ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

சாதி பார்த்து ஓட்டு இடாதீர்கள்… சாதிப்பவனை பார்த்து ஓட்டு இடுங்கள் – கமல்ஹாசன்

சாதி பார்த்து ஓட்டு இடாதீர்கள்… சாதிப்பவனை பார்த்து ஓட்டு இடுங்கள் – கமல்ஹாசன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தை சீரமைப்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து பேசி வருகிறார். அதன்படி நேற்று திருப்பூரில் பயணத்தை முடித்து ஈரோடு மாவட்டத்தில் பயணத்தை தொடங்கினார். கோபி, கவுந்தப்பாடி, பவானி, சித்தோடு, கனிராவுத்தர் குளம், பி.பி.அக்ரகாரம், கே.என்.கே. ரோடு மற்றும் கருங்கல்பாளையம் பகுதியில் அவர் பொதுமக்களை சந்தித்தார். அவர் கனிராவுத்தர் குளம் பகுதிக்கு இரவு 8.45 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இரவு 10 மணிக்கு பிறகே அவரால் அங்கு வர முடிந்தது. அங்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசவில்லை. திறந்த காரில் நின்று கொண்டு புன்னகையுடன் மக்களைப்பார்த்து 2 கைகளின் கட்டை விரல்களையும் உயர்த்தி வெற்றிச்சின்னம் காட்டினார். மக்களிடம் தனது அன்பை வெளிப்படுத்தும் வகையிலும், மக்கள் நீதி மய்யம் கட்சி கொடிய...
6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி – தமிழக அரசு உத்தரவு

6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி – தமிழக அரசு உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மதுரை மாவட்டம் மதுரை (தெற்கு) தாலுகாவில் உள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கப்பட்டு ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் முதன்மைச் செயலாளர் கே.கோபால் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- விலங்குகளுக்கு எதிரான கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், தமிழகத்தில் சில இடங்களில் 15-ந் தேதியில் இருந்து 31-ந் தேதிவரை ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கவர்னர் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் பெரியகலையம்புதூர், உள்ளகம்பட்டி, ஏ.வெள்ளோடு; கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம், அலிசீபம், செம்படமுத்தூர், குப்பாச்சிபாறை. தேனி மாவட்டம் பல்லவராயம்பட்டி; திருப்பூர் மாவட்டம் அழகுமலை; புதுக்கோட்டை மாவட்டம்...
வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறுத்தவில்லையென்றால் நாங்கள் செய்வோம் – உச்ச நீதிமன்றம் அதிரடி

வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறுத்தவில்லையென்றால் நாங்கள் செய்வோம் – உச்ச நீதிமன்றம் அதிரடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்கவில்லையென்றால் அதனை நாங்கள் செய்வோம் என்று என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் காட்டமாக தெரிவித்துள்ளது மத்திய அரசு கொண்டுவந்துள்ளள வேளாண் சீர்திருத்தச் சட்டங்களுக்கு பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் ஒரு மாத காலத்துக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில், மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்துவது குறித்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை என்று நீதிபதி போப்டே கூறினார். மேலும் பிரச்னைகளுக்கு தீர்வு காண குழு அமைக்கவும் தலைமை நீதிபதி மத்திய அரசுக்கு பரி...
தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் செய்த அனைவரையும் ஜெயிலுக்கு அனுப்புவோம் – உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் செய்த அனைவரையும் ஜெயிலுக்கு அனுப்புவோம் – உதயநிதி ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள், நடிகர்கள்
தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் செய்த அனைவரையும் ஜெயிலுக்கு அனுப்புவோம் - உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிர கவனம் செலுத்திவருகிறது. குறிப்பாக, தி.மு.க சார்பில், உதயநிதி ஸ்டாலின் ஒரு மாதத்துக்கு முன்னதாகவே அவருடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். இந்தநிலையில், தென்சென்னையில் திமுக சார்பில் பொங்கல் விழா தியாகராய நகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உதயநிதி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘தமிழகம் முழுக்க தான் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதாக தெரிவித்தார். தாம் வெறும் டிரெய்லர் தான். மெயின் பிக்சர் மு.க.ஸ்டாலின் என்றார். தியாகராய நகர் மற்றும் மயிலாப்பூர் ஆகிய இரண்டு தொ...
சத்குரு தெரிவித்த ஆன்மீகத்தின் நோக்கம் – இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சமந்தா!

