சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

நயன்தாரா காணாமல் போனால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா… சாதாரண மக்கள் என்றால் அலட்சியமா..? – போலீசாரை காய்ச்சி எடுத்த நீதிமன்றம்

 

 

நயன்தாரா காணாமல் போனால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா… சாதாரண மக்கள் என்றால் அலட்சியமா..? – போலீசாரை காய்ச்சி எடுத்த நீதிமன்றம்

சேலத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவரின் மகள் கவுசல்யா(19). இவர் கடந்த பிப்ரவரி மாதம் காணாமல் போனதாக திருச்செங்கோடு காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த புகார் மீது இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து மகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனக்கோரி காணாமல் போன பெண்ணின் பெற்றோர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசாருக்கு நீதிபதி சரமாரி கேள்விகள் கேட்டு கிடுக்கிப்பிடி போட்டதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் “புகார் கொடுத்து 3 மாதங்கள் முடிந்தும் இன்னமும் ஏன் போலீஸாரால் கண்டு பிடிக்க முடியவில்லை.

நயன்தாரா போன்ற பிரபல நடிகைகள் காணாமல் போனால்தான் கண்டுபிடிப்பீர்களா…
போலீஸ் அப்போது தான் வேலை செய்யுமா… சாதாரண மக்கள் காணாமல் போனால் நடவடிக்கை எடுக்காதா…
அரசு ஊழியர்கள் வாங்குகிற சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டும்.

உங்கள் வீட்டு பெண்கள் இப்படி காணாமல் போனால் இப்படி தான் அலட்சியம் காட்டுவீர்களா… என போலீசாரை கடுமையாக நீதிபதி காய்ச்சி எடுத்தது போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1,107 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன