ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

கொரோனா பாதிப்பு…. நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

கொரோனா பாதிப்பு…. நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கொரோனா பாதிப்பு.... நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்! கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை நடிகர் பாண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி குமுதா, தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். பாண்டு - குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய 3 மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த நடிகர் பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார். அதிமுக கட்சியின் கொடியை வடிவமைத்ததும் பாண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டுவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்....
முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி!

முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி! தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். குறிப்பாக திரையுலகிலிருந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலரும் அவருக்கு நேரிலும் சமூக வலைதளம் மூலமும், தொலைபேசியிலும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்கள். இந்த நிலையில் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்பட 67 பேர் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் அவர்கள் 14 கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை, கூடங்குளம் உள்பட 14 கோரிக்கைகள் அவர்களுடைய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாகவும், அந்த கோரிக்கைகளை கூடிய விரைவில் நிறைவேற்றும்படியும் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்பட 67 பேர் கையெழுத்து போட்டு கொடுத்திருப்பதாக தகவல்கள்...
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டத்தால் பரபரப்பு!

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டத்தால் பரபரப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டத்தால் பரபரப்பு! கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளிலும் இதேநிலை நீடிக்கிறது. தமிழகத்திலும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 23 ஆயிரத்து 310 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 167 பேர் இறந்துள்ளனர். இதற்கிடையே டெல்லி, கர்நாடகா மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில், வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடந்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 4 ...
ஆக்சிஜன் இல்லா மரணம்.. இனப்படுகொலைகளுக்கு சமமானது – அலகாபாத் உயர் நீதிமன்றம் காட்டம்

ஆக்சிஜன் இல்லா மரணம்.. இனப்படுகொலைகளுக்கு சமமானது – அலகாபாத் உயர் நீதிமன்றம் காட்டம்

HOME SLIDER, NEWS
  ஆக்சிஜன் சப்ளை இல்லாமல் தட்டுப்பாடுகளினால் கொரோனா நோயாளிகள் மரணமடைவது இனப்படுகொலைகளுக்கு குறைவானதல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது கொரோனா பரவல் மற்றும் கொரோனா தனிமைப்படுத்துதல் மையங்கள் நிலவரம் குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சித்தார்த் வர்மா, அஜித் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது, ஆக்சிஜன் சப்ளை தட்டுப்பாடுகளினால் மருத்துவமனைகளில் நோயாளிகள் இறப்பது எங்களுக்கு வலியை தருகின்றது, இது குற்றச்செயல், இனப்படுகொலைக்கு சற்றும் குறைந்ததல்ல நாம் எப்படி நம் மக்களை இப்படி சாக விடலாம். அதுவும் விஞ்ஞானம் இவ்வளவு முன்னேற்றம் அடைந்த நிலையில் இருதய மாற்று அறுவை சிகிச்சை, மூளை அறுவை சிகிச்சையெல்லாம் வெற்றிகரமாக நடைபெறும் போது இதில் நாம் இப்படி அசட்டையாக இருக்கலாமா? என உத்தரபிரதேச அரசுக்கு நீ...
மதுரை கீழடி மூடியுடன் கூடிய மண்பானை கண்டெடுப்பு!

மதுரை கீழடி மூடியுடன் கூடிய மண்பானை கண்டெடுப்பு!

HOME SLIDER, NEWS, politics
  மதுரை கீழடியில் நடந்து வரும் ஏழாம் கட்ட அகழாய்வின்போது மூடியுடன் கூடிய மண்பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 13ஆம் தேதியில் இருந்து கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதுவரை ஐந்து குழிகள் தோண்டப்பட்டுள்ளதாகவும் இருவண்ணப் பானைகள், பானை ஓடுகள், பகடை, கல்லால் ஆன உழவுக் கருவி உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், மூன்றாவதாகத் தோண்டப்பட்ட குழியில் இருந்து ஒன்றரை அடி உயரத்திலான மண்பானை கிடைத்துள்ளது. இப்பானை உடையாமல், மூடியுடன் இருப்பது ஆய்வாளர்களிடம் வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை சேதமடைந்த நிலையிலேயே பானைகள் கிடைத்து வந்த நிலையில், முழுவதும் மூடப்பட்ட நிலையில் இந்தப் பானை கிடைத்துள்ளது. இறுக்கமாக மூடப்பட்டுள்ள நிலையில் பானை கிடைத்துள்ளதால் அதனுள்ளே வேறு பொருள்கள் இருக்கக்கூடும் எனத் த...
தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்!

