ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

எங்களை சாதாரணமாக எடை போட வேண்டாம் தமிழக அரசுக்கு TR எச்சரிக்கை

எங்களை சாதாரணமாக எடை போட வேண்டாம் தமிழக அரசுக்கு TR எச்சரிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    நான் திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர். இது என் தனிப்பட்ட கருத்து. ஒரு திரைப்படம் பார்க்க ஒரு ரசிகன் 100 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தால் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டியதாக இருக்கிறது 12% GST வரி. அதை விட கூடுதலாக தமிழக அரசுக்கு செலுத்த வேண்டியதாக இருக்கிறது 8% கேளிக்கை (LBT) வரி. மத்திய அரசு போட்டுவிட்டது GST வரி, பின்பு ஏன் மாநில அரசு போடுகிறது Extra வரி? பெரும்பாலும் இந்தியாவில் உள்ள எந்த பிற மாநிலங்களிலும் போடவில்லை வரி. மத்திய அரசு சொல்வது ஒரே நாடு ஒரே வரி, ஆனால் இந்த தமிழ் நாடு மாநிலத்தில் மட்டும் ஏன் இரட்டை வரி? இந்தியாவில் தமிழ் நாடு என்ன தனி தீவா? எங்கள் திரையுலகை கொடுக்கிறார்களா காவா? இதே கோடம்பாக்கத்திலுருந்து வந்து தமிழகத்தை 5 முறை ஆண்ட முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழக திரையுலகிற்கு கேளிக்கை வரியை செய்தார் ரத்து. அதே போல் கோடம்பாக்கத்திலுருந...
காதலித்து ஏமாற்றிய காதலன் மீது ஆசீட் அடித்த காதலி!

காதலித்து ஏமாற்றிய காதலன் மீது ஆசீட் அடித்த காதலி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  காதலித்து ஏமாற்றிய காதலன் மீது ஆசீட் அடித்த காதலி! ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பெத்தபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திரா - சுப்ரியா ஜோடி 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நாகேந்திராவின் பெற்றோர், கடந்த மாதம் வேறொரு பெண்ணுடன் அவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர். தகவல் தெரிந்து ஆத்திரமடைந்த சுப்ரியா, இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நாகேந்திரா மீது ஆசிட்டை வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் முகம், கை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயமடைந்த நாகேந்திரா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்....
சுஷாந்த் சிங் காதலி ரியாவுக்கு மீண்டும் சம்மன்!

சுஷாந்த் சிங் காதலி ரியாவுக்கு மீண்டும் சம்மன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியது, பண மோசடியில் ஈடுபட்டதாக அவரின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. போதைப்பொருள் கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது குறித்து போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் (என்சிபி) ரியா மீது வழக்குப்பதிவு செய்தனர். ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது சுஷாந்த் சிங் வீட்டில் ஹவுஸ்கீப்பிங் மேனேஜராக பணியாற்றிய சாமுவேல் மிராண்டா ஆகியோரின் வீடுகளில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். விசாரணைக்கு ...
குளத்தை காணோம் என ஒட்டப்பட்ட போஸ்டர் பெரும் பரபரப்பு

குளத்தை காணோம் என ஒட்டப்பட்ட போஸ்டர் பெரும் பரபரப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கிணத்தை காணோம் காமெடி மிக பிரபலம். இப்போது அதே பாணியில் குளத்தை காணோம் என ஒட்டப்பட்ட போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் நகராட்சி பகுதியில் 74 குளங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் ஏராளமான குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி தற்போதும் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. பெரும்பாலான குளங்களின் நீர் வழி் பாதைகள் ஆக்கிரமிப்பு காரணமாக அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் திருவாரூர் நகராட்சி 25-வது வார்டு பகுதியில் பயன்பாட்டில் இருந்த செட்டிகுளத்தை காணவில்லை என கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காணாமல் போன குளத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி மீண்டும் திருவாரூர் நகர் பகுதிகளில் ‘குளத்தை காணவில்லை’ என போஸ்டர் அடித்து அந்த பகுதி ...
தென்னிந்திய திரையுலகை முற்றிலுமாக  புறக்கணிக்கும் மத்திய அரசு!

தென்னிந்திய திரையுலகை முற்றிலுமாக புறக்கணிக்கும் மத்திய அரசு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  திரையரங்குகள் மீண்டும் திறப்பது குறித்து மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பு திரையரங்கு உரிமையாளர்கள், தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினரோடு வரும் 8ம் தேதி கூட்டம் நடத்த அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்த கூட்டத்தில் தென்னிந்தியாவில் உள்ள எந்த சங்கத்திற்கோ, திரையரங்கு உரிமையாளர்களுக்கோ அழைப்பு இல்லை. ஒட்டுமொத்தமாக தென்னிந்தியாவை புறக்கணித்து இந்த கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. தென்னிந்திய வர்த்தக சபையான பிலில் சேம்பர் என்ன செய்கிறது? ஆண்டுக்கு சில படங்களை மட்டும் எடுக்கும் குஜராத்தில் இருந்து இரு அமைப்புகளுக்கு அழைப்பு. ஆண்டு முழுதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 800க்கும் அதிகமாக படமெடுக்கும் தென்னிந்திய திரையுலகம் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது வேதனையான உண்மை. திரைத்துறை இப்போதாவது விழித்துக் கொள்ளுமா! - கோடங்க...
திருமண மண்டபமாக மாறும் ஏவிஎம் ஜி தியேட்டர்!

