ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ தலைப்ப மாத்து கொந்தளித்த நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை!!

தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ தலைப்ப மாத்து கொந்தளித்த நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் ‘கர்ணன்’. இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது. படத்தின் அடுத்த கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்திற்கு ‘கர்ணன்’ டைட்டில் வைக்கக் கூடாது என நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை தனுஷிற்கு வேண்டுகோள் வைத்துள்ளது. இதுகுறித்து தனுஷிற்கு பேரவையின் தலைவர் சந்திரசேகரன் எழுதியுள்ள கடிதத்தில் , ”தாங்கள் தற்போது “கர்ணன்“ என்ற தலைப்பிலான திரைப்படத்தில் நடித்துவருவதாக அறிகிறோம். நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் லட்சோபலட்ச ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் “கர்ணன்“ என்றாலே நினைவில் நிற்பது நடிகர்திலகத்தின் “கர்ணன்” திரைப்படம்தான். ஒரு திரைப்படத்தின் பெயரை மீண்டும் பயன்படுத்த சட்டப்படி இடமிருந்தாலும், நியாயப்படி, மனசாட்சிப்படி. சில திரைப்படங்களின் பெயர்கள் மீ...
பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க?  பிரதமருக்கு கமல் கேள்வி

பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க?  பிரதமருக்கு கமல் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க?  பிரதமருக்கு கமல் கேள்வி கமல் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், புதிய பாராளுமன்றம் கட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கமல் வெளியிட்ட டுவிட்டர் பதிவு வருமாறு:- சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே.... இவ்வாறு கமல் கூறி உள்ளார். https://twitter.com/ikamalhaasan/status/1337964742158163969?s=20...
மதுரையில் இருந்து இன்று பிற்பகல் பிரசாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்

மதுரையில் இருந்து இன்று பிற்பகல் பிரசாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் “தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்” என்கிற கோ‌ஷத்துடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் இன்று முதல் கமல் ஹாசனின் முதல்கட்ட பிரசாரம் தொடங்குகிறது. இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றடையும் கமல் ஹாசன், மதுரையில் இருந்து இன்று பிற்பகல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். இன்று 4 இடங்களில் நடைபெறும் கூட்டத்தில் பேச உள்ளார். மேலும் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இதைத் தொடர்ந்து, நாளை காலை மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் திறந்த வேனில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்கிறார். திண்டுக்கல், தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு திறந்த வேனிலேயே செல்லும் கமல்ஹாசன் குறிப்பிட்ட இடங்களில் தெருமுனைக் கூட்டங்களில் மக்கள் மத்தியில் பேசுவதற்கும் ஏற்பாடு ச...
சில்க் ஸ்மிதாவின் ‘தி டர்ட்டி பிக்சர்’ வாழ்க்கை படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகை மர்மச்சாவு

சில்க் ஸ்மிதாவின் ‘தி டர்ட்டி பிக்சர்’ வாழ்க்கை படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகை மர்மச்சாவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  சில்க் ஸ்மிதாவின் ‘தி டர்ட்டி பிக்சர்’ வாழ்க்கை படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகை மர்மச்சாவு நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை தழுவி பிரபல இயக்குனர் மிலன் லூத்ரியா எடுத்த இந்தி படம் ‘தி டர்ட்டி பிக்சர்’. 2011-ம் ஆண்டு வெளியான இந்த படம் உள்பட பல படங்களில் நடித்து பெயர் பெற்றவர் பிரபல இந்தி நடிகை ஆர்யா பானர்ஜி (வயது 33). இவரது தந்தை மறைந்த சிதார் இசைக்கலைஞர் நிகில் பந்தோபாத்யா ஆவார். மும்பையில் மாடலிங் கலைஞராகவும் புகழ் பெற்றவர், ஆர்யா பானர்ஜி. இவர் கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது தளத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலையில் அவரது வீட்டில் வேலை செய்து வந்த வேலைக்கார பெண் வழக்கம்போல வேலைக்கு அங்கு சென்றார். அழைப்பு மணியை அழுத்தினாலும் நீண்ட நேரமாக பதில் இல்லை. செல்போனில் அழைத்தாலும், அந்த அழைப்பு ஏற்கப்படவில்லை. இதனால் சந...
தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்ட மந்திரிக்கு கொரோனா பாதிப்பு

தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்ட மந்திரிக்கு கொரோனா பாதிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இந்தியாவில் பாரத் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு சோதிக்க இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அனுமதி வழங்கியது. இதில் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகள் வெற்றியடைந்ததையடுத்து, மூன்றாம் கட்ட  சோதனைக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் தொடங்கியுள்ளது. அரியானாவில் கோவேக்சின் மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை கடந்த மாதம் 20 ஆம் தேதி  தொடங்கியது. இதில் முதல் தன்னார்வலராக மாநில உள்துறை  அமைச்சர் அனில் விஜ் (வயது 67) பங்கேற்று, தனது உடலில் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தினார். அம்பாலா கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்தி சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், அரியான மந்திரி அனில் விஜ் கொரோனா தொற்றால் ப...
ரத்தன் டாடா பயோபிக்கில் நடிக்கின்றாரா மாதவன்?

ரத்தன் டாடா பயோபிக்கில் நடிக்கின்றாரா மாதவன்?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இந்திய திரையுலகில் அவ்வப்போது பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகி வரும் என்பதும், கிட்டத்தட்ட அனைத்து பயோபிக் திரைப்படங்களும் வெற்றி பெற்றுவருகிறது என்பதும் தெரிந்ததே. சமீபத்தில் தொழிலதிபர் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக ’சூரரைப்போற்று’ மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்ததே மேலும் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘ராக்கெட்டரி’ என்ற திரைப்படத்தில் தற்போது மாதவன் நடித்து வரும் நிலையில் அந்தப் படமும் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் அந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது   இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் மாதவன் நடிக்கவிருப்பதாக புகைப்படத்துடன் கூடிய செய்திகள் வெளிவந்தது. இதனை அடுத்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக...
சூப்பர்ஸ்டாருக்கு சர்ப்ரைஸ் பிறந்தநாள் கிஃப்ட் கொடுத்த சிம்பு

சூப்பர்ஸ்டாருக்கு சர்ப்ரைஸ் பிறந்தநாள் கிஃப்ட் கொடுத்த சிம்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திலிருந்து இரண்டு போஸ்டர்ஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.   இன்னொரு பக்கம் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் அவர் நடித்து முடித்திருக்கும் ஈஸ்வரன் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீசை எதிர்பார்த்து சிம்பு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.   இந்த நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிம்பு ரஜினி அவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக ஒரு அழகான பூச்செண்டை அனுப்பி வைத்துள்ளார். அதோடு அதில் தன்னுடைய வாழ்த்தையும் கூறி உள்ளார்.  ...
கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்து துபாயில்‘‘சாண்டாகிளாஸ்’ ஓட்டம்

கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்து துபாயில்‘‘சாண்டாகிளாஸ்’ ஓட்டம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
துபாயில், கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்து ‘‘சாண்டாகிளாஸ்’ ஓட்டம் துபாயில் ஆண்டுதோறும் பெஸ்டிவல் சிட்டி பகுதியில் வசிக்கும் பல்வேறு நாட்டை சேர்ந்த மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உற்சாகமாக கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக ‘சாண்டா ஓட்டம்’ இருந்து வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையில் ‘சாண்டாகிளாஸ்’ என்ற பெயரில் அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா அணியும் சிவப்பு நிறத்திலான உடை மற்றும் தொப்பியை அணிந்து கொண்டு பொதுமக்கள் இந்த ஓட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நேற்று நடைபெற்ற சாண்டா ஓட்டத்தில் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர். இதில் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குடும்பத்தினர், சிறுவர், சிறுமிகள் மற்றும் வயதானவர்களும் கலந்து கொண்டனர். அனைவரும் சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை வழிமுறைகளை கடைபிடித்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். குழந்தைகளை தாய்மார...
20-ம் தேதி திமுக மாவட்ட, மாநகர கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

20-ம் தேதி திமுக மாவட்ட, மாநகர கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
20-ம் தேதி திமுக மாவட்ட, மாநகர கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 20-ம் தேதி திமுக மாவட்ட, மாநகர கழக செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் என்று திமுக கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 20-12-2020 அன்று, மாவட்ட/மாநகர/ஒன்றிய/நகர/பகுதி/பேரூர்க் கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் வாழ்த்து

பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் வாழ்த்து

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   இன்று பிறந்த நாள் கொண்டாடும் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 71-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்! நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களைத் தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்த்துக்கு முதல்வர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்....