார், சத்தம் போடாதே உள்ளிட்ட பல வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் வசந்த் S சாய். தற்போது "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் பார்வதி , காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, சுந்தர், கருணாகரன், கார்த்திக் கிருஷ்ணா, மாஸ்டர் அம்ரீஷ் ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது ஜியோ MAMI மும்பை பிலிம் பெஸ்டிவல் 2018 நிகழ்ச்சியில் இயக்குனர் வசந்த் சாய்யின் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" திரையிட தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் கபீர் மெஹ்தா இயக்கிய புத்தா.மூவ், தனுஜ் சந்திரா இயக்கிய எ மாண்சூன் டேட், அதுல் மோங்கியா இயக்கிய அவேக், நாகராஜ் மஞ்சுளே இயக்கிய அன் எஸ்ஸே ஆப் தி ரெயின், புத்தாடேப் தாஸ்குப்தா இயக்கிய தி ப்லைட், ஷாசியா இக்பால் இயக்கிய பிபாக் ஆகிய படங்களும் திரையிடப்ப...