ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

பசியில் இருக்கும் ஏழைகளுக்கு ஒன்றுக்கும் உதவாத நிதி மந்திரி அறிவிப்பு – ப.சிதம்பரம் காட்டம்

பசியில் இருக்கும் ஏழைகளுக்கு ஒன்றுக்கும் உதவாத நிதி மந்திரி அறிவிப்பு – ப.சிதம்பரம் காட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பசியில் இருக்கும் ஏழைகளுக்கு ஒன்றுக்கும் உதவாத நிதி மந்திரி அறிவிப்பு - ப.சிதம்பரம் காட்டம் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் 20 லட்சம் கோடி அறிவிப்பு குறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- 'நாடு முழுவதும் பசி மற்றும் ஏழ்மையில் இருக்கும் லட்சக்கணக்கானவர்களுக்கு நிதி மந்திரியின் பேச்சில் எதுவும் இல்லை பேரழிவுகளுக்கு உள்ளான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சென்றனர். பல்லாயிரக்கணக்கானோர் இன்னும் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கும் நிதிமந்திரியின் பேச்சில் எதுவும் இல்லை. தினம் தினம் உழைப்பவர்களுக்கு இது ஒரு மரண அடியாகும். அடித்தட்டு நிலையில் உள்ள மக்களுக்கு பணத்தை கொண்டு சேர்க்க எந்த வழிகளும் உருவாக்கப்படவில்லை. 13 கோடி குடும்பங்கள் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளன. ...
அம்மாவின் பெயரில் நடத்தும் தேவி அறக்கட்டளை மூலம் விஷால் நிவாரண உதவி!

அம்மாவின் பெயரில் நடத்தும் தேவி அறக்கட்டளை மூலம் விஷால் நிவாரண உதவி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    சத்தமில்லாமல் தன் அம்மாவின் பெயரில் தான் நடத்தும் தேவி அறக்கட்டளை மூலம் இதுவரை 5000 பேருக்கு மளிகைப் பொருட்கள் வழங்கிய விஷால். இந்த கொரானா  பிரச்சனையால் பல்வேறு தன்னார்வலர்கள். சங்கங்கள், அமைப்புகள் சில மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அதேபோல் . நடிகர் விஷால் நலிவுற்ற நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிவுற்ற தயாரிப்பாளர்கள், திருநங்கைகள் திரையுலகில் நடிகர் நடிகைகளுக்கு பணி புரியும் உதவியாளர்கள், பத்திரிக்கை நண்பர்கள், ஆட்டோ ஓட்டும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள்,தூய்மைப் பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கிவருகிறார் இதற்கான ஏற்பாடுகளை மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரி கிருஷ்ணன்  செய்துவருகிறார், விஷால் மக்கள் நல இயக்கத்தின் சார்பிலும் மாவட்ட வாரியாக நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கி வருகின்றனர். விஷால் தத்து எடுத்த தஞ்சாவூர் மாவட்...
5 லட்சம் கோடியில் புதிய “தன்னிறைவு இந்தியா” திட்டம் அறிவிப்பு – நிர்மலா சீத்தாராமன்

5 லட்சம் கோடியில் புதிய “தன்னிறைவு இந்தியா” திட்டம் அறிவிப்பு – நிர்மலா சீத்தாராமன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    5 லட்சம் கோடியில் புதிய "தன்னிறைவு இந்தியா" திட்டம் அறிவிப்பு - நிர்மலா சீத்தாராமன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு நாட்டு மக்களிடம் பேசும் போது, பொருளாதாரத்தை மீட்டும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் இந்த நிதியில் இருந்து சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் திட்டங்கள் குறித்த விவரங்களை அமைச்சர் அறிவிப்பார் என்று கூறினார் இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் எவை என்பது குறித்த விரிவான விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அவர் கூறுகையில்:- இந்தியாவின் வளர்ச்சி பொருளாதாரம், உள்கட்டமைப்பு, மனித வளம், தேவை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய 5 காரணிகளை கொண்டதாகும். பிரதமர் மோடி...
20 லட்சம் கோடியும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் -மக்கள் செயல் பேரவை அறிக்கை

20 லட்சம் கோடியும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் -மக்கள் செயல் பேரவை அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மக்கள் செயல் பேரவை தலைவர் சிவக்குமார் வெளியிட்ட அறிக்கை: கொரானாவை கட்டுப்படுத்த முடியாத நிலையில் மத்திய மாநில அரசு இருக்கிறது நான்காம் கட்ட ஊரடங்கில் என்ன செய்யபோகிறது இந்தியா அரசு தெரியவில்லை ... பொருளாதாரம் வளர்ச்சி பெற இருபது லட்சம் கோடி திட்டம் கொண்டு வரப்போவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார் அந்த திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனளிக்க கூடியவகையில் இருக்க வேண்டும் ... பணக்காரர்களுக்கும் கார்பரேட் கம்பெனிகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் இருக்க கூடாது ... இன்றைக்கு இருந்த காசுகளை செலவு செய்துவிட்டு பணப்புழக்கம் இல்லாமல் இருப்பது அவர்கள்தான் அவர்கள் கைகளில் காசு புழங்கினால்தான் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பெரும் ... பணக்காரர்களிடம் அந்த பணம் போனால் பணப்புழக்கம் இல்லாமல் முடங்கிவிடும் என்கிறார்  சொ. சிவக்குமார்.  ...
சென்னையில் வைரஸ் பரவலுக்கு அஞ்சி ஊட்டிக்கு போன ராதாரவி குடும்பத்தோடு தனிமைபடுத்தப்பட்டார்?

சென்னையில் வைரஸ் பரவலுக்கு அஞ்சி ஊட்டிக்கு போன ராதாரவி குடும்பத்தோடு தனிமைபடுத்தப்பட்டார்?

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    கோத்தகிரியில் குடும்பத்துடன் தனிமைபடுத்தப்பட்ட ராதாரவி! ஊரடங்கை மீறினாரா? தமிழகத்தில் கொரானா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த படியே இருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் தினம் தினம் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. இந்த சூழலில் தமிழக்த்திலேயே சென்னை தான் கருஞ்சிவப்பு எச்சரிக்கை வளையத்திற்குள் உள்ளது. ஊரடங்கில் சிக்கி சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கும் நபர்களுக்கு இ.பாஸ் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் அல்லது நெருங்கிய உறவினர் மரணம் இதற்கு மட்டுமே பெரும்பாலான இ.பாஸ் வழஙகப்படுகிறது. அப்படியே அவர்கள் இந்த பாஸ் மூலமாக அவர்கள் செல்லும் ஊர்களில் குறிப்பிட்ட நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள். சென்னையில் இருந்து செல்பவர்கள் கடுமையான பரிசோதனைக்கு பி...
பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடியில் ஏழைகளுக்கு என்ன கிடைக்கும் என்பதை பார்க்க காத்திருக்கிறேன் – கமல்

பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடியில் ஏழைகளுக்கு என்ன கிடைக்கும் என்பதை பார்க்க காத்திருக்கிறேன் – கமல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடியில் ஏழைகளுக்கு என்ன கிடைக்கும் என்பதை பார்க்க காத்திருக்கிறேன் - கமல் கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மே 17-ம் தேதி நிறைவுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் நேற்று பேசினார்.   அப்போது அவர் கூறுகையில், வலிமையான இந்தியாவை உருவாக்க இதுவே சிறந்த தருணம். நாம் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 20 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பு திட்டங்கள். இந்த பொருளாதார வளர்ச்சி திட்டத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கம் கிடைக்கும் என தெரிவித்தார். இந்நிலையில், பிரதமர் மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் திட்டங்களில் ஏழைகளுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்பதை எதிர்பார்ப்பேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்கள் நீதி...
விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீ கொடூர கொலைக் குற்றவாளிகளுக்காக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக வேண்டாம் – பத்திரிகையாளர் கோடங்கி வேண்டுகோள்

விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீ கொடூர கொலைக் குற்றவாளிகளுக்காக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக வேண்டாம் – பத்திரிகையாளர் கோடங்கி வேண்டுகோள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீ கொடூர கொலைக் குற்றவாளிகளுக்காக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக வேண்டாம் - பத்திரிகையாளர் கோடங்கி வேண்டுகோள் மனம் நிறைந்த வேதனையுடன் ஒரு பத்திரிகையாளனாக தமிழகத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களுக்கும் இந்த கோரிக்கையை வைக்கிறேன். விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீ கொடூரமாக எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தையும், அந்த மாணவியின் மரண வாக்குமூலத்தையும் பார்த்த ஒவ்வொரும் ஒரு கணம் மூச்சை நிறுத்தி அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றிருப்போம். இந்த படுபாதக கொடூர செயலை செய்த அதிமுகவை சேர்ந்த கலியபெருமாள், முருகன் இருவரையும் கட்சியில் இருந்து நீக்கியதோடு மட்டுமல்லாமல் கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி அளித்து தனது கடமையை முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி முடித்து கொண்டார். எதிர்க்கட்சிகளும் நிவாரண நிதி அறிவித்து சம்மந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான...
கொரானா வந்துட்டாலும் வீட்லயே தனியா இருங்க – மத்திய சுகாதாரதுறை

கொரானா வந்துட்டாலும் வீட்லயே தனியா இருங்க – மத்திய சுகாதாரதுறை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா அறிகுறிகள் வந்தாலும் வீட்டில் தனித்திருந்தால் போதும் - மத்திய சுகாதார துறையின் அறிவிப்பு லேசான கொரானா அறிகுறிகளுடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில், சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:- கொரானாவால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவது முக்கியம். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற பொதுமக்கள் உதவ வேண்டும். அவர்களை மறைத்து வைப்பது அவர்களுடைய குடும்பத்துக்கு மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் ஆபத்தாகும். லேசான கொரானா அறிகுறிகள் மற்றும் தொடக்கநிலை அறிகுறி இருப்பவர்கள், அறிகுறி தென்பட்ட நாளில் இருந்து 17 நாட்களுக்குள், வீட்டில் தங்கள் தனிமைப்படுத்துதலை முடித்துக் கொள்ளலாம். அதுபோல், தொடர்ந்து 10 நாட்களாக காய்ச்சல் இல்லாதவர்களும...
மே 31வரை ரயில், விமான சேவை தொடங்க வேண்டாம் – பிரதமரிடன் முதல்வர் கோரிக்கை

மே 31வரை ரயில், விமான சேவை தொடங்க வேண்டாம் – பிரதமரிடன் முதல்வர் கோரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மே 31வரை ரயில், விமான சேவை தொடங்க வேண்டாம் - பிரதமரிடன் முதல்வர் கோரிக்கை கொரானா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த சூழலில் ஊரடங்கு தளர்வு, கொரானாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களில் அமல்படுத்தியுள்ள ஊரடங்கை தளர்த்தி ரெயில், விமான சேவைகளை மீண்டும் இயக்கலாமா? என பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களின் கருத்துக்களை கேட்டார். அப்போது காணொலியில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் கொரானா வைரஸ் பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மே 31-ம் தேதி வரை பயணிகள் ரெயில் மற்றும் விமான...
சிறுமி ஜெயஸ்ரீ உயிருடன் எரித்துக்கொலை:  ஈவிரக்கமில்லா மனநோயாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும்! – திருமாவளவன்

சிறுமி ஜெயஸ்ரீ உயிருடன் எரித்துக்கொலை: ஈவிரக்கமில்லா மனநோயாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும்! – திருமாவளவன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சிறுமி ஜெயஸ்ரீ உயிருடன் எரித்துக்கொலை: ஈவிரக்கமில்லா மனநோயாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும்! விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கண்டனம்! விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தில் ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ என்னும் சிறுமியை, அதே ஊரைச்சார்ந்த கலியபெருமாள், முருகன் ஆகியோர் கைகளைக் கட்டிப்போட்டு, வாயில் துணியைத் திணித்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளனர். உடல்முழுவதும் எரிந்தநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலமணி நேரத்தில் அச்சிறுமி உயிரிழந்துள்ளார். நெஞ்சைப் பதறவைக்கும் இந்தக் கொடூரத்தை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம். சிறுமியின் தந்தை ஜெயபாலுடன் முன்னதாக ஏற்பட்ட தகராறையொட்டி, அந்த இருவரின்மீது அவர் காவல்துறையில் புகார்செய்தார் என்பதனால், அவர்கள் இருவரும் ஜெயபால் மீதுள்ள பழிவாங்கும் வெறியி...