டி.வி.யில் மற்ற நிகழ்ச்சிகளை பின்னுக்கு தள்ளிய ஐபிஎல் – சென்னை அணிக்கு கூடுதல் மவுசு
இந்தியாவின் தேசிய விளையாட்டு ஆக்கி என்றாலும், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசித்து பார்க்கும் விளையாட்டு கிரிக்கெட் தான். உலகம் முழுவதும் கால்பந்து விளையாட்டுக்கு ரசிகர்கள் அதிகம். ஆனால் இந்தியாவில் ஐந்தில் 4 பேர் கிரிக்கெட் பார்க்கிறார்கள் என்பதே கிரிக்கெட் விளையாட்டின் மீதான இந்தியர்களின் காதலுக்கு சான்று. அதனால் தான் என்னவோ நமது நாட்டின் 2-வது தேசிய விளையாட்டாகவே கிரிக்கெட் போட்டி பார்க்கப்படுகிறது.
ஒருநாள், டெஸ்ட் என்ற 2 வகை பரிமாணத்தில் மட்டுமே பயணித்து வந்த கிரிக்கெட்டை, அடுத்த தளத்துக்கு கொண்டு சென்றது 20 ஓவர் போட்டி தான். பவுண்டரிகளுக்கும், சிக்சர்களுக்கும் பஞ்சமில்லாத இந்த கிரிக்கெட் போட்டி ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது. அதிலும் ஐ.பி.எல். என்னும் இந்தியன் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ரசிகர்களின் ரசனைக்கும், கொண்டாட்டத்துக்கும், உற்சாகத்துக்கும் பெரும் தீன...









