ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

டோக்கியோ பாராலிம்பிக் போட்டி- இந்தியாவுக்கு முதல் தங்கம்!

டோக்கியோ பாராலிம்பிக் போட்டி- இந்தியாவுக்கு முதல் தங்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
டோக்கியோ பாராலிம்பிக் போட்டி- இந்தியாவுக்கு முதல் தங்கம்! ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது.  இதில் இந்தியா வீராங்கனை அவனி லெகாரா, மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டித்தொடரில் இந்தியா முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி உள்ளது. பாராலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது....
டோக்கியோ பாராலிம்பிக் போட்டி- இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா வெள்ளி பதக்கம் வென்றார்!

டோக்கியோ பாராலிம்பிக் போட்டி- இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா வெள்ளி பதக்கம் வென்றார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
டோக்கியோ பாராலிம்பிக் போட்டி- இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா வெள்ளி பதக்கம் வென்றார்! மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியில் 5-வது நாளான நேற்று நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் ‘சி4’ பிரிவு (காலில் பாதிப்பு அடைந்தவர்கள்) அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேல், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சீனாவின் ஜாங் மியாவுடன் மோதினார். 34 நிமிடம் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் வீல்சேரில் அமர்ந்தபடி கலக்கலாக ஆடிய பவினாபென் பட்டேல் 7-11, 11-7, 11-4, 9-11, 11-8 என்ற செட் கணக்கில் ஜாங் மியாவுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். 11 முறை தொடர்ச்சியாக ஜாங் மியாவிடம் தோல...
வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்!

வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்! வெப் தொடரில் நடிக்க சமீபகால கதாநாயகிகள் அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்கள். காரணம், சினிமாவை விட வெப் தொடர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கிறார்கள். வெப் தொடர்களுக்கு தணிக்கை கிடையாது. படுகவர்ச்சியான வசனங்களும், ஆபாசமான காட்சிகளும் வெப் தொடர்களில் அனுமதிக்கப்படுகின்றன. படுக்கை அறை காட்சிகள் தாராளமாக இடம்பெறுகின்றன. இதற்காகவே அதில் நடிக்கும் நடிகர்-நடிகைகளுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கிறார்கள். அதிக சம்பளம் என்ற வசிய வலையில் சிக்கி, படுகவர்ச்சியாக நடித்துள்ள கதாநாயகிகள் வருமாறு:- 1. சமந்தா. இவர், ‘பேமிலி 2’ என்ற வெப் தொடரில் படுகவர்ச்சியாக நடித்து இருக்கிறார். 2. ரெஜினா கசன்ட்ரா. பெண்ணும் பெண்ணும் உறவு கொள்கிற ‘லெஸ்பியன்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 3. அமலாபால். தன்னை விட பல வயது மூத்த ஒரு ஆணுடன் உறவு வைத்துக் கொள்கிற பெண்ணாக,...
அன்று ஆப்கான் மந்திரி… இன்று ‘பீட்சா’ டெலிவரி நபர்!

அன்று ஆப்கான் மந்திரி… இன்று ‘பீட்சா’ டெலிவரி நபர்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
அன்று ஆப்கான் மந்திரி... இன்று ‘பீட்சா’ டெலிவரி நபர்! சமீப நாட்களாக சோகச் செய்திகளையும், துயர தகவல்களையுமே தந்துகொண்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து இன்னொரு வித்தியாச செய்தி. வெளிநாட்டுக்குத் தப்பியோடிய ஜனாதிபதி அஷ்ரப் கனி  அரசில் மந்திரியாக பதவி வகித்த சையத் அகமது ஷா சதாத், தற்போது ஜெர்மனி நகரம் ஒன்றில் பீட்சா டெலிவரி நபராக வேலை பார்க்கிறார். கடந்த 2018-ம் ஆண்டு அஷ்ரப் கனி  மந்திரிசபையில் சதாத் இணைந்தார். தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப மந்திரியாக பதவி வகித்த அவர், பின்னர் அப்பொறுப்பில் இருந்து விலகினார். கடந்த ஆண்டு டிசம்பரில் ஜெர்மனியின் லீப்சிக் நகருக்கு இடம் பெயர்ந்த சதாத், தற்போது அங்கு பீட்சா டெலிவரி நபராக பணியாற்றுகிறார். பீட்சா டெலிவரி பையுடன் அவர் சைக்கிள் ஓட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி கவனம் பெற்றிருக்கின்றன. ஆனால் முன்னாள் ஆப்கான் மந்திரி சையத் அகமது ஷா ...
மதுரையில் நடந்த துணிகர சம்பவம்- ரூ.10 லட்சம் பறித்த பெண் இன்ஸ்பெக்டர் கைது!

மதுரையில் நடந்த துணிகர சம்பவம்- ரூ.10 லட்சம் பறித்த பெண் இன்ஸ்பெக்டர் கைது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மதுரையில் நடந்த துணிகர சம்பவம்- ரூ.10 லட்சம் பறித்த பெண் இன்ஸ்பெக்டர் கைது! சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சேர்ந்தவர் அர்ஷத் (வயது 36). டெய்லரான இவர், சொந்தமாக பேக் கம்பெனி வைக்க முடிவு செய்தார். இதற்கான பொருட்கள் வாங்க சிலரிடம் கடனாக ரூ.10 லட்சம் வாங்கிய அவர், கடந்த மாதம் 5-ந்தேதி மதுரை-தேனி ரோட்டில் நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் மாவுமில் பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்தார். அப்போது, ஏற்கனவே வாங்கிய கடன் ரூ.10 லட்சத்தையும் கையில் வைத்திருந்தார். இந்தநிலையி்ல அங்கு போலீஸ் வாகனத்தில் வந்த மதுரை நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, அவருடைய தம்பி பாண்டியராஜன், மற்றும் பால்பாண்டி, உக்கிரபாண்டி, சீமைச்சாமி ஆகியோர் அர்ஷத்தை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.10 லட்சத்தை பையோடு பறித்துச்சென்றனர். இதுகுறித்து அர்ஷத், மாவட்ட குற்ற தடுப்புப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பே...
நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லாலுக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்!

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லாலுக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லாலுக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்! அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும். இந்நிலையில், பிரபல மலையாள நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு 10 ஆண்டுக்கான கோல்டன் விசா நேற்று வழங்கப்பட்டது. இதற்காக அபுதாபி பொருளாதாரத்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்த துறையின் தலைவர் முகம்மது அலி அல் சோரபா அல் ஹம்மாதி இருவருக்கும் கோல்டன் விசாவை வழங்கி க...
நாட்டிலேயே முதல் முறையாக டெல்லியில் புகை கோபுரம்: அரவிந்த் கெஜ்ரிவால்!

நாட்டிலேயே முதல் முறையாக டெல்லியில் புகை கோபுரம்: அரவிந்த் கெஜ்ரிவால்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாட்டிலேயே முதல் முறையாக டெல்லியில் புகை கோபுரம்: அரவிந்த் கெஜ்ரிவால்! டெல்லியில் காற்று மாசு பிரச்சினை நீண்ட காலமாக உள்ளது. பக்கத்து மாநிலங்களில் உள்ள விவசாயிகள், பயிர் கழிவுகளை எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இதை போக்க புகை கோபுரங்கள் அமைக்குமாறு டெல்லி அரசுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, புகை கோபுரம் அமைக்கும் திட்டத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லி மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. டெல்லி கன்னாட்பிளேஸ் பகுதியில் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியமும், டெல்லி ஆனந்த் விஹார் பகுதியில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தலா ஒரு புகை கோபுரத்தை அமைத்துள்ளன. கன்னாட்பிளேஸில், நாட்டிலேயே முதல் முறையாக அமைக்கப்பட்ட புகை கோபுரத்தின் தொடக்க விழா நேற்று நடந்தது. முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார். பின்னர் அவர...
7 டன் வெண்டைக்காயை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய வியாபாரிகள்!

7 டன் வெண்டைக்காயை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய வியாபாரிகள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
7 டன் வெண்டைக்காயை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய வியாபாரிகள்! கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள சின்னகுப்பம், வண்டிப்பாளையம், சேந்தமங்கலம் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ ரூ.5 என்ற விலையில் சுமார் 7 டன் வெண்டைக்காயை அப்பகுதியை சேர்ந்த வியாபாரியான இளங்கோ மற்றும் அவரது குழுவை சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஆனால் திடீரென வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்ததால், இவர்களிடம் இருந்து வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்யவில்லை. இதனால் வெண்டைக்காயை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் தவித்து வந்தனர். இதனிடையே குடானில் தேக்கமடைந்த வெண்டைக்காய் யாருக்கும் பயனின்றி வீணாகி ...
வங்கி கொள்ளையர்கள் 3 பேரை சுட்டுக்கொன்ற அசாம் போலீஸ்!

வங்கி கொள்ளையர்கள் 3 பேரை சுட்டுக்கொன்ற அசாம் போலீஸ்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
வங்கி கொள்ளையர்கள் 3 பேரை சுட்டுக்கொன்ற அசாம் போலீஸ்! அசாம் மாநிலம் கோக்ராஜர் மாவட்டம், போட்கான் கிராமத்தில் அலகாபாத் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியில் இன்று அதிகாலையில் கொள்ளையர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து சந்கேமடைந்த போலீசார், செங்மாரி என்ற இடத்தில் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது கொள்ளையர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். சிலர் தப்பி ஓடிவிட்டனர். கொள்ளைக் கும்பல் வங்கி லாக்கரை வெல்டிங் செய்து உடைப்பதற்காக வைத்திருந்த கேஸ் சிலிண்டர், ஆக்சிஜன், இரும்பு கம்பி, இரண்டு துப்பாக்கிகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். வங்கிக் கொள்ளையை சரியான சமயத்தில் தடுத்ததுடன், கொள்ளையர்களை சுட்டுக்கொன்ற அசாம் காவல்துறையை முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்ம...
மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் நியமனம்- தலைவர்கள் வாழ்த்து!

மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் நியமனம்- தலைவர்கள் வாழ்த்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் நியமனம்- தலைவர்கள் வாழ்த்து! தமிழக பா.ஜனதா மூத்த தலைவரான இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பிறப்பித்தார். மணிப்பூர் கவர்னராக 24.7.2019-ல் நஜ்மா ஹெப்துல்லா நியமிக்கப்பட்டார். கடந்த 10-ந்தேதி முதல் அவர் விடுப்பில் சென்றார். அதைத்தொடர்ந்து சிக்கிம் மாநில கவர்னர் கங்கா பிரசாத் மணிப்பூர் மாநில கவர்னர் பொறுப்பையும் கவனித்து வந்தார். இந்த நிலையில் இல.கணேசன்  மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இல.கணேசன்  தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். தனது அண்ணனின் பராமரிப்பிலேயே வாழ்ந்து வருகிறார். இளம் வயதிலேயே ஆர். எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிர பற்று கொண்டவர். அதனால் திருமணம் செய்து கொள்ளாமல் தனது வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு முழுநேர ஊழியராக பணியாற்றினார்...