சத்குரு தெரிவித்த ஆன்மீகத்தின் நோக்கம் – இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சமந்தா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
சத்குரு தெரிவித்த ஆன்மீகத்தின் நோக்கம் - இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சமந்தா! தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா. சமீபத்தில் சத்குருவை சந்தித்த நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் அதைப்பற்றி பதிவிட்டுள்ளார். “ஆன்மீக செயல்முறையின் முழு பயிற்சி என்பது நீங்கள் உங்களுக்குள் வரையப்பட்ட எல்லைகளை உடைத்து மகத்தான அனுபவத்தை அனுபவிப்பதே ஆகும். ஆன்மீகத்தின் நோக்கம் என்பது உங்கள் அறியாமையின் விளைவாக நீங்கள் உருவாக்கி வரையறுக்கப்பட்ட அடையாளத்திலிருந்து உங்களை நீங்களே உருவாக்கிக் கொண்டு வாழ்வது தான். இது ஆனந்தமான ஒரு எல்லையற்ற பொறுப்பு. அறிவு மட்டும் சாதனை அல்ல. உங்களது புலன்கள் அனைத்து ஒரு வெளிப்புற தோற்றத்தை தருகின்றன. ஆனால் உண்மையான வெளிப்புறத்தை நீங்கள் ஒருபோதும் அனுபவித்திருக்க மாட்டீர்கள். நீங்கள் அனுபவிக்கும் அனைத்தும் உங்களுக்குள் இருப்பதை நீங்கள் உணரும் போது நீங்கள் உண்...
மத்திய  மந்திரி கார் விபத்து – மந்திரியின் மனைவி உயிரிழப்பு

மத்திய மந்திரி கார் விபத்து – மந்திரியின் மனைவி உயிரிழப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மந்திரி கார் விபத்து - மந்திரியின் மனைவி உயிரிழப்பு மத்திய பாதுகாப்பு மற்றும் ஆயுஷ்துறை இணை மந்திரியாக செயல்பட்டு வருபவர் ஸ்ரீபாத் நாயக். இவர் தனது மனைவி விஜயா நாயக் மற்றும் உதவியாளர்கள் சிலருடன் இன்று மாலை கர்நாடக மாநிலம் எல்புரா பகுதியில் இருந்து கொஹர்னா என்ற பகுதிக்கு காரில் பயணம் செய்துகொண்டிருந்தனர். மத்திய இணை மந்திரி பயணம் செய்த கார் உத்தர கன்னடா மாவட்டம் அகோலா தாலுக்கா ஹசோஹமி என்ற கிராமம் அருகே சென்றபோது விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் மத்திய இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக், அவரது மனைவி விஜயா மற்றும் உதவியாளர்கள் 3 பேரும் காயமடைந்தனர். குறிப்பாக மத்திய மந்திரியின் மனைவி விஜயாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த விபத்தையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை...
பஞ்சுப் பொங்கல், விறகில்லா அடுப்பு என செட்டப் பொங்கல் விழா பா.ஜ.கவின் ஏமாற்று வேலைகளில் இதுவும் ஒன்று

பஞ்சுப் பொங்கல், விறகில்லா அடுப்பு என செட்டப் பொங்கல் விழா பா.ஜ.கவின் ஏமாற்று வேலைகளில் இதுவும் ஒன்று

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பஞ்சுப் பொங்கல், விறகில்லா அடுப்பு என செட்டப் பொங்கல் விழா பா.ஜ.கவின் ஏமாற்று வேலைகளில் இதுவும் ஒன்று தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற நினைக்கும் பா.ஜ.க., பல்வேறு நாடகங்களை அடிக்கடி அரங்கேற்றி வருகிறது. குறிப்பாக, கடவுளின் பெயரில் யாத்திரை நடத்துவதாக கூறி, கூட்டத்தைக் கூட்ட சினிமா டான்ஸர்களை குத்தாட்டம் போட வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது வந்தது. பா.ஜ.கவின் இதுபோன்ற ஏமாற்று வேலைகளை தமிழக மக்கள் அடையாளம் கண்ட நிலையில், விறகில்லா அடுப்பு, பஞ்சுப் பொங்கல் என சினிமா சூட்டிங் பாணியில் நடத்திய பா.ஜ.கவினரின் பொங்கல் விழாவை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். மதுரை தெப்பகுளம் பகுதியில், பா.ஜ.க-வினர் சார்பில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழா பா.ஜ.க செய்தி தொடர்பாளர் குஷ்பு தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட பெண்கள் பலர் விழா நட...
“தற்போது சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது”-மு.க.ஸ்டாலின்