திருமண மண்டபமாக மாறும் ஏவிஎம் ஜி தியேட்டர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    சினிமா தொழில் நாளுக்கு நாள் நசிந்து கொண்டு வருவதை தொடர்ந்து, சென்னையில் அமைந்திருந்த ஸ்டூடியோக்களும், தியேட்டர்களும் காணாமல் போய்விட்டன. அவை இருந்த இடம் தெரியாத அளவுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறிவிட்டன. இதற்கு ஏவி.எம். ஸ்டூடியோவும் விதிவிலக்கு அல்ல என்றாகிவிட்டது. ஏவி.எம். ஸ்டூடியோவின் ஒரு பகுதி அடுக்குமாடி குடியிருப்பாக மாறிவிட்டது. இன்னொரு பகுதி ஆஸ்பத்திரியாக மாறியிருக்கிறது. ஏவி.எம். ராஜேஸ்வரி தியேட்டரும் வேறு ஒரு வடிவத்துக்காக இடிக்கப்படுகிறது. ஏவி.எம். ஸ்டூடியோவின் அழகான அடையாளமாக இருந்த ‘கார்டன் ஸ்டூடியோ’ விரைவில் திருமண மண்டபமாக மாறுகிறது. ‘கார்டன் ஸ்டூடியோ’வில் பரந்து விரிந்த புல்வெளியும், அதற்கு நடுவில் ஒரு வட்ட வடிவமான மண்டபமும் உள்ளன. அதையொட்டி ஒரு ‘டப்பிங்’ தியேட்டரும், பங்களாவும் அமைந்துள்ளன .ஆயிரக்கணக்கான பட...
கார்ட்டூன் சர்ச்சையில் தேமுதிக சுதீஷ்!

கார்ட்டூன் சர்ச்சையில் தேமுதிக சுதீஷ்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    *பதிலடி கார்ட்டூம் - சுதீஷ் விளக்கம்* *"கடந்த, 2016ம் ஆண்டு தினமலர் தேர்தல் களத்தில் வெளியிட்ட கார்ட்டூனை தான் தற்போது முகநூலில் பதிவிட்டேன்.*   *அன்று அவர்கள் போட்ட கார்ட்டூனுக்கும், இன்று அவர்கள் வெளியிட்டுள்ள கார்ட்டூனுக்கும் (விஜயகாந்தை ஏலம் விடுவதை போல சித்தரித்து) உள்ள வேறுபாட்டை தமிழக மக்கள் அறியவே முகநூலில் பதிவிட்டேன்.* *அது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதால் உடனடியாக நீக்கிவிட்டேன்" எல்.கே.சுதீஷ்  ...
பி.எம்.கேர்ஸ் நன்கொடை லிஸ்ட் வெளியிட ஏன் தயக்கம் – பிரதமர் மோடிக்கு ப.சி கேள்வி

பி.எம்.கேர்ஸ் நன்கொடை லிஸ்ட் வெளியிட ஏன் தயக்கம் – பிரதமர் மோடிக்கு ப.சி கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு மார்ச் கடைசி வாரத்தில் அறிவித்து, நன்கொடைகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து பல தனியார் நிறுவனங்கள், அரசு அமைப்புகள், பிரபலங்கள் உள்ளிட்ட தனி நபர்கள் நன்கொடைகளை வாரி வழங்கினர். இதற்கு மத்தியில், ‘பி.எம்.கேர்ஸ்’ நிதியில் திரட்டப்பட்ட நன்கொடைகளை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு (என்.டி.ஆர்.எப்.) மாற்ற உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து, தள்ளுபடி செய்து கடந்த 18-ந் தேதி தீர்ப்பு அளித்தது. இரண்டும் வெவ்வேறு நிதி, தனித்தனி பொருள், நோக்கத்துடன் கூடியவை என்பதால், தேசிய பேரிடர் நிவாரண நிதியுடன் பி.எம்.கேர்ஸ் நிதியை மாற்ற முடியாது என தீர்ப்பில் கூறப்பட்டது. தற்போது பி.எம்.கேர்ஸ் நிதிக்கு வந்த நன்கொடைகள் பற்றிய கணக்கு அறிக்கைய...
பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை முடக்கிய ஹேக்கர்கள்!

பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை முடக்கிய ஹேக்கர்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பிரதமர் நரேந்திர மோடியின் narendramodi_in என்ற தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கினர் * பிட்காயின் மூலம் பணம் செலுத்துபவர்கள் மோடியின் கணக்கை முடக்கியதை ட்விட்டர் உறுதிப்படுத்தியுள்ளது முடக்கப்பட்ட கணக்கை மீட்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.