ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- புகழ்ந்து தள்ளிய டிரம்ப்!

இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- புகழ்ந்து தள்ளிய டிரம்ப்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- புகழ்ந்து தள்ளிய டிரம்ப்! அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் முறையாக 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அகமதாபாத் வந்த டிரம்ப்பை பிரதமர் மோடி வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் சென்றார் டிரம்ப். பின்னர் தனது முதல் நிகழ்ச்சியாக அகமதாபாத் மொடேரா ஸ்டேடியத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் பேசினார். பேச்சைத் தொடங்கும் போது. ‘நமஸ்தே’ எனக் கூறி தனது உரையைத் தொடங்கினர் டிரம்ப். தொடர்ந்து அவர் பேசியதாவது:- எனது உண்மையான நண்பர் மோடி. எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த நண்பர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்தியாவுக்காக பிரதமர் மோடி இரவு பகலாக உழைக்கிறார். இணையதள சேவை மற்றும் சமையல் எரிவாயு சேவையை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார் மோடி.  கடின உழைப்பால் எதையும் சாதிக்க முடியும...
முதல் முறையாக இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

முதல் முறையாக இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அகமதாபாத் விமானநிலையத்தில் அதிபர் டிரம்பை கட்டித் தழுவி வரவேற்றார் பிரதமர் மோடி. விமான நிலையத்தில் அதிபர் டிரம்பிற்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வர‌வேற்பு-இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோர் தனி விமானத்தில் அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தனர்-அதிபர் டிரம்பின் முதல் இந்திய பயணம் இதுவாகும்.   அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். சபர்மதி ஆசிர‌ம‌ம் செல்லும் வழியில் அதிபர் டிரம்பிற்கு இந்திய கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு....
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முழு பயணத் திட்டம்! 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முழு பயணத் திட்டம்! 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முழு பயணத் திட்டம்! இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை (திங்கள்கிழமை) பிற்பகல் அகமதாபாத்திற்கு வருகிறார். இந்தியப் பயணத்தை சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தொடங்குகிறார் டிரம்ப். பிற்பகல் 12.15 மணிக்கு அவர் சபர்மதி ஆசிரமம் செல்கிறார். இதைத் தொடர்ந்து, பிற்பகல் 1.05 மணிக்கு மோட்டேரா மைதானத்தில் நடைபெறவுள்ள நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்கும் டிரம்ப், அங்கு சுமார் 1,00,000 மக்களுக்கு முன்பு உரையாற்றுகிறார். இதையடுத்து, மாலை 3.30 மணிக்கு தன்னுடைய மனைவியுடன் ஆக்ரா வருகிறார். அங்கு மாலை 5.15 மணியளவில் இருவரும் தாஜ் மஹாலுக்குச் செல்கின்றனர். ஆக்ராவிலிருந்து மாலை 6.30 மணியளவில் டெல்லி கிளம்புகிறார். இதையடுத்து, செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு வழக்கமான அ...
டிரம்ப் வருகையால் இந்தியாவுக்கு பயன் இல்லையாம் – பாஜகவை வெளுக்கும் சுப்பிரமணியசாமி!

டிரம்ப் வருகையால் இந்தியாவுக்கு பயன் இல்லையாம் – பாஜகவை வெளுக்கும் சுப்பிரமணியசாமி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் முறையாக இந்தியாவுக்கு நாளை வர உள்ளதால், இந்தியா மிகவும் பெருமைக்குரிய நாடாக இருக்கும் என பாஜகவினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையால் அமெரிக்க பொருளாதாரம் உயருமே தவிர இந்தியாவுக்கு ஒரு பைசா கூட பிரயோஜனம் இல்லை என்று பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக எம்.பி. ஆக இருந்தாலும் சந்தர்ப்பம் அமைந்தால் பாஜகவையும், அதன் தலைவர்களையும் அவ்வப்போது கடும் விமர்சனம் செய்து வருவது சுப்ரமணியசாமி வழக்கம். சமீபத்தில்கூட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை இந்த நூற்றாண்டின் முட்டாள்தனமான விஷயம் என்று அவர் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை குறித்து சுப்பிரமணியன் சாமி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் கூறும் போது " அமெரிக்காவி...
உ.பி.யில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு!

உ.பி.யில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு!

HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  உலகளவில் ஒவ்வொரு நாடும் அதனிடம் உள்ள தங்கத்தின் மதிப்பை கொண்டே அளவிடப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் பல்லாயிரக்கணக்கான டன் தங்கம் இருப்பு வைத்துள்ளன. ஆனால் இந்தியாவிடம் உள்ள மொத்த தங்கத்தின் மதிப்பே 626 டன் மட்டுமே. இந்நிலையில் இந்தியாவில் தங்க சுரங்கங்கள் குறித்த ஆராய்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. 1991ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான அரசின் சிறப்பு கவனம் தங்க சுரங்கம் கண்டுபிடிப்பில் தீவிரம் வைத்தது. இந்த சூழலில் இப்போது உத்தரபிரதேசத்தில் சோன்பத்ரா பகுதியில் இரண்டு பெரும் தங்க படிமங்கள் கொண்ட பகுதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சோன்பாஹ்தி என்ற பகுதியில் 2700 டன் தங்க படிமங்களும், ஹார்டி பகுதியில் 650 டன் தங்க படிமங்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்போது இந்தியாவிடம் இருக்கும் தங்கத்தை விட இது 5 மடங்கு அதிகமாகும். ...
கர்நாடகா சட்டப் பேரவைக்குள் பத்திரிகையாளர்கள் நுழையத் தடை!

