ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

டை அடிப்பதில் கின்னஸ் சாதனைக்கு தயாராகும் நடிகர் ஆர்.கே…!

டை அடிப்பதில் கின்னஸ் சாதனைக்கு தயாராகும் நடிகர் ஆர்.கே…!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  1௦௦5 பேரை வைத்து கின்னஸ் சாதனை செய்ய தயாராகும் ஆர்கே இந்திய கண்டுபிடிப்பின் தரத்தை உலக அரங்கில் நிரூபிக்க நடிகர் ஆர்கே எடுக்கும் மெகா ரிஸ்க் இந்திய கண்டுபிடிப்பின் தரத்தை நிரூபிக்க கின்னஸ் சாதனை நிகழ்த்த தயாராகும் நடிகர் ஆர்கே நரைமுடியை தொடர்ந்து குறட்டை விடும் பிரச்சனைக்கும் புதிய மருந்து கண்டுபிடித்த நடிகர் ஆர்கே விஐபி ஹேர் கலர் ஷாம்பூவுக்காக கின்னஸ் சாதனை நிகழ்த்த தயாராகும் நடிகர் ஆர்கே   எல்லாம் அவன் செயல் படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்கே. தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக வலம் வரும் ஆர்கேவுக்கு, வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. அந்தவகையில் கடந்த 18 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை முதன்முறையாக பொது மார்க்கெட்ட...
திமுகவில் அப்பா ஸ்டாலின் வகித்த பதவியை அடைந்த மகன் உதயநிதி..!

திமுகவில் அப்பா ஸ்டாலின் வகித்த பதவியை அடைந்த மகன் உதயநிதி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுகவில் அப்பா ஸ்டாலின் வகித்த பதவியை அடைந்த மகன் உதயநிதி..! திமுகவின் புதிய இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டு இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் மகனும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனருமான உதயநிதி ஸ்டாலின் தி.மு.கவின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்படுவார் என நீண்டகாலமாகவே பேச்சுகள் அடிபட்டுவந்த நிலையில், இன்று அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவியை இதுவரை வகித்து வந்த வெள்ளக்கோயில் சாமிநாதன் தேர்தல் முடிவுக்கு பின் திடீரென பதவியில் இருந்து விலகினார். அதையடுத்து அவர் பதவிக்கு உதயநிதி நியமிக்க படலாம் என்ற கருத்து நிலவியது. இப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் அப்பா ஸ்டாலின் வகித்து வந்த பதவியை மகன் உதயநிதி ஸ்டாலின் பெற்று இருக்கிறார். த...
ஓ.பி.எஸ். உள்பட, 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

ஓ.பி.எஸ். உள்பட, 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஓ.பி.எஸ். உள்பட, 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். அந்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதைப்போல ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் விசாரணையும் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் சக்கரபாணி தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல், தங்க தமிழ்ச்செல்வன் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், முகுல் ரோத்தகி...
நீச்சல் போட்டியில் 3 தங்கம் 1வெள்ளி வென்று அசத்திய மாதவன் மகன்!

நீச்சல் போட்டியில் 3 தங்கம் 1வெள்ளி வென்று அசத்திய மாதவன் மகன்!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  நீச்சல் போட்டியில் 3 தங்கம் 1வெள்ளி வென்று அசத்திய மாதவன் மகன்! நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், தேசிய அளவிலான ஜூனியர் பிரிவு நீச்சல் போட்டியில் பங்கேற்று, மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் வென்று பெருமை சேர்த்துள்ளார். இந்த தகவலை மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மற்றும் சில புகைப்படங்களையும் இணைத்துள்ளார். அதில் வேதாந்த் வெற்றி பெற்ற தருணம், மதிப்பெண் அட்டவணை ஆகியவை அடங்கிய வீடியோவும், பதக்கங்களுடன் வேதாந்த் இருக்கும் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. மாதவன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- ’உங்கள் அனைவருடைய ஆசீர்வாதம், நல்வாழ்த்துக்கள் மற்றும் கடவுளின் அருளோடு, வேதாந்த் மீண்டும் எங்களை மிகவும் பெருமைப்படுத்தி உள்ளார். தேசி...
“கிறிஸ்மஸ் கூப்பன்” படம் மூலம் மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் நெப்போலியன்..!

“கிறிஸ்மஸ் கூப்பன்” படம் மூலம் மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் நெப்போலியன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கிரிஸ்டல் கிரீக் மீடியா, கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், ‘மாவீரன்’ நெப்போலியன் நடிப்பில் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ கிரிஸ்டல் கிரீக் மீடிய மற்றும் கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், கோர்ட்னி மாத்யூஸ், ஆரன் நோபிள், ‘மாவீரன்’ நெப்போலியன், ஷீனா மோனின், ராபர்ட் லெனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஒரு உணர்வுபூர்வமான திரைப்படம் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’. தரமான குடும்ப மற்றும் நம்பிக்கை சார்ந்த திரைப்படங்களை .முன்னெடுத்துவரும் ‘கிறிஸ்டல் கிரீக்’ |நிறுவனமும், சர்வதேச தரத்தில் நல்ல கதைகளங்களைக் கொண்ட திரைப்படங்களை தயாரித்தும், ஆசியாவில் விநியோகித்தும் வரும் ‘கைபா பிலிம்ஸ்’ நிறுவனமும் இணைந்து, ஒரு யதார்த்தமான அழுத்தமான காதல் கதையை மிக நளினமானப் படைத்திருக்கின்றனர். முழுநேர வேலைப் பறிபோன நிலையில், முன்னாள் ஸ்கேட்டிங் ச...
இடைத்தேர்தலில் உதயநிதி  போட்டியிட்டால் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்- திருநாவுக்கரசர்

