ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

தமிழக அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதம் திணிப்பு – வைகோ கண்டனம்

தமிழக அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதம் திணிப்பு – வைகோ கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *தமிழக அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதம் திணிப்பு!* *வைகோ கடும் கண்டனம்* மத்திய பா.ஜ.க. அரசு உருவாக்கியுள்ள புதிய கல்விக் கொள்கை பிற்போக்குத்தனமான இந்துத்துவ சனாதன கோட்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்தி, சமஸ்கிருத மொழிகளை தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை வரையில் திணிப்பதற்கு தேசியக் கல்விக் கொள்கை -2020 வழி செய்கிறது என்பதால், கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறோம். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே கடைப்பிடிக்கப்படும் என்று ஒப்புக்காக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி அரசு, பா.ஜ.க. அரசின் இந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு துணைபோய்க்கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சமஸ்கிருதம் ப...
இன்னும் 8 மாதங்களில் தமிழகத்தில் திமுக ஆட்சி – பொதுக்குழுவில் ஸ்டாலின் பேச்சு

இன்னும் 8 மாதங்களில் தமிழகத்தில் திமுக ஆட்சி – பொதுக்குழுவில் ஸ்டாலின் பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுக பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இன்னும் 8 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரும். துரைமுருகன் பொதுச்செயலாளர் ஆனதையும், டி.ஆர்.பாலு பொருளாளர் ஆனதையும் அறிந்தால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மகிழ்ச்சி அடைவார். 9 முறை சட்டமன்றத்துக்கு சென்றுள்ள துரைமுருகன் ஒரு சூப்பர் ஸ்டார். சட்டமன்றத்தில் ஸ்டாராக மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருகிறார் துரைமுருகன். பல்வேறு பதவிகளை வகித்த துரைமுருகன் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் கட்சியில் படிப்படியாக உயர்ந்து தற்போதைய நிலையை எட்டியுள்ளனர். மிசா காலத்தின்போது கைதாகி எங்களுடன் சிறையில் இருந்தவர் டி.ஆர்.பாலு ‘வெட்டி வா என்றால் கட்டி வரக்கூடிய தம்பிகளில் ஒருவர்’ என கருணாநிதியால் பாராட்டப்பட்டப் பெற்றவர் டி.ஆர்.பாலு. 3 முறை மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள...
சிவசேனா – கங்கனா மோதல் உச்சகட்டம் நடிகை வீட்டை இடித்த உத்தவ் தாக்ரே அரசு!

சிவசேனா – கங்கனா மோதல் உச்சகட்டம் நடிகை வீட்டை இடித்த உத்தவ் தாக்ரே அரசு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். இதற்கு மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்- கங்கனா ரணாவத் இடையே வார்த்தை போர் நடந்தது. இதையடுத்து சொந்த ஊரான இமாசல பிரதேசத்தில் தங்கியுள்ள கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு கமாண்டோ பாதுகாப்பு வழங்கியது. மும்பை பாதுகாப்பற்ற நகரம் என்று கூறியுள்ளதால் இனி கங்கனா மும்பைக்கு வரக் கூடாது என்று சிவசேனா கட்சிப் பத்திரிகையான 'சாம்னா'வில் அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் எழுதினார். இதையடுத்து, 'மும்பை என்ன பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரா, நான் வரக் கூடாது என்பதற்கு? நிச்சயமாக மும்பைக்கு வருவேன். முடிந்தால் என்னை தடுத்துப் பாருங்கள்' என்று கங்கனா சவால் விடுத்தார். இந்நிலையில் தனது சொந்த மாநிலமான இ...
பொதுக்குழு முடிந்ததும் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் உடன் புதிய நிர்வாகிகள் மலரஞ்சலி!

பொதுக்குழு முடிந்ததும் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் உடன் புதிய நிர்வாகிகள் மலரஞ்சலி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுக பொதுக்குழு கூட்டம் முடிவடைந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சென்னை மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். துணை பொதுச்செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆ.ராசா, பொன்முடி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பொன்முடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.  ...
கிசான் திட்டத்தில் 110 கோடிக்கு முறைகேடு நடந்திருக்கலாம் 80 பேர் சஸ்பெண்ட்!

கிசான் திட்டத்தில் 110 கோடிக்கு முறைகேடு நடந்திருக்கலாம் 80 பேர் சஸ்பெண்ட்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பிரதமரின் நிதி உதவி திட்டத்தின் கீழ் ஏழை, எளிய விவசாயிகளுக்கு  ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த  திட்டத்தின் கீழ் சேரும் பயனாளிகளுக்கு வேளாண்மைத்துறை சார்பில் அவர்களது வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்படும். இதற்காக ஆன்லைன் மூலம் விவசாயிகள்  விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் இந்த திட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் போலியாக ஆவணங்களை தயாரித்து விவசாயிகள் பெயரில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கிசான் திட்ட முறைகேட்டில் தொடர்புடைய 80 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, ககன் தீப்சிங் பேடி கூறுகையில், கிசான் திட்ட முறைகேட்டில் தொடர்புடைய 80 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். 13 மாவட்டங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புக...
என்னைக் கண்டு ஏன் ஓடி ஒளிகிறீர்கள் பாஜகவினருக்கு கேள்வி எழுப்பும் ஆனந்த் சீனிவாசன்!

