துரோகிகளின் பட்டியலில் முதல் நபர் மகேந்திரன் – கமல் கடுப்பு
துரோகிகளின் பட்டியலில் முதல் நபர் மகேந்திரன் - கமல் கடுப்பு
மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் கட்சியில் இருந்து விலகினார். தற்போது அவரது விலகல் குறித்து பதில் அளித்துள்ள அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் “களைய வேண்டிய துரோகிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் மகேந்திரன்” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உயிரே உறவே தமிழே,
பத்திரமாக இருக்கிறீர்களா?
‘சீரமைப்போம் தமிழகத்தை’ எனும் பெருங்கனவை முன்வைத்து முதலாவது சட்டமன்ற தேர்தலைச் சந்தித்தோம். ஒரு பெரிய போரில் திறம்பட செயல்பட்டோம். களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்தார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டோம். ‘துரோகிகளைக் களையெடுங்கள்’ என்பதுதான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படிக் களைய ...