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்!

HOME SLIDER, NEWS, politics
  தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக விதிக்கப்பட்டு வருகிறது கடந்த மாதம் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு தினமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து கடைகளையும் இரவு 9 மணிக்குள் மூடிவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு பிறகு அவசர தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி வெளியில் யாராவது வாகனங்களில் வந்தால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தமிழகத்தில் தேர்தல் முடிந்து புதிய அரசு நாளை மறுநாள் பொறுப்பேற்க உள்ளது. அதே நேரத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது. அது நாளை அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி நா...
கவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரினார்!

கவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரினார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரினார்! தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் தி.மு.க. மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. கூட்டணி கட்சி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து தி.மு.க.வுக்கு 133 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. புதிய ஆட்சியை ஏற்படுத்த முறைப்படி சட்டசபை தி.மு.க. தலைவரை தேர்வு செய்ய தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் கூட்டத்தை பொதுச் செயலாளர் துரைமுருகன் கூட்டினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று மாலை 6...
கிண்டலடித்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்!

கிண்டலடித்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கிண்டலடித்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்! தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வரும் பிரியா பவானி சங்கர், தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவரை, கிண்டலடித்து பதிவிட்டு வந்தனர். இதற்கு நடிகை பிரியா பவானி சங்கர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். நெட்டிசன் ஒருவர், “மேடம் நீங்களும் திருட்டு திராவிட சொம்பு தான” எனக் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த பிரியா பவானி சங்கர், “பெரிய சிஐடி... ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி இதுல என்ன பெருமை? என் டைம்லைன்ல இன்னும் தானே இருக்கு? 4 வருஷம் பத்திரிக்கை துறைல இருந்திருக்கேன். என் வேலையே அதுதான். இன்னும் நிறைய எழுதிருக்கேன். நன்கு தேடவும்” எனக் குறிப்பிட்டிருந்தார். மற்றொருவர், “மேடம் இன்னும் 5 வருஷத்துல சன...
மேற்கு வங்காள முதல்வராக 3வது முறையாக இன்று பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி!

மேற்கு வங்காள முதல்வராக 3வது முறையாக இன்று பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மேற்கு வங்காள முதல்வராக 3வது முறையாக இன்று பதவியேற்கிறார்! மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. 66 வயதாகும் மம்தா, காலில் காயமடைந்த நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தேர்தல் களத்தில் சுழன்று, வரலாற்று வெற்றியை சாதித்திருக்கிறார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மம்தா, தொடர்ந்து 3-வது முறையாக முதல்-மந்திரியாக இன்று பதவியேற்கிறார். கொல்கத்தாவில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் இன்று காலை 10.45 மணிக்கு அவர் பதவிப்பிரமாணம் எடுப்பார். தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்தில்கொண்டு, பதவியேற்பு நிகழ்வு குறைந்த நபர்களுடன் எளிமையாக நடைபெறும் என ராஜ்பவன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ம...
நடிகை கங்கனாவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்!

நடிகை கங்கனாவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகை கங்கனாவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்! பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் நடிப்பில் தற்போது தலைவி படம் உருவாகி உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகை கங்கனா, ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ளார். கொரோனா காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. டுவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் கங்கனா, அரசியல் கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வந்தார். சில சமயங்களில் அதன்மூலம், அவர் சர்ச்சையில் சிக்குவதும் உண்டு, அந்தவகையில், தற்போது மேற்குவங்க தேர்தல் மற்றும் அம்மாநிலத்தில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து கங்கனா தெரிவித்த கருத்துகள், அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. டுவிட்டர் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி, நடிகை கங்கனாவின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது....