ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு!

ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு!

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு! தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- * கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டீக்கடைகள் நாளை முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் முறையில் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. * பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல, இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவை காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை இயங்கலாம். இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. * பொதுமக்களின் நலன் கருதி அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் நாளை முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது. * கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், வ...
யூரோ கோப்பை – துருக்கியை 3-0 என வீழ்த்தியது இத்தாலி!

யூரோ கோப்பை – துருக்கியை 3-0 என வீழ்த்தியது இத்தாலி!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
யூரோ கோப்பை - துருக்கியை 3-0 என வீழ்த்தியது இத்தாலி! ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. யூரோ கோப்பை போட்டியில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இத்தாலியின் ரோம் நகரில் நேற்று தொடங்கிய முதல் லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள துருக்கி, இத்தாலி அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடின. இதனால் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் துருக்கி வீரர் 53-வது நிமிடத்தில் ஓன் கோல் அடித்தார். இதையடுத்து இத்தாலி அணி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இம்மொபைல் 66-வது நிமிடத்திலும், இன்சிக்னே 79-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். துருக்கி அணியால் பதிலுக்கு ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில், இத்தாலி அணி 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தி அபார வெற்ற...
ஜோடி சேர்வதற்காக 2 ஆயிரம் கி.மீ. பயணம் செய்த காண்டாமிருகம்!

ஜோடி சேர்வதற்காக 2 ஆயிரம் கி.மீ. பயணம் செய்த காண்டாமிருகம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
ஜோடி சேர்வதற்காக 2 ஆயிரம் கி.மீ. பயணம் செய்த காண்டாமிருகம்! ஆப்பிரிக்காவில் வாழும் வெள்ளை நிற காண்டா மிருகங்கள் அழியும் நிலையில் உள்ளன. இந்த விலங்கினத்தை காப்பாற்றுவதற்கு தீவிர முயற்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் தைவான் நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவில் 5 வயதான என்மா என்ற பெயருடைய வெள்ளை பெண் காண்டா மிருகம் இருக்கிறது. அது இனப்பெருக்கம் செய்வதற்கு தைவானில் ஆண் காண்டாமிருகம் இல்லை. எனவே அதனை ஜப்பான் நாட்டுக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். ஜப்பானில் டொபு உயிரியல் பூங்காவில் மொரான் என்கிற 10 வயது காண்டாமிருகம் உள்ளது. அதனுடன் ஜோடி சேர்வதற்காக என்மா காண்டாமிருகத்தை ஜப்பானுக்கு விமானத்தில் அழைத்து சென்றுள்ளனர். ஜப்பானுக்கும் தைவானுக்கும் இடையே உள்ள தூரம் 2,160 கி.மீ. ஆகும். ஆனாலும் காண்டாமிருகம் ஜோடி சேர வேண்டும் என்பதற்காக அங்கு அழைத்து சென்றுள்ளனர். சில மாதங்கள் இரு காண்ட...
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 14-ந் தேதி தொடக்கம்!

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 14-ந் தேதி தொடக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 14-ந் தேதி தொடக்கம்! அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பல பெற்றோர் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை தவிர்த்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்தனர். இதனால் சுமார் 5 லட்சம் மாணவர்கள் கடந்த ஆண்டு கூடுதலாக சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா 2-ம் அலை தமிழகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஏப்ரல் மாதத்தில் நடைபெற வேண்டிய மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டது. பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதோடு அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தடைப்பட்டது. இந்த நிலையில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வருகிற 14-ந் தேதி மு...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லணையில் ஆய்வு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லணையில் ஆய்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லணையில் ஆய்வு! திருச்சி மாவட்டம் கல்லணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நாளை மேட்டூர் அணையை திறந்து வைக்க உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கல்லணையில் ஆய்வு செய்தார்....
உலகிலேயே முதல் நாடாக எல்சல்வடாரில், பிட்காயினுக்கு சட்ட அங்கீகாரம்!

உலகிலேயே முதல் நாடாக எல்சல்வடாரில், பிட்காயினுக்கு சட்ட அங்கீகாரம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
உலகிலேயே முதல் நாடாக எல்சல்வடாரில், பிட்காயினுக்கு சட்ட அங்கீகாரம்! சத்தோஷி நகமோட்டோ என்ற ஜப்பானியரால் உருவாக்கப்பட்ட மெய்நிகர் நாணயம்தான் பிட்காயின் ஆகும். இந்த நாணயத்தை நாம் கையிலோ, பையிலோ வைத்துக்கொண்டு பயன்படுத்த முடியாது. கணினியில் கண்களால் மட்டுமே பார்க்க முடியும். பரிமாற்றம் செய்ய இயலும். இந்த நாணயம் இதுவரை உலகில் எந்தவொரு நாட்டிலும் சட்டபூர்வ அங்கீகாரத்தைப் பெறவில்லை. இந்த பிட்காயினை சட்டபூர்வ பணமாக மத்திய அமெரிக்க நாடான எல்சல்வடார் ஆக்கி உள்ளது. அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 84 வாக்குகளில் 62 வாக்குகள் விழுந்தன. அதைத் தொடர்ந்து அந்த நாட்டின் அதிபர் நயீப் புக்கெல் ஒப்புதல் அளித்தார். இதுபற்றி அவர் கூறுகையில்,“எல்சல்வடார் அரசு ஒரு வரலாற்றை உருவாக்கி உள்ளது. இந்த நடவடிக்கையால் வெளிநாட்டில் வசிக்கிற நம் நாட்டவர்கள் வீட்டுக்கு பணம் அனுப்புவது ...
தீங்கு செய்தால் வலுவான பதிலடி… ரஷியாவுக்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை!

