சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

நடிகை கடத்தல்… பாலியல் வழக்கு… போலீசை கொல்ல பிளான்… சினிமாவை மிஞ்சும் நடிகர் திலீப் கேஸ்! 

நடிகை கடத்தல்… பாலியல் வழக்கு… போலீசை கொல்ல பிளான்… சினிமாவை மிஞ்சும் நடிகர் திலீப் கேஸ்! 

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  நடிகை கடத்தல்... பாலியல் வழக்கு... போலீசை கொல்ல பிளான்... சினிமாவை மிஞ்சும் நடிகர் திலீப் கேஸ்! போலீஸ் அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப்பிடம் மூன்று நாட்கள் போலீஸ் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மலையாளம், தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை கடந்த 2017-ல் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நடிகர் திலீப்பின் நண்பரும், இயக்குநருமான பாலச்சந்திர குமார் என்பவர் தெரிவித்த புது தகவல்கள் வழக்கின் போக்கை மாற்றியுள்ளது பாலச்சந்திர குமார், "ஜாமீனில் வெளிவந்த பிறகு திலீப் தன்னை கைது செய்த காவல்துறை அதிகாரிகளை பழிவாங்க தனியாக ஓர் ஆலோசனையை நடத்தினார். இந்த ஆலோசனை நடந்தபோது நான் அவர்கள் வீட்டில் தான் இருந்தேன். அவர்கள் பேசியது ஆடியோவாகவும் என்னிடம் உள்ளது. திலீப் குறித்த தகவல...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கட்சி, வேட்பாளர் பெயரில் சுவரொட்டி ஒட்ட தடை!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கட்சி, வேட்பாளர் பெயரில் சுவரொட்டி ஒட்ட தடை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் புதிய கையேட்டை வெளியிட்டுள்ளது.  அதில், வேட்பாளர் மற்றும் கட்சி பெயரில் சுவரொட்டி ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான தேதி ஒருசில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனுவை பெற்று வேட்பாளர் தேர்வில் மும்முரமாக உள்ளன. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 18 பக்க அறிக்கையில், இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய காப்புத் தொகை (டெபாசிட்) இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்...
பெற்றோர்கள் காது கொடுத்து கேட்டால் குழந்தைகள் தற்கொலை எண்ணம் தவிர்க்கப்படும் என்கிறார் கிருத்திகா உதயநிதி

பெற்றோர்கள் காது கொடுத்து கேட்டால் குழந்தைகள் தற்கொலை எண்ணம் தவிர்க்கப்படும் என்கிறார் கிருத்திகா உதயநிதி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    பள்ளிகளில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் பெண் குழந்தைகளின் பிரச்சனைகளை பெற்றோர்கள் காது கொடுத்து கேட்டாலே தற்கொலை போன்ற முடிவுகளை தவிர்க்கலாம் என்று கிருத்திகா உதயநிதி தெரிவித்தார். சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில், சைல்டு அடோலெசென்ட் பவுண்டேஷன் இந்தியா என்கிற தன்னார்வ அமைப்பு சார்பில், நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிருத்திகா உதயநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய கிருத்திகா உதயநிதி, ’பிள்ளைகளுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, நம்முடைய விருப்பங்களை அவர்கள் மீது திணிக்க கூடாது என்றார். பிள்ளைகளின் விருப்பத்தை தெரிந்து அவர்களை வளர்க்க வேண்டும் என்றும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள கு...
ஜெய்பீம் சூர்யா, உதயநிதி ஸ்டாலினுக்கு ஆஸ்கார் விருது!

ஜெய்பீம் சூர்யா, உதயநிதி ஸ்டாலினுக்கு ஆஸ்கார் விருது!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    உலகளாவிய சமூக ஆஸ்கார் விருது மனித சமூகங்களை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த சர்வதேச மற்றும் சமூக ஹீரோக்களை அங்கீகரிக்கிறது. இந்நிலையில், 11வது பாராளுமன்ற உலக சமூக ஆஸ்கர் விருதுக்கான 4 பிரிவுகளின் பட்டியலை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டேனி கே டேவிஸ் வெளியிட்டுள்ளார். இதில் ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்களான நடிகர் சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கு 2021-ம் ஆண்டுக்கான உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மைக் கதையை மையமாக வைத்து சமூகநீதி என்ற கருப்பொருளில் வெளியிடப்பட்டதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு, சூர்யா, ஜோதிகா, இயக்குனர் டி.ஜே.ஞானவேல்ராஜா மற்றும் ஜெய் பீம் படக்குழுவினர் அழைக்கப்பட்டுள்ளனர். Global Community Oscar award அதேபோல் உலகெங்கிலும் வளர்ந்து வரும் ...
கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருதுகள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருதுகள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்கி, ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளை’யை நிறுவினார்.   அதன்மூலம், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் உள்ளிட்டவற்றில் சிறந்த பங்களிப்பை வழங்கிய அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’ வழங்கப்படுகிறது இந்நிலையில், 2010 ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கான 10 அறிஞர்கள் விருது தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் விருதாளர்களுக்கு விருது வழங...
பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீடிப்பு!

பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீடிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  பேரறிவாளனின் சிறைவிடுப்பு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு அனுப்பிய பரிந்துரை ஆளுநரிடம் கிடப்பில் உள்ளது. தற்போது பேரறிவாளன் பரோலில் வெளியே வந்துள்ளார். அவரது பரோல் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில்,பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத சிறைவிடுப்பு வழங்கி தமிழக அரசு ஆணை...
பாஜக செய்யும் ஊழலுக்கு மதசார்பற்ற ஜனதா தளம் ஆதரவு: சித்தராமையா குற்றச்சாட்டு!

பாஜக செய்யும் ஊழலுக்கு மதசார்பற்ற ஜனதா தளம் ஆதரவு: சித்தராமையா குற்றச்சாட்டு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பாஜக செய்யும் ஊழலுக்கு மதசார்பற்ற ஜனதா தளம் ஆதரவு: சித்தராமையா குற்றச்சாட்டு! பெங்களூருவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது, ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த காந்தராஜ், காங்கிரசின் கொள்கைளை ஏற்று கட்சியில் இணைந்துள்ளார். நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியில் மட்டுமே கொள்கைகள் இருக்கிறது. ஜனதாதளம் (எஸ்) சந்தர்ப்பவாத கட்சியாகும். அந்த கட்சிக்கு என்று கொள்கை எதுவும் கிடையாது. பா.ஜனதாவினர் ஆர்.எஸ்.எஸ். சொல்வதை கேட்டு நடக்க கூடியவர்கள். அந்த கட்சிக்கு என்று தனிக்கொள்கை எதுவும் இல்லை. பிரதமர் மோடி கடந்த 8 ஆண்டுக்கு முன்பு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக இந்தியாவின் கடன் ரூ.53 லட்சம் கோடியாக இருந்தது. இந்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் ரூ.135 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. பா.ஜனதா ஆட்சியில் நடந்த பெரிய சாதனை...
அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து- 2 பேர் பலி!

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து- 2 பேர் பலி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து- 2 பேர் பலி! மும்பையின் தார்டியோ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 20 தளங்கள் கொண்ட அந்த குடியிருப்பின் 18வது தளத்தில் தீப்பிடித்துளள்து. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணியும் முழுவீச்சில் நடைபெறுகிறது. இந்த தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது....
கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருதுகள் -முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!

கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருதுகள் -முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருதுகள் -முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்! மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்கி, ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளை’யை நிறுவினார். அதன்மூலம், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் உள்ளிட்டவற்றில் சிறந்த பங்களிப்பை வழங்கிய அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’ வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2010 ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கான 10 அறிஞர்கள் விருது தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு ந...
2 கரடி, 2 சிறுத்தை ஊருக்குள் புகுந்து உணவு தேடியதால் மக்கள் அச்சம்.!

2 கரடி, 2 சிறுத்தை ஊருக்குள் புகுந்து உணவு தேடியதால் மக்கள் அச்சம்.!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கரிமறா அட்டி கிராமத்தை சுற்றிலும் வள்ளுவர் நகர், வாசுகி நகர், பெரியார் நகர், வசம்பள்ளம் ஆகிய பகுதிகளில் 1000 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தை சுற்றிலும் தேயிலை தோட்டம் நிறைந்து காணப்படுகிறது. இதனால் வனத்தில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் தேயிலை தோட்டத்தில் பதுங்கியிருந்து, இரவு வேளைகளில் குடியிருப்புகளில் உணவுகளை தேடி அலைந்து வருகிறது. மேலும், கடந்த சில மாதமாக சிறுத்தைகள் மற்றும் கரடிகள் நடமாட்டமும் காணப்பட்டுள்ளது இரவு நேரத்தில் ஊருக்குள் வரும் சிறுத்தை வீட்டில் இருக்கும் நாய், வீட்டு விலங்கு போன்றவற்றை அடித்து கொன்று சாப்பிடுகிறது. மக்கள் சுதாரித்து எழுந்து விரட்ட தொடங்கினால், வேட்டையாட்டிய உணவை அப்படியே விட்டுவிட்டு தப்பி செல்கிறது. இதனைப்போல கரடிகளும் வீடுகள் மற்றும் கோவிலில் உள்ள எண்ணெய், ...