இடைத்தேர்தலில் உதயநிதி போட்டியிட்டால் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்- திருநாவுக்கரசர்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இடைத்தேர்தலில் உதயநிதி போட்டியிட்டால் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்- திருநாவுக்கரசர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சி தொகுதி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டும் என கே.என்.நேரு பேசியது அவருடைய சொந்த கருத்து. கருத்தை சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான இடங்கள் பங்கீடு குறித்து கட்சிகளின் தலைமைகள் தான் பேசி முடிவு செய்யும். உள்ளாட்சி, சட்டப் பேரவை தேர்தல்களிலும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும். ஆனால் தோற்றுவிடுவோம் என்ற பயம் இருப்பதால் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்துமா? என்பது சந்தேகமே. பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றேன் என்று நான் எங்கும் கூறவில்லை. என்னுடைய வெற்றிக்கு தி.மு.க- ...
காவி கலருக்கு மாறிய இந்திய கிரிக்கெட் அணி..!

காவி கலருக்கு மாறிய இந்திய கிரிக்கெட் அணி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  காவி கலருக்கு மாறிய இந்திய கிரிக்கெட் அணி..! ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. முன்புறம் கருநீலமும், பின்புறம் ஆரஞ்ச் நிறமும் கொண்ட இப்புதிய ஜெர்சியை, இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளை ஜூன் 30ம் தேதி நடைபெறவுள்ள, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் அணிந்து விளையாட உள்ளனர். புதிய ஜெர்சியில் ஆரஞ்ச் நிறம் இருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்த நிலையில் இந்த காவி கலர் உடை அறிமுகபடுத்தப்பட்டு உள்ளது....
தண்ணீர் பஞ்சத்தை போக்க போர்க்கால அடிப்படையில் ஏரி,குளங்களை தூர் வார வேண்டும் – ரஜினி

தண்ணீர் பஞ்சத்தை போக்க போர்க்கால அடிப்படையில் ஏரி,குளங்களை தூர் வார வேண்டும் – ரஜினி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தர்பார் ஷூட்டிங் முடிந்து மும்பையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் சென்னை திரும்பி வந்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:- குடிநீர் பிரச்சினையில் தவிக்கும் மக்களுக்கு தண்ணீர் வழங்கும் பணியில் ஈடுபட்டு உள்ள ரசிகர்களை மனமார்ந்து பாராட்டுகிறேன். அவர்களை வாழ்த்துகிறேன். ரசிகர்கள் செய்வது மிகவும் நல்ல விசயம். இதுபோன்ற நல்ல வேலைகளை முதலில் இருந்து செய்து வருகிறோம். இப்போதுதான் வெளியே தெரிய தொடங்கி உள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க மழைநீரை சேகரிக்க வேண்டும். இதற்காக உடனடியாக ஏரி, குளங்கள் உள்பட நீர்நிலைகளை தூர்வாரவேண்டும். மழை வருவதற்கு முன்பு எல்லாவற்றையும் சரிசெய்து வைத்து மழைநீரை சேமிக்கவேண்டும். போர்க்கால அடிப்படையில் இந்த பணிகள் செய்யப்படவேண்டும். பாரதீய ஜனதா அரசு இப்போதுதான் பொறுப்பேற்று உள்ளது. நதிநீர் இணைப்புகளை...
தினகரனின் அமமுகவில் இருந்து விலகி ஸ்டாலினுக்கு மஞ்சள் சால்வை அணிவித்து திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்..!

தினகரனின் அமமுகவில் இருந்து விலகி ஸ்டாலினுக்கு மஞ்சள் சால்வை அணிவித்து திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தினகரனுடன் மோதல் ஏற்பட்டதால் அமமுகவில் இருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தார். தினகரனின் வலது கரமாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் திடீரென தினகரனை விமர்சிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் இந்த முட்டல் மோதல் உச்சகட்டத்தை அடைந்ததால் தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவில் இருந்து நீக்கப்படுவார் என தினகரன் அறிவித்தார். இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைய திட்டமிட்டுள்ளார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அதற்கு பச்சைக்கொடி காட்டி விட்டதாகவும், ஓ.பி.எஸ் தரப்பில் எதிர்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் திடீரென திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இதற்கு முன்பே தங்க தமிழ்செல்வனை அமமுகவில் இருந்து நீக்கிவிட்டதாக தினகரன் அறிவித்திருந்தார். இதற்கிடையில் அமமுகவில் இருந்து வெளியேறிய செந...
நடிகர் சங்க நில மோசடி வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி ராதாரவி,சரத் எந்நேரமும் கைதாகலாம்..!

நடிகர் சங்க நில மோசடி வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி ராதாரவி,சரத் எந்நேரமும் கைதாகலாம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நில மோசடி வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி ராதாரவி எந்நேரமும் கைதாகலாம்..! நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்று மோசடி செய்ததாக முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, செல்வராஜ், காளை ஆகியோர் மீது மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. காஞ்சிபுரம் வேங்கட மங்கலம் கிராமத்தில் இருந்த நடிகர் சங்கத்தின் இடத்தை உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாமல் பதவியை முறைகேடாக பயன் படுத்தி விற்பனை செய்ததாக எழுந்த புகாரை காஞ்சிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் நில மோசடி வழக்கில் சிக்கிய 4 பேரில் காளை இறந்து விட்டார். ராதாரவி, சரத்குமார் ,செல்வராஜ் மீது வழக்கு நடந்து வந்தது.   இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கூறி குற்றம்சட்டப்பட்டவர்கள் மீது சார்ஜ்ஷீட் போடப்பட்டது. இதைத் தொடர்ந்து நில மோசடி வழக்கு வேகம் எடுத்து முறைகேடு செய்தவர்கள...