புதுக்கோட்டையில் சிறுவன் படுகாயம் எதிரொலியாக துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட கலெக்டர் தடை
புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைந்து உள்ளது. இந்த மையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு (சி.ஐ.எஸ்.எப்.) துப்பாக்கி சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், அந்த பகுதியில் தனது பாட்டி வீட்டுக்கு வந்த புகழேந்தி (வயது 11) என்ற சிறுவன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்துள்ளான். இந்த நிலையில், இன்று துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது தவறுதலாக சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது.
இதில் படுகாயமடைந்த சிறுவனை புதுகோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், உயர் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவனுக்கு உயர் சிகிச்சை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்...









