ஆட்சி செய்பவர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதது ஏன்? காங்கிரஸ் எம்.பி. கேள்வி
ஆட்சி செய்பவர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதது ஏன்? காங்கிரஸ் எம்.பி. கேள்வி
இந்தியாவில் பாரத் பயேடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் மற்றும் சீரம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, இரு தடுப்பூசிகளும் போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக போடப்படுகிறது.
இந்த நிலையில், ஆட்சி செய்பவர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதது ஏன் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான மனிஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து மனிஷ் திவாரி கூறியதாவது: அரசு பிரதிநிதிகள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதது ஏன்?. பிற நாடுகளில் அரசின் சார்பில் பிரதமர்களும், சுகாதார அமைச்சர்களும் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளும்போது இந்தியாவில் மட்டும் அரசுப் பிரதிநிதிகள...








