வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

பாடல் காட்சிக்கு சுவிட்சர்லாந்து செல்லும் ரஜினி- நயன்தாரா ஜோடி..! தர்பார் அப்டேட்

 

தர்பார் பாடல் காட்சிக்கு சுவிட்சர்லாந்து செல்லும் ரஜினி- நயன்தாரா ஜோடி..!

லைகா நிறுவனம் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்தது வரும் தர்பார் ஷூட்டிங் மும்பையில் தொடங்கி நடந்து வருகிறது.

முதற்கட்ட ஷூட்டிங் முடிந்து சின்ன ஓய்வுக்கு பின் மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையிலேயே தொடர்கிறது.
ஷூட்டிங் காட்சிகள், படங்கள் அடிக்கடி லீக் ஆகி படக்குழுவை ஷாக் ஆக்கினாலும், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.

இதை தடுக்க இயக்குனர் முருகதாஸ் பல அதிரடிகள் செய்தும் பலன் இல்லாமல் போனது. அதோடு ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரும் செல்போனை பயன் படுத்த கூடாது என்றும் தடை விதித்தார்.

அதை மீறியும் ஏதாவது படங்கள் லீக் ஆகி வருகிறது.

இந்த சூழலில் தர்பார் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் என பரவிய தகவலை இயக்குனர் முருகதாஸ் முற்றிலும் மறுத்துள்ளனர்.

அதோடு, படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் வரை நடக்கும் என்றும், பாடல் காட்சி ஒன்றை படமாக்க ரஜினி- நயன்தாரா ஜோடி சுவிட்சர்லாந்து நாட்டுக்கு செல்லப் போகிறார்கள் என்றும் கூறியிருக்கிறார் இயக்குனர் முருகதாஸ்.

ஆகஸ்டு மாதம் வரை தர்பார் படப்பிடிப்பு நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் ஒரு பாடல் காட்சிக்காக ரஜினிகாந்தும், நயன்தாராவும் சுவிட்சர்லாந்து செல்ல இருக்கிறார்கள். தர்பார் படம் ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்.

1,500 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன