ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

பேரிடரைக் காரணம் காட்டி விதிமுறைகளை மீறி கொள்முதல் செய்யும் அ.தி.மு.க அரசு மின்கட்டணத்தை ஏன் குறைக்கவில்லை? ஸ்டாலின் கேள்வி

பேரிடரைக் காரணம் காட்டி விதிமுறைகளை மீறி கொள்முதல் செய்யும் அ.தி.மு.க அரசு மின்கட்டணத்தை ஏன் குறைக்கவில்லை? ஸ்டாலின் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பேரிடரைக் காரணம் காட்டி விதிமுறைகளை மீறி கொள்முதல் செய்யும் அ.தி.மு.க அரசு மின்கட்டணத்தை ஏன் குறைக்கவில்லை?" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின்சாரச் சட்ட விதிகளின்படி ஊரடங்கு காலத்தின் போது முந்தைய மின் கட்டணத் தொகையை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது” என்று அ.தி.மு.க அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து- மின் நுகர்வோரின் துயரத்தை உணர மறுப்பதற்கு மிகுந்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முந்தைய மாதத்தில் செலுத்திய கட்டணத்திற்குரிய “யூனிட்களை” கழிக்காமல்” செலுத்திய பணத்தை மட்டும் கழிப்பதால்தான் இந்தக் “கட்டண உயர்வுப் பிரச்சினை” என்பதை இன்னும் மின்துறை அமைச்சர் தங்கமணியோ அல்லது முதலமைச்சர் பழனிசாமியோ உணராமல் இருப்பது கொரோனா ஊரடங்கை விட மிகக் கொடுமையாக இருக்கிறது. ...
வேறு காரணங்களால் இறந்த 444 மரணங்களையும் கொரானா டெத் லிஸ்ட்டில் சேர்த்த தமிழக அரசு!

வேறு காரணங்களால் இறந்த 444 மரணங்களையும் கொரானா டெத் லிஸ்ட்டில் சேர்த்த தமிழக அரசு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வேறு காரணங்களால் இறந்த 444 மரணங்களையும் கொரானா டெத் லிஸ்ட்டில் சேர்த்த தமிழக அரசு! தமிழகத்தில் கொரானா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், ஒரே நாளில் அதிகபட்சமாக 5 ஆயிரத்து 849 பேர் உள்பட இதுவரை ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 492 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, தொற்று படிப்படியாக குறைந்துவரும் நிலையில், ஒரே நாளில் 1171 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்கியுள்ளது சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டங்களில் தொடர்ந்து, 10 நாட்களாக நாள்தோறும் மூவாயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரானா தொற்று கண்டறியப்பட்டுவந்த நிலையில், ஒரே நாளில் அந்த எண்ணிக்கை 4600-ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 74 பேர் உயி...
அமைச்சர் வேலுமணிக்கு எதிராக கருத்து வெளியிட தடைவிதிக்க முடியாது – கோர்ட்

அமைச்சர் வேலுமணிக்கு எதிராக கருத்து வெளியிட தடைவிதிக்க முடியாது – கோர்ட்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அமைச்சர் வேலுமணிக்கு எதிராக கருத்து வெளியிட தடைவிதிக்க முடியாது - கோர்ட் சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக்கோரி அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் மீதான புகார் குறித்து ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டுக்கான எந்த முகாந்திரமும் இல்லாததால், விசாரணையைக் கைவிட முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த நீதிபதிகள், நீதிமன்றம் உத்தரவு இல்லாமல் அமைச்சர் மீதான வழக்கை கைவிட தமிழக அரசு எப்படி முடிவெடுத்தது என்பது குறித்து வி...
டிசம்பருக்குள் வைரஸ் தடுப்பூசி ரெடியாகும்… விலையும் ஆயிரத்துக்குள் தானாம்…!

டிசம்பருக்குள் வைரஸ் தடுப்பூசி ரெடியாகும்… விலையும் ஆயிரத்துக்குள் தானாம்…!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
  டிசம்பருக்குள் வைரஸ் தடுப்பூசி ரெடியாகும்... விலையும் ஆயிரத்துக்குள் தானாம்...! கொரானா தொற்றுக்கான தடுப்பூசி வரும் டிசம்பர் மாதத்துக்குள் தயாராகிவிடும் எனவும், அதன் விலை ஆயிரம் ரூபாயாகவும் இருக்கும் எனவும், இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரானா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து, கொரானா தொற்றுக்கான தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்கு புனேயைச் சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியூட், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்தது. மேலும், கொரானா தடுப்பூசியின் விலை ஆயிரம் ரூபாய்க்கும் சற்று குறைவாகவே இருக்கும் எனவும், வரும் டிசம்பருக்குள் தடுப்பூசி தயாராகிவிடும் என்றும் சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். தடுப்பூசியை பாத...
தியேட்டர்கள் திறக்க இப்போதைக்கு வாய்ப்பு இல்லை – கடம்பூர் ராஜு

