திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

சிவசேனா – கங்கனா மோதல் உச்சகட்டம் நடிகை வீட்டை இடித்த உத்தவ் தாக்ரே அரசு!

 

நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். இதற்கு மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்- கங்கனா ரணாவத் இடையே வார்த்தை போர் நடந்தது.

இதையடுத்து சொந்த ஊரான இமாசல பிரதேசத்தில் தங்கியுள்ள கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு கமாண்டோ பாதுகாப்பு வழங்கியது.

மும்பை பாதுகாப்பற்ற நகரம் என்று கூறியுள்ளதால் இனி கங்கனா மும்பைக்கு வரக் கூடாது என்று சிவசேனா கட்சிப் பத்திரிகையான ‘சாம்னா’வில் அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் எழுதினார். இதையடுத்து, ‘மும்பை என்ன பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரா, நான் வரக் கூடாது என்பதற்கு? நிச்சயமாக மும்பைக்கு வருவேன். முடிந்தால் என்னை தடுத்துப் பாருங்கள்’ என்று கங்கனா சவால் விடுத்தார்.


இந்நிலையில் தனது சொந்த மாநிலமான இமாசலப் பிரதேசத்தில் இருந்து மும்பைக்கு வந்துள்ளார் கங்கனா ரணாவத். அவருடைய சகோதரியும் மேலாளருமான ரங்கோலியும் உடன் வந்துள்ளார்.

விமான நிலையத்தில் கங்கனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சிவசேனா தொண்டர்கள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. இத்தகைய பாதுகாப்பைப் பெறும் முதல் பாலிவுட் பிரபலம் கங்கனா ரணாவத் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாந்திரா, பாலிஹில்லில் உள்ள கங்கனா ரணாவத்தின் பங்களா வீட்டில் சட்டவிரோதமான கட்டுமான பணிகள் நடப்பதாக மும்பை மாநகராட்சி ஊழியர்கல் நோட்டீஸ் அனுப்பினர். மேலும், உரிய அனுமதி இல்லாமல், கழிவறை பகுதியை அலுவலகமாக மாற்றியதாவும் கூறினார்.ஆனால், அப்படி சட்டவிரோதமாக எதுவும் நடைபெறவில்லை எனவும், இது அச்சுறுத்தும் முயற்சி எனவும் கங்கனா ரனாவத் கூறியிருந்தார்.
இந்நிலையில்,  இன்று காலை 12.30 மணியளவில் கங்கனா ரணாவத் வீட்டின் ஒரு பகுதி மாநகராட்சி ஊழியர்களால் இடிக்கப்பட்டது. இதற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

423 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன