ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?- முன்னணி நிலவரம் நாளை காலை 11 மணிக்கு தெரியும்!

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?- முன்னணி நிலவரம் நாளை காலை 11 மணிக்கு தெரியும்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?- முன்னணி நிலவரம் நாளை காலை 11 மணிக்கு தெரியும்! தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டு உள்ளன. அறைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தமிழகம் முழுவதும் 75 மையங்களில் எண்ணப்படுகின்றன. இதற்காக தலைமை தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் 500 தபால் வாக்க...
அதிகரிக்கும் கொரோனா பரவல்: இந்தியாவுக்கு உதவ தயார் – சீன அதிபர் ஜி ஜின்பிங்!

அதிகரிக்கும் கொரோனா பரவல்: இந்தியாவுக்கு உதவ தயார் – சீன அதிபர் ஜி ஜின்பிங்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
அதிகரிக்கும் கொரோனா பரவல்: இந்தியாவுக்கு உதவ தயார் - சீன அதிபர் ஜி ஜின்பிங்! கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா கடும் பாதிப்பையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகிறது. இதனால்  இந்தியாவுக்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவுக்கு தேவையான மருத்துவ உதவி பொருட்கள் பல நாடுகளில் இருந்து வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக போராடுவதில் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீன அரசு தொலைக்காட்சி இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சீன அரசு தொலைக்காட்சியில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை அதிகரிக்க சீனா தயாராக உள்ளது. இந்தியாவுக்கு ஆதரவு மற்றும் உதவிகளை வழங்க சீனா தயாராக உள்ளது என ஜி ஜின்பிங் கூறினார் என்று தெர...
ஜப்பானில் 6.6 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்!

ஜப்பானில் 6.6 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
ஜப்பானில் 6.6 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்! ஜப்பானின் ஹோன்சு நகரில் கிழக்கு கடற்கரையோர பகுதியில் இன்று காலை 6.57 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக...
ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் பயன்பாட்டை கண்காணியுங்கள்- மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் பயன்பாட்டை கண்காணியுங்கள்- மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் பயன்பாட்டை கண்காணியுங்கள்- மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்! நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தினமும் 3 லட்சத்துக்கு மேலாக அதிகரித்து வருகிறது. கொரோனா சிகிச்சையில் ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிக்கிறது. நோயாளிகள் எண்ணிக்கை பெருகும்போது, ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை சமாளிக்க பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதையொட்டி மத்திய சுகாதார துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடங்கியதில் இருந்து, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை மத்திய அரசு முக்கிய மருத்துவ தலையீடாக அடையாளம் கண்டது. 1 லட்சத்து 2 ஆயிரத்து 400 ஆக்சிஜன் சிலிண்டர்களை தேசிய அளவில் கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மத்திய அரசு கொள்முதல் செய்தது. ஏப்ரல் 21-ந் தேதியன்று ...
தமிழக சட்டசபை தேர்தல்- வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது!

தமிழக சட்டசபை தேர்தல்- வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக சட்டசபை தேர்தல்- வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது! தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சர் யார் என்ற கேள்வியுடன், தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடந்தது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. சென்னையில் 16 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ராணி மேரி, லயோலா, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட...
ராகுல், ஹர்பிரீத் அபாரம் – ஆர்சிபி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பஞ்சாப்!

ராகுல், ஹர்பிரீத் அபாரம் – ஆர்சிபி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பஞ்சாப்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
ராகுல், ஹர்பிரீத் அபாரம் - ஆர்சிபி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பஞ்சாப்! ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அகமதாபாத்தில் 26-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 7 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஆடிய கெய்ல் ராகுலுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். கெய்ல் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் பூரன் 0, ஹூடா 5, ஷாருக்கான் 0, என அடுத்தடுத்து வெளியேறினார். இதனையடுத்து ராகுலுடன் ஹர்பிரீத் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். இந்த ஜோடி கடைசி ஓவரில் 22 ரன்கள் குவித்தது. ராகுல் 51 பந்துகளில் 91 ரன்களும் ஹர்பிரீத் 17 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ...
2வது டெஸ்டில் கருணரத்னே, திரிமானே சதம் – இரண்டாம் நாள் முடிவில் இலங்கை 469/6!