தியேட்டர்கள் திறக்க இப்போதைக்கு வாய்ப்பு இல்லை – கடம்பூர் ராஜு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
  கொரானா பரவல் காரணமாக தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாரில் செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:- தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை. கொரோனா பாதிப்பு குறைவதை பொறுத்து திரையரங்குகளை திறப்பது பற்றி முதல்வர் முடிவெடுப்பார். வெளிநாடுகளைப் போன்று இடைவெளி விட்டு படம் பார்த்தால், உரிமையாளருக்கு லாபம் கிடைக்காது...
தங்க கடத்தலில் கிடைத்த பணத்தில் சினிமாவுக்கு பைனான்ஸ் செய்த ஸ்வப்னா!

தங்க கடத்தலில் கிடைத்த பணத்தில் சினிமாவுக்கு பைனான்ஸ் செய்த ஸ்வப்னா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
    தங்க கடத்தலில் கிடைத்த பணத்தில் சினிமாவுக்கு பைனான்ஸ் செய்த ஸ்வப்னா! கேரளாவை உலுக்கி வரும் தங்க கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்ப்னா தங்க கடத்தல் பணத்தில் மலையாள சினிமா படங்களுக்கு பைனானஸ் செய்துள்ளது தெரியவந்துள்ளது. தங்கம் கடத்தலில் சிக்கிய ஸ்வப்னாதான் இப்போது கேரளாவில் ஹாட் டாபிக். நடிகை கடத்தலில் தொடங்கி சொந்த தம்பியை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியது வரை தோண்ட தோண்ட பூதம் புறப்படுகிறது. அது மட்டுமல்ல இப்போது சினிமாவிற்கும் பினாமியாக பைனான்ஸ் செய்துள்ளது தெரியவந்துள்ளது. கேரளத்தில் தங்கம் கடத்தப்பட்டது தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயா் ஆகியோருக்கான என்ஐஏ காவல் வரும் 24-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கில் இருவருக்கும் விதிக்கப்பட்டிருந்த 8 நாள் என்ஐஏ காவலா் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது....
கந்த சஷ்டி சர்ச்சை விவகாரத்தில் வழக்கம் போல தாமதமாக அதே நேரம் ஆவேசமாக கருத்து சொன்ன ரஜினி!

கந்த சஷ்டி சர்ச்சை விவகாரத்தில் வழக்கம் போல தாமதமாக அதே நேரம் ஆவேசமாக கருத்து சொன்ன ரஜினி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
கந்த சஷ்டி சர்ச்சை விவகாரத்தில் வழக்கம் போல தாமதமாக அதே நேரம் ஆவேசமாக கருத்து சொன்ன ரஜினி!   கருப்பர் கூட்டம் என்கிற யுடியூப் சேனலில், கந்த சஷ்டி கவசம் தொடர்பான சர்ச்சை வீடியோ குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு, அந்த யூடியூப் சேனலின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், வழக்கம் போல சம்பவம் நடந்து பல நாட்களுக்குப் பின் இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார். அதில் எல்லாமதமும் சம்மதமே எனக் குறிப்பிட்டாலும் மிக ஆவேசமான வார்த்தைகளை ரஜினி பயன்படுத்தி உள்ளார். ஆன்மீக அரசியல் நடத்தப் போவதாக சொன்ன ரஜினி ஒரு மதம் சார்ந்த பிரச்சினை எழுந்து பல நாட்கள் கழித்து தன் கருத்தை வெளிப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
கொரானா விவகாரம் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கோர்ட் சரமாரி கேள்வி!

கொரானா விவகாரம் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கோர்ட் சரமாரி கேள்வி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தனியார் மருத்துவமனைகளுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி மதுரையில் மாரடைப்பு ஏற்படும் நோயாளிகளை கூட, தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்க மறுப்பது ஏன் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. "கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கிற்கு 15 ஆயிரம் வரை கேட்டு நிர்பந்தம் செய்யப்படுவதாக தகவல் வருகிறதே?" என்றும் கேட்டுள்ளது. "கொரானாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய பணம் கேட்பதாக தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்", என்று உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது மதுரை கொரானா தடுப்பு சிறப்பு அதிகாரி நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையில் கொரோனா பரவல் தொடர்பாக தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கில் நீதிமன்றம் இந்த அதிரடிகளை அரங்கேற்றியுள்ளது....