காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் கடந்த 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் வழங்கிய 192 டி.எம்.சி. தண்ணீருக்கு பதிலாக 177.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீரின் அளவு 14.75 டி.எம்.சி. குறைந்துள்ளது.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரகாலத்திற்குள் அமைக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு கர்நாடகா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அம்மாநில அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக முடிவெடுப்பதற்காக தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். சுமார்...









