ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

துரோகிகளின் பட்டியலில் முதல் நபர் மகேந்திரன் –  கமல்  கடுப்பு

துரோகிகளின் பட்டியலில் முதல் நபர் மகேந்திரன் – கமல் கடுப்பு

HOME SLIDER, NEWS, politics, நடிகர்கள்
துரோகிகளின் பட்டியலில் முதல் நபர் மகேந்திரன் - கமல் கடுப்பு மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் கட்சியில் இருந்து விலகினார். தற்போது அவரது விலகல் குறித்து பதில் அளித்துள்ள அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் “களைய வேண்டிய துரோகிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் மகேந்திரன்” என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உயிரே உறவே தமிழே, பத்‌திரமாக இருக்கிறீர்களா? ‘சீரமைப்போம்‌ தமிழகத்தை’ எனும்‌ பெருங்கனவை முன்வைத்து முதலாவது சட்டமன்ற தேர்தலைச்‌ சந்தித்தோம்‌. ஒரு பெரிய போரில்‌ திறம்பட செயல்பட்டோம்‌. களத்தில்‌ எதிரிகளோடு துரோகிகளும்‌ கலந்திருந்தார்கள்‌ என்பதைக்‌ கண்கூடாகக்‌ கண்டோம்‌. ‘துரோகிகளைக்‌ களையெடுங்கள்‌’ என்பதுதான்‌ அனைவரின்‌ ஒருமித்த குரலாக இருந்தது. அப்படிக்‌ களைய ...
Air ambulance makes emergency belly landing at Mumbai airport

Air ambulance makes emergency belly landing at Mumbai airport

HOME SLIDER, NEWS
Air ambulance makes emergency belly landing at Mumbai airport A full state of emergency was declared at the Mumbai airport earlier on Thursday after an air ambulance suffered technical malfunction. The air ambulance, flying from Nagpur to Hyderabad, was diverted to Mumbai. The C-90 VT-JIL aircraft operated by Jet Serve Aviation has successfully made an emergency landing at the Mumbai airport. The crew confirmed that the pilots attempted a 'belly landing' without using the landing gear  
மும்பையில் அவசரமாக தரையிறங்கிய ஏர் ஆம்புலன்ஸ்

மும்பையில் அவசரமாக தரையிறங்கிய ஏர் ஆம்புலன்ஸ்

HOME SLIDER, NEWS
  நாக்பூரில் இருந்து ஐதராபாத்திற்கு விமானப் பணியாளர்கள் இருவர், நோயாளி, அவருடைய உறவினர் மற்றும் டாக்டர் என ஐந்து பேருடன் ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று புறப்பட்டது. விமானத்தின் லேண்டிங் கியர் வேலை செய்யாததால் உடனடியாக விமானத்தை தரையிறக்க விமானி முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வசே விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க விமானி உதவிக் கேட்டார். விமானத்தை தரையிறக்க அனுமதி கிடைத்ததும், பெல்லி-லேண்டிங் உருவாக்கப்பட்டு விமானம் தரையிறக்கப்பட்டது. பெல்லி-லேண்டிங் ஆபத்தானது என்பதால் விமான நிலையத்தின் அவசர உதவிக்கான தீயணைப்பு, மீட்ப்புப்பணியாளர்கள், மருத்துவக்குழு விமானத்தில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டு சிகிச்சை அளிக்க தயார்படுத்தப்பட்டார்கள்  விமானம் ரன்வேயில் இறங்கும்போது தீப்பிடிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை காரணமாக நுரைகள் தெளிக்கப்பட்டிருந்தன. விமா...
மக்கள் நீதி மய்ய கூடாரம் காலி! முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா!!

மக்கள் நீதி மய்ய கூடாரம் காலி! முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா!!

HOME SLIDER, NEWS, politics
  மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அக்கட்சியில் துணைத் தலைவர் பதவி வகித்து வந்த மகேந்திரன் மற்றும் குமரவேல், மவுரியா, முருகானந்தம், சந்தோஷ்பாபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகியுள்ளனர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. ஒரு தொகுதியில் கூட மக்கள் நீதி மய்யம் வெற்றி பெறவில்லை. கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் தோல்வியை தழுவினார். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சியில் பெரிய மாற்றம் செய்ய இருப்பதாகவும், அது கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகளான மகேந்திரன், பொன்ராஜ், மவுரியா உள்ளிட்ட 10 நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகியுள்ளனர் இந்நிலையில் மகேந்திரன் வெளியிட்டுள்ள ராஜினாமா கடிதத்தில், நான் கனத்த இதயத்துடனும், தெளிவா...
சமந்தா – நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?!

சமந்தா – நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
சமந்தா - நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?! 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. அதன்பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது. தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். பின்னர் தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமந்தா - நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இத்தம்பதியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.122 கோடியாம், இதில் சமந்தாவின் சொத்து மதிப்பு ரூ.84 ...
நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா!

நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா! தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. நடிகை மட்டுமல்லாமல் இவர் சிறந்த பாடகியும் ஆவர். நடிகை ஆண்ட்ரியா ‘வடசென்னை’ ‘தரமணி’ போன்ற படங்களில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார். இவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ‘பிசாசு 2’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: “கடந்த வாரம் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. என்னை கவனித்துக்கொண்ட நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி. தற்போது நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். நன்றாக குணமடைந்து வருகிறேன்” என தெரிவித்துள்ளார்....
‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் பிரபலம் கோமகன் கொரோனாவுக்கு பலி!

‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் பிரபலம் கோமகன் கொரோனாவுக்கு பலி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் பிரபலம் கோமகன் கொரோனாவுக்கு பலி! சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்ற ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலில் நடிகை சினேகாவுடன் நடித்தவர் மாற்றுத்திறனாளியான கோமகன். இவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார். பார்வையற்றவரான கோமகன் ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலில், ‘மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும் அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்’ என்ற வரியை உணர்ச்சிப்பூர்வமாக பாடி இருப்பார். இந்தப் பாடல் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்தது. இதனால் கோமகன் பிரபலம் அடைந்தார். அவர் இசை பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். 2019-ம் ஆண்டு தமிழக அரசின் விருதினை பெற்றார். இந்நிலையில், கோமகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஐ.சி.எப்.பில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்...
ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து!

ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்து இருந்தார். இதற்காக 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அறிவித்து இருந்தார். அதில் அரிசி ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் முக்கியமான திட்டமாகும். ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டத்தை கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி முதல் செயல்படுத்த இருப்பதாகவும் அறிவித்து இருந்தார். தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் நாளை ஆட்சி அமைக்க உள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார். பதவி ஏற்றதும் கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துவார். அதன் பிறகு கோட்டைக்கு செல்கிறார்...
தமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு!

தமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு! தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. கடந்த 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. தனியாக செயல்படும் மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி இன்று காலையில் மளிகை மற்றும் காய்கறி கடைகள் மட்டுமே 6 மணியில் இருந்து செயல்பட்டன. இந்த கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. மளிகை மற்றும் காய்கறி கடைகளிலும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டு...
மளிகை, காய்கறி, டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் – புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!

மளிகை, காய்கறி, டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் – புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
மளிகை, காய்கறி, டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் - புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்! மளிகை, காய்கறி, டீ கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் என்ற அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலாகிறது. தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை உருவெடுத்து, கொடூரமாக தாக்கி வருகிறது. நோய்த் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இதுதவிர ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் சனிக்கிழமைகளில் மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளில் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் கொரோனாவின் நோய் ...