ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தை ஹீரோவாக அறிமுகம் செய்யும் பிரபல நடிகை!

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தை ஹீரோவாக அறிமுகம் செய்யும் பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தை ஹீரோவாக அறிமுகம் செய்யும் பிரபல நடிகை! விஜய் ஆண்டனி, ஜீ.வி.பிரகாஷ் ஆகியோர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர்கள். தற்போது இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இடம்பிடித்து உள்ளனர். இவர்களை தொடர்ந்து தற்போது மற்றொரு முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத்தும், விரைவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத்தை ஹீரோவாக்கும் முயற்சியில் நடிகை சார்மி இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை சார்மி, தற்போது தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார். தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும் லிகர் படத்தை தயாரித்து வரும் சார்மி, அடுத்ததாக தேவி ஸ்ரீ பிரசாத் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை...
நடிகை ஹீனா பாஞ்சல் போதைப்பொருள் வழக்கில் கைது

நடிகை ஹீனா பாஞ்சல் போதைப்பொருள் வழக்கில் கைது

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
நடிகை ஹீனா பாஞ்சல் போதைப்பொருள் வழக்கில் கைது மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இகத்புரி மலை அருகே உள்ள சொகுசு பங்களாவில் ரகசியமாக போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அந்த பங்களாவில் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு அனுமதியின்றி பார்ட்டி நடத்தப்பட்டதும், போதைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது. அதில் கலந்து கொண்ட 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 12 பெண்கள் அதில் ஈரானிய பெண்ணும் ஒருவர். மேலும் பாலிவுட், தென்னிந்திய சினிமா பெண்கள் அடங்குவர் மேலும் கைது செய்யப்பட்டவர்களில் நடிகை ஹீனா பாஞ்சலும் ஒருவர். பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் இவர், தமிழில் யாகாவாராயினும் நாகாக்க, கன்னட படமான லொட்டு, தெலுங்கில் மல்லிபு போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இதுதவிர மராட்டிய  பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பிரபலமானார்...
கர்ப்பிணிகள் இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்!

கர்ப்பிணிகள் இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கர்ப்பிணிகள் இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்! நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்படாமல் இருந்தது. கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கொரோனா தடுப்பூசி கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானது என நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, மத்திய சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய சுகாதாரத்துறை, கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என இன்று ஒப்புதல் அளித்துள்ளது. கர்ப்பிணிப்...
சௌராஷ்ட்ரா வணிக மேம்பாட்டு குழுமம், BVK தொழில் குழுமம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்

சௌராஷ்ட்ரா வணிக மேம்பாட்டு குழுமம், BVK தொழில் குழுமம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களை 25.6.2021 அன்று தலைமைச்செயலகத்தில் BVK தொழில் குழுமத்தின் தலைவர்  கே. வி.பாலா அவர்கள் சந்தித்து, கொரோனா  நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் உடன் நிறுவனத்தின் துணைத் தலைவர்  கே.கே கோவிந்த மூர்த்தி, முதுநிலை மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் உள்ளனர்.   மேலும் அவர்கள் அளித்த அறிக்கையில் கூறியதாவது :  மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கட்கு, கடந்த சட்ட மன்ற தேர்தலிலே, ஆகப்பெரும் வெற்றியை அடைந்து, நம் தாய்த் தமிழகத்தின் முதல்வராக  தாங்கள் அரியணை ஏறியமை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். வாழ்த்தி வணங்குகிறோம். தங்கள் சீர்மிகு தலைமையிலே தமிழகம் தொழில் துறையிலும், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிலும் தன்னிகரிலா வளர்ச்சி கண்டு, தரணியிலே தலைநிமிரும் என்பதி...
ஜெராக்ஸ் பத்திரத்தை வைத்துக்கொண்டு ராஜ் டிவி இயக்குனர் ரவீந்திரன் கோடிக்கணக்கில் மோசடி?

ஜெராக்ஸ் பத்திரத்தை வைத்துக்கொண்டு ராஜ் டிவி இயக்குனர் ரவீந்திரன் கோடிக்கணக்கில் மோசடி?

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஜெராக்ஸ் பத்திரத்தை வைத்துக்கொண்டு ராஜ் டிவி இயக்குனர் ரவீந்திரன் கோடிக்கணக்கில் மோசடி? தமிழகச் சின்னத்திரை வட்டாரத்தில் சகலருக்கும் தெரிந்த சேனல் ராஜ் டிவி நெட்வொர்க் . இது மொத்தம் 12 சேனல்கள் உள்ளடங்கியது. தமிழில் 4 சேனல்கள், தெலுங்கில் 3 சேனல்கள், மலையாளம், கன்னடத்தில் 2 சேனல்கள், ஹிந்தியில் ஒரு சேனல். சன் டிவிக்கு இணையாக இவர்களும் மீடியா துறையில் வளர்ச்சி கண்டனர். சேனல்கள் மட்டுமின்றி பட தயாரிப்புகளிலும் ஈடுபட்டனர். காதல்னா சும்மா இல்ல, மரியாதை, மகனே என் மருமகனே போன்ற திரைப்படங்களை தயாரித்து உள்ளனர். இதன் நிர்வாகிகளில் ஒருவரான ரவீந்தரனால் ரூ 10 கோடி ரூபாய் ஏமாற்றப்பட்ட பிரபல சின்னத்திரை நிறுவனத்தின் புகார் காவல் துறைக்கும் மற்றும் பல அரசு துறைகளுக்கும்  போக தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் சின்னத்திரை வட்டார ஹாட் நியூஸ்.   அதாவது பிஏ என்ற பாரதி அசோசியேட் நிறுவனத்தின் சேர்மன் ட...
மருத்துவ குழுவினருடன் நாளை மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

மருத்துவ குழுவினருடன் நாளை மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
மருத்துவ குழுவினருடன் நாளை மு.க.ஸ்டாலின் ஆலோசனை! தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நோய் தொற்று கட்டுப்படுவதை பொறுத்து அவ்வப்போது அரசு தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. கடந்த மாதம் 28-ந்தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி நோய் தொற்று சதவீதத்தின் அடிப்படையில் 3 வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. முதல் வகையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. 2-வது வகையில் அரியலூர், கடலூர், தர்மபுரி உள்பட 23 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. 3-வது வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் உள்ளன. இதில் 3-வது வகையில் இடம்பெற்றுள்ள 4 மாவட்டங்களுக்கும் கூடுதலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ...
மகன் இறந்த இரண்டே வாரத்தில் நடிகை கவிதாவின் கணவரும் கொரோனாவுக்கு பலி!

மகன் இறந்த இரண்டே வாரத்தில் நடிகை கவிதாவின் கணவரும் கொரோனாவுக்கு பலி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
மகன் இறந்த இரண்டே வாரத்தில் நடிகை கவிதாவின் கணவரும் கொரோனாவுக்கு பலி! தமிழில் ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், பாண்டவர் பூமி, அவள் வருவாளா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கவிதா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். நடிகை கவிதாவின் மகன் சாய் ரூப், கணவர் தசரதராஜ் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த 16-ம் தேதி கவிதாவின் மகன் சாய் ரூப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவரது கணவரும் தற்போது உயிரிழந்துள்ளார். ஒரே மாதத்தில் மகனையும், கணவரையும் பறிகொடுத்த நடிகை கவிதாவுக்கு திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்....
இந்தியன்-2 பட விவகாரம்… தீர்வு காண மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட்டு!

இந்தியன்-2 பட விவகாரம்… தீர்வு காண மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட்டு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இந்தியன்-2 பட விவகாரம்... தீர்வு காண மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட்டு! ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி இருந்தது. இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதமாவதால், அடுத்த பட பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். இதனால் அதிருப்தியடைந்த, இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, தங்கள் படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்க தடை விதிக்குமாறு நீதிமன்றத்தை நாடியது. ஆனால் நீதிமன்றமோ, இந்த பிரச்சனையை இருதரப்பும் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், லைகா நிறுவனம், இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு...
தமிழகத்தின் புதிய டி.ஜி.பியாக சைலேந்திரபாபு பதவியேற்றார்!

தமிழகத்தின் புதிய டி.ஜி.பியாக சைலேந்திரபாபு பதவியேற்றார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தின் புதிய டி.ஜி.பியாக சைலேந்திரபாபு பதவியேற்றார்! தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருப்பவர் திரிபாதி. அவர் இன்று ஓய்வு பெறுகிறார். அதையொட்டி தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக டாக்டர் சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை அரசு நேற்று பிறப்பித்தது. தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றபிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனத்திலும் சரி, ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனத்திலும் சரி தலைசிறந்த அதிகாரிகளையே தேர்வு செய்து பணி அமர்த்தி உள்ளார். அந்த வகையில் திறமை மிக்க சைலேந்திரபாபுவை தமிழக காவல்துறையில் உயர்ந்த பதவியான டி.ஜி.பி. பதவியில் அமர்த்தி அவர் அழகு பார்த்துள்ளார். அவரது பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும். சைலேந்திரபாபு பன்முக திறமை வாய்ந்தவர். தலைசிறந்த தொழில் முறையிலான அதிகாரி ஆவார். சட்டம்-ஒழுங்கை கையாள்வதிலும் சரி, ரவுடிகள் ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கை...
சென்னையில் படிப்படியாக உயர்வு- மாநகர பஸ்களில் 11 லட்சம் பேர் பயணம்!

சென்னையில் படிப்படியாக உயர்வு- மாநகர பஸ்களில் 11 லட்சம் பேர் பயணம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னையில் படிப்படியாக உயர்வு- மாநகர பஸ்களில் 11 லட்சம் பேர் பயணம்! சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் 3,200 பஸ்கள் இயக்கப்பட்டன. சுமார் 35 லட்சம் பேர் பயணம் செய்தனர். கொரோனா பாதிப்புக்கு பின்னர் பஸ் போக்குவரத்து குறைந்தது. பொதுமக்கள் குறைந்த அளவிலேயே பயணம் செய்கிறார்கள். கடந்த வாரம் முதல் சென்னையில் மாநகர பஸ் சேவை தொடங்கியது. 6 லட்சம் பேர் பயணம் செய்தனர். 1,500, 2000 என்ற அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று முதல் கூடுதல் தளர்வு அறிவிக்கப்பட்டதால் பஸ் சேவையும் அதிகரிக்கப்பட்டன. நேற்று 2,210 பஸ்கள் இயக்கப்பட்டது. அதில் 11 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு இன்னும் வரவில்லை. பயணிகள் குறைந்த அளவில் பயணம் செய்கிறார்கள். 2-வது அலைக்கு முன்னதாக வரை 20 லட்சம்...