பொங்கல் பரிசு 2500 டோக்கன் வழங்குவதில் முறைகேடா – ஸ்டாலின் அறிக்கை
மக்கள் வரிப்பணத்தை - மக்களுக்கே திரும்ப வழங்கும் ரூ.2500 பொங்கல் பரிசு மற்றும் டோக்கன் வழங்கும் பணிகளில் முறைகேடுகளுக்கு இடமளிக்கக்கூடாது;
அதிமுகவினர் மூலம் டோக்கன் வழங்குவதை உடனே நிறுத்த வேண்டும்”
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.
“பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2500 வழங்கப்படும்” என 19.12.2020 அன்று முதலமைச்சர் திரு. பழனிசாமி தனது தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கி வைத்த போது அறிவித்தார். அரசாணையில் “ஜனவரி 4-ஆம் தேதியிலிருந்து இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பேச்சு, செய்திக் குறிப்பு அரசாணையில் மேற்கோள் காட்டப்பட்டு - இந்தத் தேதி அறிவிக்கப்பட்டாலும் - இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் அடுத்தடுத்து குழப்பங்களைச் செய்து - தேர்தலை மனதில் வைத்து, இது ஏதோ அ.தி....








