எடப்பாடி பழனிச்சாமி என்ன ஏழுமலையானா? – அரசு விளம்பரம் குறித்து ராமதாஸ்
தமிழக அரசு விளம்பரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஏழுமலையானாகச் சித்திரிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமியின் மலிவான செயல்களால், இறைவழிபாட்டில் நம்பிக்கைக் கொண்ட மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் திரையரங்கில் ஒலிபரப்பாகிய அரசு விளம்பரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் கடவுளாகச் சித்திரிக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்துக்குப் பலதரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இணையத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விளம்பரம் குறித்து ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
"தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை சார்பில் திரையிடப்படும் சாதனை விளக்க விளம்பரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏழுமலையானாகச் சித்திரிக்கப்பட்டு இருப்...









