வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

Tag: Mumbai

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து- 2 பேர் பலி!

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து- 2 பேர் பலி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து- 2 பேர் பலி! மும்பையின் தார்டியோ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 20 தளங்கள் கொண்ட அந்த குடியிருப்பின் 18வது தளத்தில் தீப்பிடித்துளள்து. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணியும் முழுவீச்சில் நடைபெறுகிறது. இந்த தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது....
இந்தியாவில் முதல் முறையாக வாட்டர் டேக்ஸி சேவை!

இந்தியாவில் முதல் முறையாக வாட்டர் டேக்ஸி சேவை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  மும்பை அதிநவீன வாட்டர் டாக்ஸி சேவைகளை இயக்குவதன் மூலம் புதிய போக்குவரத்து தீர்வைப் பெற உள்ளது. மும்பை நகருக்கும் 30 கிமீ தொலைவில் உள்ள நவி மும்பை பகுதிக்கும் இடையே நீர்வழிப்பாதையில் வாட்டர் டேக்ஸி சேவையை இயக்குவதற்காக திட்டமிடப்பட்டிருந்தது. நிதின் கட்கரி மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரான பின்னர் இந்த திட்டம் புத்துயிர் பெற்றது. இத்திட்டமானது மும்பை துறைமுக கழகம், மகாராஷ்டிரா மேரிடைம் வாரியம், நகர் மற்றும் தொழில்துறை மேம்பாட்டு கழகம் ஆகிய அமைப்புகளுக்கிடையான கூட்டு முயற்சி ஆகும் முதல் கட்டமாக Ferry Wharfல் உள்நாட்டு குரூஸ் டெர்மினல் (DCT) மற்றும் பல்லார்ட் பகுதியில் உள்ள சர்வதேச குரூஸ் டெர்மினல் (ICT) ஆகிய இரு முனையங்களுக்கு இடையே இந்த வாட்டர் டேக்ஸி சேவை தொடங்க உள்ளது. மூன்று நிறுவனங்கள்  இந்த வாட்டர் டேக்ஸி சேவையை அளிக்க உள்ளன. மேலும் ஒரு நிறுவனம் அ...
தெருநாய்களுக்கு உணவளித்த பெண்ணிற்கு ரூ.8 லட்சம் அபராதம்!

தெருநாய்களுக்கு உணவளித்த பெண்ணிற்கு ரூ.8 லட்சம் அபராதம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தெருநாய்களுக்கு உணவளித்த பெண்ணிற்கு ரூ.8 லட்சம் அபராதம்! நவிமும்பையில் உள்ள என்.ஆர்.ஐ. ஹவுசிங் காம்ப்ளக்ஸ் கட்டிடத்தில் 40 குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பை சேர்ந்த பெண் அன்சு சிங். இவர் தெருநாய்களுக்கு கட்டிட வளாகத்தில் உணவளித்து வந்தார். இதனால் காம்ப்ளக்ஸ் நிர்வாகம் அப்பெண்ணை நாய்களுக்கு உணவு வழங்க தடை விதித்தது. ஆனால் அன்சு சிங் இந்த தடையை மீறி உணவளித்து வந்தார். இதனால் கட்டிட வளாகத்தில் உணவளித்த குற்றத்துக்காக ஹவுசிங் காம்ப்ளக்ஸ் நிர்வாகம் நாள்தோறும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல் விதிக்கப்பட்ட அபாரதம் ரூ.8 லட்சம் வரையில் எட்டி இருப்பதாகவும், இது சட்டவிரோதமானது என அன்சு சிங் குற்றம்சாட்டி உள்ளார். இதே போல மற்றொரு பெண்ணும் தெருநாய்களுக்கு உணவளித்ததாக ரூ.6 லட்சம் வரையில் அபராதம் விதித்தது. இது பற்றி ஹவுசிங் காம்ப்ளக்ஸ் செயலாளர் வினிதா ஸ்...
பரபரப்பான சூழலில் மகாராஷ்டிரா கவர்னரை சந்தித்து பேசிய கங்கனா ரனாவத்!

பரபரப்பான சூழலில் மகாராஷ்டிரா கவர்னரை சந்தித்து பேசிய கங்கனா ரனாவத்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
பரபரப்பான சூழலில் மகாராஷ்டிரா கவர்னரை சந்தித்து பேசிய கங்கனா ரனாவத்   மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், மும்பை போலீசாரை மாபியாக்களுடன் ஒப்பிட்டும் கருத்து தெரிவித்து நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சையை கிளப்பினார். மேலும், அவர் மகாராஷ்டிர அரசு மீதும் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நடிகை கங்கனா ரணாவத்தின் மும்பை அலுவலகத்தின் சில பகுதிகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதியை இடித்து தள்ளினர். மேலும், கங்கனா மகாராஷ்டிரா மாநிலம் வர கடும் கண்டனங்கள் எழுந்தது. ஆனால், கங்கனாவுக்கு இமாச்சலபிரதேச அரசு ’ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கியது. இந்த ’ஒய் பிளஸ்’ பாதுகாப்பு படைக்கான செலவை மாநில அரசு ஏற்குமா? அல்லது கங்கனா ர...
சிவசேனா – கங்கனா மோதல் உச்சகட்டம் நடிகை வீட்டை இடித்த உத்தவ் தாக்ரே அரசு!