என்னைக் கண்டு ஏன் ஓடி ஒளிகிறீர்கள் பாஜகவினருக்கு கேள்வி எழுப்பும் ஆனந்த் சீனிவாசன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பா.ஜ.க அரசின் தவறான திட்டங்களாலும், நிர்வாகக் குறைபாட்டாலும் இந்தியாவின் பொருளாதார நிலை மிகுந்த கவலைக்குரிய நிலையை அடைந்துள்ளது. பொருளாதார அறிஞர்கள் பலரும் பா.ஜ.க அரசின் நிர்வாக தோல்வியைச் சுட்டிக்காட்டி வருகின்றனர். பொருளாதார நிபுணர்களும், எதிர்க்கட்சியினரும் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல், பாசிச போக்கைப் பின்பற்றி விமர்சனங்களை அடக்க நினைக்கின்றனர் பா.ஜ.க-வினர். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வாதங்களை எடுத்துரைக்கும் பொருளாதார நிபுணர்களை, விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என பா.ஜ.க-வினர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். பா.ஜ.க-வினரின் இத்தகைய அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவித்து, விவாதிக்க அச்சம் கொள்வது ஏன் என அவர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், பொருளாதார நி...
சாமியார் யோகி ஆட்சி செய்யும் உ.பி.யில் தொடர்ந்து பாலியல் இம்சையில் கொல்லப்படும் சிறுமிகள்!

சாமியார் யோகி ஆட்சி செய்யும் உ.பி.யில் தொடர்ந்து பாலியல் இம்சையில் கொல்லப்படும் சிறுமிகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாமியார் யோகி ஆட்சி செய்யும் உ.பி.யில் தொடர்ந்து பாலியல் இம்சையில் கொல்லப்படும் சிறுமிகள்! பாஜக ஆட்சி செய்து வரும் உத்தரபிரதேசம் மாநிலத்தில், கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையிலும், கடந்த 20 நாட்களில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், 3 வயது சிறுமி கடந்த புதன்கிழமை திடீரென மாயமானார். அக்குழந்தையை பெற்றோர்கள், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால், காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், கிராமத்திற்கு வெளியே 0.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக குழந்தையின் உடல் பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில், அந்த பிஞ்சு குழந்தை வ...
குழப்பத்தின் உச்சத்தில் அரியர் தேர்வு முடிவுகள்!

குழப்பத்தின் உச்சத்தில் அரியர் தேர்வு முடிவுகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
குழப்பத்தின் உச்சத்தில் அரியர் தேர்ச்சி விவகாரம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மாணவர்களை திரட்டி தேர்வு எழுதுவது கடினமானது என்பதால், பள்ளி மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல, கல்லூரி இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்களை தவிர்த்து பிற ஆண்டு மாணவர்கள், தேர்வு கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால்,  அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்திடம் (ஏஐசிடிஇ) இருந்து தனக்கு மின்னஞ்சல் வந்ததாகவும், அதில் அரியர் மாணவர்களுக்கு தேர்வு எழுதிதான் தேர்ச்சி கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார். இது  மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அதேவேளையில்,  ஏஐசிடிஇ அமைப்பிடம் இருந்து கடிதம் ...
இந்தி தெரியாது போடா டி சர்ட் சர்ச்சையில் சிக்கிய டிவி!

இந்தி தெரியாது போடா டி சர்ட் சர்ச்சையில் சிக்கிய டிவி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *தந்தி டிவிக்கு மத்திய அரசு மற்றும் ட்ராய் கண்டனம்.* *யு டியூபில் இருந்து ஆயுத எழுத்து விவாத நிகழ்ச்சி அகற்றம்..* *தந்தி டிவியில் ஞாயிறு இரவு நடைபெற்ற ஆயுத எழுத்து விவாத நிகழ்ச்சியில் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் என்ற பத்திரிக்கையாளர் பங்கேற்றார்.* *தி.மு.க எம்.பியும் கருணாநிதியின் மகளுமான கனிமொழி தயாரித்து கொடுத்த சிகப்பு டி - ஷர்ட் ஒன்றை அணிந்திருந்தார்.* *"அந்த சட்டையில் இந்தி தெரியாது போடா" - என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது.* *பத்திரிக்கையாளர் என்று கூறிக்கொண்டு தி.மு.க எம்.பி. கனிமொழி தயாரித்து கொடுத்த சட்டையை அணிந்துக் கொண்டு ராதாகிருஷ்ணன் காட்சி ஊடகத்தில் கலந்துக் கொண்டது மத்திய அரசை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. *இதையடுத்து மத்திய அரசு, டிராய் அமைப்பு மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தந்தி டிவி நிர்வாகத்தை எச்சரித்துள்ளனர்.* *இதையடுத்து ...