தீங்கு செய்தால் வலுவான பதிலடி… ரஷியாவுக்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
தீங்கு செய்தால் வலுவான பதிலடி... ரஷியாவுக்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை! அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி 20-ந் தேதி பதவி ஏற்றார். அப்போது அந்த நாட்டை கொரோனா தொற்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. இப்போது அந்த தொற்றில் இருந்து அமெரிக்கா மீண்டுவந்து விட்டது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது முதல் வெளிநாட்டுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். 8 நாள் ஐரோப்பிய பயணத்தில் முதல் கட்டமாக அவர் நேற்று இங்கிலாந்து சென்றார். மனைவி ஜில் பைடனுடன் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் அவர் சபோல்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளமான மில்டன்ஹாலில் வந்து தரை இறங்கினார்.அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐரோப்பிய பயணத்தின் இறுதிகட்டமாக சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகருக்கு செல்லும் ஜோ பைடன், அங்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசுகிறார். பருவநிலை மாற்றம், உக்ரைனில் ரஷிய ராணுவ த...
சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரவரிசை – இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5-ம் இடம்!

சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரவரிசை – இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5-ம் இடம்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரவரிசை - இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5-ம் இடம்! டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில், பேட்ஸ்மேன்களில் இந்திய கேப்டன் விராட் கோலி 5- வது இடத்திலும், ரிஷப் பண்ட் மற்றும் ரோகித் சர்மா (747 புள்ளிகள்) கூட்டாக இணைந்து 6-வது இடத்திலும் நீடிக்கின்றனர். ஜூன் 18 முதல் நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கோலி இந்தியாவை வழிநடத்துவார். ஒரு இடத்தைப் பெற்ற பந்த் மற்றும் ரோகித் தலா மதிப்பீட்டு புள்ளிகளைப் பெற்றுள்ளனர். பந்துவீச்சாளர் தரவரிசையில் தமிழக வீரர் அஸ்வின் மட்டும் 2-வது இடத்தில் நீடித்து, டாப் 10 வரிசையில் இருக்கும் ஒரே இந்திய வீரர் ஆவார். அதேபோல் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா 2-வது இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4-வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்...
தர்பூசணிகளை ராணுவத்துக்கு இலவசமாக வழங்கிய விவசாயி!

தர்பூசணிகளை ராணுவத்துக்கு இலவசமாக வழங்கிய விவசாயி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தர்பூசணிகளை ராணுவத்துக்கு இலவசமாக வழங்கிய விவசாயி! ஜார்கண்டை சேர்ந்த விவசாயி ரஞ்சன் குமார் மாடோ (வயது25). பட்டதாரியான இவர், விரும்பியபடி வேலை அமையாததால், 25 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்ய ஆரம்பித்தார். இவரது பண்ணைக்கு அருகில் இருந்து ராணுவ அதிகாரிகள், வீரர்கள் வந்து விளைபொருட்களை வாங்கி செல்வது உண்டு. ரஞ்சன் தற்போது 6 ஏக்கர் நிலத்தில் பயிரிட்ட தர்பூசணி பழங்களை அறுவடை செய்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக பழங்களை விற்பனை செய்ய முடியவில்லை. இந்த நிலையில் தேசத்திற்காக போராடும் ராணுவ வீரர்களுக்கு அந்த பழங்களை விவசாயி ரஞ்சன் இலவசமாக வழங்கினார். அவர் குறிப்பிட்ட அளவு பழங்களை ராணுவத்திற்கு இலவசமாக வழங்க, மீதி பழங்களை ராணுவ பிரிவினர், சந்தை விலையில் விவசாயியிடம் இருந்து விலைக்கு வாங்கிக்கொண்டனர்....
50 கோடி கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு நன்கொடையாக அனுப்ப உள்ளோம் – ஜோ பைடன்!

50 கோடி கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு நன்கொடையாக அனுப்ப உள்ளோம் – ஜோ பைடன்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
50 கோடி கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு நன்கொடையாக அனுப்ப உள்ளோம் - ஜோ பைடன்! 50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி 92 நாடுகளுக்கு வழங்குவது குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக, வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: அமெரிக்கா 50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி அதை குறைந்த மற்றும் நடுத்தரத்துக்கும் குறைவான வருவாய் உள்ள நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் என 92 நாடுகளுக்கு வழங்க உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை மூலம் பல மில்லியன் நபர்களின் உயிர்கள் காப்பாற்றப்படும் என தெரிவித்துள்ளார்....