கர்நாடகா சட்டப் பேரவைக்குள் பத்திரிகையாளர்கள் நுழையத் தடை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கர்நாடகா சட்டப் பேரவைக்குள் பத்திரிகையாளர்களுக்குத் தடை கர்நாடக சட்டப்பேரவைக்குள் பத்திரிகையாளர்கள் நுழைய தடை விதித்து பேரவைத் தலைவர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி உத்தரவிட்டார். இது தொடர்பாக பிப் 18ஆம் தேதி வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது அனைத்து தொகுதிகளையும் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள். பேரவைத் தொடரின் போது இங்கு தங்கியிருப்பது எம்எல்ஏக்களின் தனிப்பட்ட நேரமாகும். ஆனால், பத்திரிகையாளர்கள் பேரவைக்குள் வருவதன் மூலம் உறுப்பினர்களின் தனிப்பட்ட நேரம் பாதிக்கப்படுகிறது. எனவே, பேரவைக்குள் பத்திரிகையாளர்கள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. எம்எல்ஏக்கள் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் விதமாக பேரவையின் வெளியே ஒரு பகுதி ஏற்பாடு செய்து தரப்படும் என்று அனைத்து ஊடகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது....
சட்டப்பேரவை கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    சட்டப்பேரவை கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு! தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்தது. பல்வேறு வாதங்கள், சட்ட மசோதா நிறைவேற்றம் உள்ளிட்ட பரபரப்பான கூட்டம் இன்று நிறைவு பெற்றது. தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் பேரவையை ஒத்தி வைத்தார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெற்றது. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கடந்த 14-ம் தேதி இந்த ஆட்சிக்கான கடைசி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிந்து பட்ஜெட் நிறைவேறியதும் கூட்டத்தொடர் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது....
சரக்கு சேவை வரிதான் 21-ம் நூற்றாண்டின் ‘மிகப்பெரிய பைத்தியகாரத்தனம் சு.சாமி பரபரப்பு பேச்சு

சரக்கு சேவை வரிதான் 21-ம் நூற்றாண்டின் ‘மிகப்பெரிய பைத்தியகாரத்தனம் சு.சாமி பரபரப்பு பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சரக்கு சேவை வரிதான் 21-ம் நூற்றாண்டின் ‘மிகப்பெரிய பைத்தியகாரத்தனம் சுப்பிரமணிய சாமி பரபரப்பு பேச்சு ஐதராபாத்தில் பிரக்னாபாரதி சிந்தனையாளர் பேரவை என்ற அமைப்பு ‘ இந்தியா, 2030-க்குள் ஒரு பொருளாதார வல்லரசு’ என்ற தலைப்பில் நேற்று ஒரு கருத்தரங்கு நடத்தியது. இதில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பாரதீய ஜனதா கட்சி அரசு கொண்டுவந்துள்ள சரக்கு, சேவை வரியை கடுமையாக விமர்சித்தார். நிகழ்ச்சியில் சுப்பிரமணிய சுவாமி பேசியதாவது: முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதற்காக அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். நாடு அவ்வப்போது 8 சதவீத பொருளாதார வளர்ச்சி கண்டிருந் தாலும்கூட, அவர் கொண்டு வந்த சீர்த...
என் சகாக்களை இழந்து விட்டேன் – கமல் உருக்கம்

என் சகாக்களை இழந்து விட்டேன் – கமல் உருக்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  என் சகாக்களை இழந்து விட்டேன் - கமல் உருக்கம் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடித்து வரும் படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நேற்று இரவு நடந்து வந்தது. அப்போது 150 அடி உயர கிரேன் கீழே விழுந்ததில் மூன்று பேர் பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நிகழ்ந்தது குறித்து தனது ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள கமலஹாசன் ” எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என...
சென்னை ஐஐடி பெண்கள் கழிவறையில் செல்போன் கேமரா வைத்த உதவி பேராசிரியர் கைது!

சென்னை ஐஐடி பெண்கள் கழிவறையில் செல்போன் கேமரா வைத்த உதவி பேராசிரியர் கைது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சென்னை ஐஐடி பெண்கள் கழிவறையில் செல்போன் கேமரா வைத்த உதவி பேராசிரியர் கைது! சென்னை ஐஐடியில் பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த உதவி பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது   சென்னை ஐஐடியில் விண்வெளி பொறியியல் துறை ஆய்வுகூடத்தில் பெண்கள் கழிவறை ஒன்று உள்ளது. இதில் ஆராய்ச்சி மாணவி ஒருவர் சென்றபோது, அதே துறையைச் சேர்ந்த உதவிப்பேராசிரியரான சுபம் பானர்ஜி என்பவர் கழிவறையில் இருந்து வெளியே வந்துள்ளார். பெண்கள் கழிவறையில் இவருக்கு என்ன வேலை என சந்தேகம் அடைந்த அந்த மாணவி கழிவறைக்குள் சென்று உற்று கவனித்தபோது தண்ணீர் குழாய்களுக்கு இடையே இருந்த ஒரு கேப்பில் செல்போன் ஒன்றின் கேமிரா ஆன் செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த கழிவறையில் மறைந்து நின்று கொண்டிருந்த உதவிப்பேர...