2வது டெஸ்டில் கருணரத்னே, திரிமானே சதம் – இரண்டாம் நாள் முடிவில் இலங்கை 469/6!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
2வது டெஸ்டில் கருணரத்னே, திரிமானே சதம் - இரண்டாம் நாள் முடிவில் இலங்கை 469/6! வங்காளதேசம் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கருணரத்னே, லஹிரு திரிமானே ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடி அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 209 ரன்னாக உயர்ந்த போது 12-வது சதத்தை அடித்து இருந்த கருணரத்னே (118 ரன், 190 பந்து, 15 பவுண்டரி) கேட்ச் ஆனார். திரிமன்னே 212 பந்துகளில் தனது 3-வது சதத்தை பூர்த்தி செய்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி முதல்...
என் எதிர்காலம் பிரகாசமானது உங்கள் மூலம்தான் – கே.வி.ஆனந்த்  மறைவிற்கு நடிகர் சூர்யா இரங்கல்!

என் எதிர்காலம் பிரகாசமானது உங்கள் மூலம்தான் – கே.வி.ஆனந்த்  மறைவிற்கு நடிகர் சூர்யா இரங்கல்!

HOME SLIDER, NEWS, நடிகர்கள்
என் எதிர்காலம் பிரகாசமானது உங்கள் மூலம்தான் - கே.வி.ஆனந்த்  மறைவிற்கு நடிகர் சூர்யா இரங்கல்! பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கே.வி. ஆனந்த் சார்.. இது 'பேரிடர் காலம்' என்பதை உங்கள் மரணம் அறைந்து நினைவூட்டுகிறது. நீங்கள் இல்லை என்கிற உண்மை, மனமெங்கும் அதிர்வையும் வலியையும் உண்டாக்குகிறது. ஏற்க முடியாத உங்கள் இழப்பின் துயரத்தில், மறக்க முடியாத நினைவுகள் அலை அலையாக உயிர்த்தெழுகின்றன. நீங்கள் எடுத்தப் புகைப்படங்களில்தான், 'சரவணன் சூர்யாவாக மாறிய அந்த அற்புதத் தருணம் நிகழ்ந்தது. 'முன்பின் அறிமுகமில்லாத ஒருவனை சரியான கோணத்தில் படம்பிடித்துவிட வேண்டுமென, இரண்டு மணிநேரம் நீங்கள் கொட்டிய உழைப்பை இப்போதும் வியந்து பார்க்கிறேன். 'மெட்ராஸ் டாக்கீஸ்' ...
திமுக வெற்றியை வீதியில் கூடி கொண்டாட வேண்டாம் வீடுகளிளேயே கொண்டாடுங்கள் – மு.க.ஸ்டாலின்

திமுக வெற்றியை வீதியில் கூடி கொண்டாட வேண்டாம் வீடுகளிளேயே கொண்டாடுங்கள் – மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics
  திமுக வெற்றியை வீதியில் கூடி கொண்டாட வேண்டாம் வீடுகளிளேயே கொண்டாடுங்கள் - மு.க.ஸ்டாலின் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை   சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் விரைவில் வெளிவரப்போகும் தருணத்தை எதிர்பார்த்துக் கழகத்தைச் சார்ந்தவர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதை நான் அறிவேன். வாக்களிப்பதற்கு முன்பும் வாக்களித்த பின்பும் தமிழ்த் திருநாட்டின் வாக்காளர் பெருமக்களிடம் பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றும் என்கிற உற்சாகமான தகவல் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றது. தமிழகமோ பெருந்தொற்றின் காரணமாகத் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. படுக்கைகள் கிடைக்காமலும், உயிர்வாயு கிடைக்காமலும் நோயாளிகள் அவதிப்படும் நிலையை ஊடகங்களில் பார்த்து நான் பதைபதைத்துப் போகிறேன். இந்தச் சூழலில் வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்தோ,...
வீரர்களிடம் நிறைய திறமை இருந்தும் சரியாக வெளிபடுத்தவில்லை – கொல்கத்தா கேப்டன் மார்கன் வேதனை!

வீரர்களிடம் நிறைய திறமை இருந்தும் சரியாக வெளிபடுத்தவில்லை – கொல்கத்தா கேப்டன் மார்கன் வேதனை!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
வீரர்களிடம் நிறைய திறமை இருந்தும் சரியாக வெளிபடுத்தவில்லை - கொல்கத்தா கேப்டன் மார்கன் வேதனை! 14-வது ஐ.பி.எல். போட்டியில் அகமதாபாத்தில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்தது. ஆந்த்ரே ரசல் 45 ரன்னும், சுப்மன்கில் 43 ரன்னும் எடுத்தனர். டெல்லி தரப்பில் அக்சர் படேல், லலித் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா, ஷிகர் தவான் நல்ல அடித்தளம் அமைத்தனர். குறிப்பாக பிரித்விஷா அதிரடியாக விளையாடினார். ஷிவம் மாவி வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் பிரித்விஷா 6 பவுண்டரி அடித்து அசத்தினார். அவர் 41 பந்தில் 82 ரன் எடுத்தார். இதில் 11 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும். டெல்லி அண...