“தற்போது சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது”-மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
“தற்போது சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது”, “அநீதி அ.தி.மு.க. ஆட்சி விரைவில் வீழும். தி.மு.க. ஆட்சியை நிலைநாட்ட கழகச் சட்டத்துறை சகோதரர்கள் தங்களது பங்களிப்பை தொய்வில்லாமல், தொடர்ந்து செய்ய வேண்டும்!” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (10-01-2021) மாலை, சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.வில் நடைபெற்ற தி.மு.க. சட்டத்துறை இரண்டாவது மாநாடு, சட்ட மற்றும் அரசியல் கருத்தரங்கில் பங்கேற்று சிறப்புரை ஆற்றியானர். தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை அமைப்புகளில் ஒன்றான சட்டத்துறை சார்பில் நடைபெறும் சட்டக் கருத்தரங்கம் மற்றும் அரசியல் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சட்டக் கருத்தரங்கம் - அரசி...
பொள்ளாச்சி கொடூரம்: தமிழகத்தில் பாலியல் கொடுமை, பெண் வன்கொடுமை அதிகரித்து வருகின்றது – கனிமொழி எம்.பி

பொள்ளாச்சி கொடூரம்: தமிழகத்தில் பாலியல் கொடுமை, பெண் வன்கொடுமை அதிகரித்து வருகின்றது – கனிமொழி எம்.பி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மக்கள் முன்னிலையில் பேசிய கனிமொழி எம்.பி., “பொள்ளாச்சி போராட்டத்தை தடுக்க முயன்றனர். இந்த போராட்டத்தை தடுத்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என தளபதி எச்சரிக்கை விடுத்ததையடுத்து, காவல்துறை பணிந்தது. இதை தடுத்தால் வெகுண்டு எழுவோம். பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்டவரின் பெயர்களை காவல்துறையே கூறியது. இன்று வரை அந்த கும்பல் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி வருகின்றனர். ஆளுங்கட்சியினர் தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும் என நினைக்கிறனர். அதிமுகவினருடனான ஆதாரங்கள் தொடர்ந்து வந்துகொண்டுள்ளது. எஸ்.பி.வேலுமணிக்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் இடையே என தொடர்பு இருக்குனு பாருங்க. அதிமுக அமை...
“ஆரசியல் சாசனத்திற்கு ஆபத்து” – திமுக சட்டக்குழு கருத்தரங்கில் ஆ.ராசா பேச்சு!

“ஆரசியல் சாசனத்திற்கு ஆபத்து” – திமுக சட்டக்குழு கருத்தரங்கில் ஆ.ராசா பேச்சு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டக்குழு சார்பில் சட்ட கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய தி.மு.க. துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ..ராசா மேடைப்பேச்சின் விவரம் பின்வருமாறு:- எத்தனை இயக்கங்கள் , எந்த அரசு இது போன்ற சட்ட கருத்தரங்கம் நடத்தி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், சட்ட கருத்தரங்கை நடத்த இருக்கும் முழு தகுதி திராவிட இயக்கத்திற்கு உண்டு என்பதை எடுத்துரைத்தார். அரசியல் சட்டத்திற்கு என்ற ஒரு ஒழுங்குமுறையை வகுத்திருக்கிறார்கள். பல்கிவாலா அவரின் உழைப்பு மற்றும் சட்ட உரிமைகள் நிலை குறித்து தெரிவித்தார். அடிப்படை சட்ட திருத்தங்களை, முகப்பு உள்ள கூறுகளை நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றினால் தவறு என்று கூறுவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு உரிமை இருக்கிறது இது போன்ற அடிப்படைத் தன்மை மாற்றக்கூடாது...