சிவசேனா – கங்கனா மோதல் உச்சகட்டம் நடிகை வீட்டை இடித்த உத்தவ் தாக்ரே அரசு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். இதற்கு மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்- கங்கனா ரணாவத் இடையே வார்த்தை போர் நடந்தது. இதையடுத்து சொந்த ஊரான இமாசல பிரதேசத்தில் தங்கியுள்ள கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு கமாண்டோ பாதுகாப்பு வழங்கியது. மும்பை பாதுகாப்பற்ற நகரம் என்று கூறியுள்ளதால் இனி கங்கனா மும்பைக்கு வரக் கூடாது என்று சிவசேனா கட்சிப் பத்திரிகையான 'சாம்னா'வில் அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் எழுதினார். இதையடுத்து, 'மும்பை என்ன பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரா, நான் வரக் கூடாது என்பதற்கு? நிச்சயமாக மும்பைக்கு வருவேன். முடிந்தால் என்னை தடுத்துப் பாருங்கள்' என்று கங்கனா சவால் விடுத்தார். இந்நிலையில் தனது சொந்த மாநிலமான இ...
பாடல் காட்சிக்கு சுவிட்சர்லாந்து செல்லும் ரஜினி- நயன்தாரா ஜோடி..! தர்பார் அப்டேட்

பாடல் காட்சிக்கு சுவிட்சர்லாந்து செல்லும் ரஜினி- நயன்தாரா ஜோடி..! தர்பார் அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தர்பார் பாடல் காட்சிக்கு சுவிட்சர்லாந்து செல்லும் ரஜினி- நயன்தாரா ஜோடி..! லைகா நிறுவனம் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்தது வரும் தர்பார் ஷூட்டிங் மும்பையில் தொடங்கி நடந்து வருகிறது. முதற்கட்ட ஷூட்டிங் முடிந்து சின்ன ஓய்வுக்கு பின் மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையிலேயே தொடர்கிறது. ஷூட்டிங் காட்சிகள், படங்கள் அடிக்கடி லீக் ஆகி படக்குழுவை ஷாக் ஆக்கினாலும், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. இதை தடுக்க இயக்குனர் முருகதாஸ் பல அதிரடிகள் செய்தும் பலன் இல்லாமல் போனது. அதோடு ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரும் செல்போனை பயன் படுத்த கூடாது என்றும் தடை விதித்தார். அதை மீறியும் ஏதாவது படங்கள் லீக் ஆகி வருகிறது. இந்த சூழலில் தர்பார் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் என பரவிய தகவலை இயக்குனர் முருகதாஸ் முற்றிலும் மறுத்துள்ளனர். அதோடு, படப்பி...
நடு வானில் பறந்த விமானத்தை தரையிறங்கி ஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவர் பயணம் ரத்து..!

நடு வானில் பறந்த விமானத்தை தரையிறங்கி ஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவர் பயணம் ரத்து..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பறந்து கொண்டிருந்த விமானத்தை அவசரமாக தரையிறக்கி முன்னாள் ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவரின் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள்..! இந்தியாவில் உள் நாட்டு விமான சேவையில் அதிகம் பங்கு வகித்த ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தற்போது கடும் கடன் நெருக்கடியில் உள்ளது. விமான பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு கூட வருவாய் இல்லாமல் பெரும் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவர் பதவியை நரேஷ் கோயல் திடீரென ராஜினாமா செய்தார். மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கேட்டுக் கொண்டதன் பேரில் நரேஷ் கோயல் ராஜினாமா செய்தார் எனக் கருதப்படுகிறது. இந்த நிலையில் நரேஷ் கோயலும் அவர் மனைவி அனிதா கோயலும் மும்பையில் இருந்து துபாய் வழியாக லண்டன் செல்ல விமானம் ஏறினார்கள். விமானம் ரன்வேயில் புறப்பட்டு வானில் பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில் விமான நிலைய கட்டு...
நயன்தாரா மேற்பார்வையில் கிரிக்கெட் விளையாடும் ரஜினி – தர்பார் ஸ்பெஷல்

நயன்தாரா மேற்பார்வையில் கிரிக்கெட் விளையாடும் ரஜினி – தர்பார் ஸ்பெஷல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தில் தினம் ஒரு அப்டேட் வந்து ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லைகா புரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினி, நயன்தாரா முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துவரும் படம் ‘தர்பார்’. ‘சர்கார்’ படத்துக்கு பிறகு முருகதாஸ் இந்த படத்தை இயக்குவதால், ரஜினியின் பொலிட்டிக்கல் என்ட்ரிக்கு இந்த படம் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் தினமும் ஒரு ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் வெளியாகி ரஜினி ரசிகர்களின் பல்ஸ் ரேட்டை எகிறச் செய்திருக்கிறது. ரஜினி படத்தில் எதாவது ஒரு விளையாட்டை சேர்த்து காமெடியோ, சண்டைக் காட்சிகளோ வைப்பது தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு பழக்கமான விஷயம். தர்மதுரை’ படத்தில் வரும் கபடி காட்சி, ‘பாபா’ படத்தில் வாலிபால் சண்டைக் காட்சி, ‘...