ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

மதுக்கடைகளை திறந்த பாஜக அரசை எதிர்க்கும் சிவசேனா!

மதுக்கடைகளை திறந்த பாஜக அரசை எதிர்க்கும் சிவசேனா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மதுக்கடைகளை திறந்த பாஜக அரசை எதிர்க்கும் சிவசேனா! கொரானா தொற்றால் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள் நாடு முழுவதும்  சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா,மராட்டியம், கர்நாடகா, டெல்லி, அசாம் உள்பட பல மாநிலங்களில்  மதுக் கடைகள்  கடத்த சில நாட்களாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. காலை முதலே குடிகாரர்கள் கொளுத்தும் வெயிலிலும் வரிசையில் காத்து நின்று மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். ஆனால் பல இடங்களில் மதுக்கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல், அடித்து பிடித்துக் கொண்டு மக்கள் மதுவை வாங்கிச் செல்கின்றனர். இதனால் கொரானா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகள் எழுந்து வருகின்றன. கடந்த இரண்டு நாட்களாக கொரானாவை விடவும் அதிகம் பேசப்படும் விஷயமாகியிருப்பது மது...
2020வரை நடிப்பதற்கு சம்பளம் வேண்டாம் -முன்னாள் பத்திரிகையாளர் இந்நாள் நடிகர் அறிவிப்பு

2020வரை நடிப்பதற்கு சம்பளம் வேண்டாம் -முன்னாள் பத்திரிகையாளர் இந்நாள் நடிகர் அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! மதுரையிலிருந்து சினிமா கனவுகளோடு வந்த நான், மீடியாவில் தற்காலிகமாக வேலை பார்த்தேன். அதனைத் தொடர்ந்து சினிமாவில் உதவி கேமராமேன், அதன் அடுத்த கட்டமாக கேமராமேன் பிறகு நடிகன் என்று படிப்படியாக உழைத்து, வளர்ந்து இன்று எங்கு சென்றாலும் ஒரு நடிகனாக அடையாளம் தெரிகிற அளவுக்கு வந்திருக்கிறேன். திரையில் நடிக்க ஆரம்பித்தது என்பது என் வாழ்வில் தற்செயலாக நடந்த சம்பவம் தான். முதல் படமான 'நான் மகான் அல்ல' தொடங்கி இப்போதுவரை தொடர்ந்து நடிகனாக பிசியாக இருக்கிறேன். அதற்கு காரணம்- எனது இயக்குனர்கள், உதவி இயக்குர்கள் தயாரிப்பு நிர்வாகிகள் மற்றும் திரைப்படத்துறை நண்பர்கள்தான்! அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்..! வாய்ப்புக் கொடுத்தது இயக்குனர்கள் என்றாலும், எனக்கு சம்பளம் கொடுத்தது தயாரிப்பாளர்கள் எனும் முதலாளிகள் தான்! இ...
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்க  ஆகஸ்ட் 31வரை காலக்கெடு!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்க ஆகஸ்ட் 31வரை காலக்கெடு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாட்டையே உலுக்கிய மிக முக்கியமான சம்பவம் பாபர் மசூதி இடிப்பு. இந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் வெடித்த கலவரத்தால் சுமார் ப்2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த கலவரத்துக்கு பா.ஜ.க மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அப்போதைய உத்தர பிரதேச முதல்வர் கல்யாண்சிங், வினய் கத்தியார், விஹெச்பி தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட 21 பேர் தான் காரணம் என அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த கலவர வழக்கு லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பை இந்த ஆண்டு ஏப்ரல் இறுதிக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கொண்டு வரப்பட்ட ஊ...
திறக்கப்பட்ட மதுக்கடைகளை உடனே மூட கோர்ட் உத்தரவு!

திறக்கப்பட்ட மதுக்கடைகளை உடனே மூட கோர்ட் உத்தரவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திறக்கப்பட்ட மதுக்கடைகளை உடனே மூட கோர்ட் உத்தரவு! தமிழகத்தில் கொரானா வைரஸ் நாளுக்கு நாள் மிக   வேகமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு பல இடங்களில் தளர்த்தப்பட்டு சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. நோய்த் தொற்று அதிகம் உள்ள பகுதிகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளில் விற்பனை சக்கை போடு போடுகிறது. சுமார் 40 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் குடி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மது வாங்க சமூக இடைவேளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.  போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்ததுதான் வேதனை. இது ஒருபுறமிருக்க, சில இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக தமிழகம் முழுதும் பெண்கள் மத்தியில் டா...
இரசாயன ஆலைகளின் தரத்தை சரிபாருங்கள் – ஆபத்தை எச்சரிக்கும்  திருமா

இரசாயன ஆலைகளின் தரத்தை சரிபாருங்கள் – ஆபத்தை எச்சரிக்கும் திருமா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழ்நாட்டில் இரசாயன ஆலைகளை மீண்டும் துவக்குவதற்கு முன் சுற்றுச்சூழல் வாரியம் சான்றிதழ் அளிக்க வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! ~~~~~~~~~~~ ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எல்.ஜி என்ற தென்கொரிய நிறுவனத்துக்குச் சொந்தமான இரசாயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட நச்சுவாயுக் கசிவால் பத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மிகுந்த வேதனையளிக்கிறது. இவ்விபத்து குறித்து உரிய புலனாய்வு விசாரணை நடத்தி, உயிரிழந்தோர் மற்றும் பிற பாதிக்கப்பட்டோர் குடுத்தினருக்குப் போதிய இழப்பீடும் வாழ்வாதாரப் பாதுகாப்பும் அளித்திட மத்திய அரசும் ஆந்திரமாநில அரசும் முன்வர வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். ஸ்டைரீன் என்ற வேதிப்பொருளைப் பயன்படு...
முதல்வருக்கு சினிமா தயாரிப்பாளர்கள் நன்றி!

முதல்வருக்கு சினிமா தயாரிப்பாளர்கள் நன்றி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  முதல்வருக்கு சினிமா தயாரிப்பாளர்கள் நன்றி!   மாண்புமிகு முதலமைச்சர் அமைச்சர் அவர்களுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களளின் பணிவான வணக்கம். கொரோனாவின் பாதிப்பினால் 50 நாட்களுக்கு மேலாக தமிழ் திரைப்பட துறை சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் நடக்கவில்லை. இந்த நிலையில் கடந்த மே 4-ம் தேதி குறைந்த பட்சம் படப்பிடிப்பு இல்லாத பணிகளான போஸ்ட்-புரொடக்சன் பணிகளுக்கு அனுமதி வழங்கினால், ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்து இந்த பணிகளுக்காக 50 நாட்களாக காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் அவைகளை முடித்து, படங்களை தயார் செய்ய முடியும் என்று தங்களிடம் கோரிக்கை வைத்திருந்தோம். எங்களின் கோரிக்கையை கனிவாக கவனித்து உடனே நடவடிக்கை எடுத்து, நாங்கள் கேட்டுக்கொண்டது போலவே, தமிழ் திரைப்பட துறை போஸ்ட் புரோடக்ஷன் பணிகளை 11.5.2020 முதல் செய்து கொள்ள தாங்கள் அனுமதி அளித்து, தமிழ் சினிமாவை காக்கும் செயலை செய்தத...
உதய் திட்டத்தால் இலவச மின்சார திட்டங்களுக்கு ஆபத்து – மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

உதய் திட்டத்தால் இலவச மின்சார திட்டங்களுக்கு ஆபத்து – மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    உதய் திட்டத்தால் இலவச மின்சார திட்டங்களுக்கு ஆபத்து - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் மத்திய அரசின் மின்சார சட்டத்திருத்த மசோதாவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மின்சாரம் தொடர்பான மாநில அதிகாரங்களை அபகரிக்க புதிய மின்சார திருத்தச் சட்டத்தை கொண்டு வரும் மத்திய அரசுக்கு கடும் கண்டனங்கள். மின் கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் பறித்துக் கொடுத்த மத்திய அரசு இனி, ஆணையத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும். மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களின் தலைவர், உறுப்பினர்களைக் கூட மத்திய தேர்வுக் குழுவே தேர்வு செய்யும். உறுப்பினரோ, தலைவரோ இல்லாமல் இருந்தால் ஒரு மாநில ஆணையத்தின் பணியை வேறொரு மாநில ஆணையம் கவனிக்க மத்த...
சென்னையில் பிரபாகரன் கைதின் போது காப்பாற்றியது கலைஞரா? வரலாறை மாத்தாதீங்கப்பா ஆதங்கப்படும் பத்திரிகையாளர் ஏகலைவன்

சென்னையில் பிரபாகரன் கைதின் போது காப்பாற்றியது கலைஞரா? வரலாறை மாத்தாதீங்கப்பா ஆதங்கப்படும் பத்திரிகையாளர் ஏகலைவன்

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    வரலாறு தெரியலைன்னா கேட்டாவது தெரிந்து கொள்ளுங்கப்பு. பா. ஏகலைவன் அவர்களின் பதிவு. என் பெயர் #கரிகாலன் என்கிற... 19.5.1982 அன்று #சென்னை_பாண்டிபஜாரில் நடந்த துப்பாக்கிக் சண்டைக்கு முன்பு... #மயிலாப்பூரில் உள்ள சாலைத் தெருவில் தான் பிரபாகரன் தங்கிருந்தார். அதற்கு முன்பு வேறு சில இடங்களில் இருந்தார்கள். (கைதுக்கு பிந்தைய காலத்தில் இந்திராநகரிலும், #திருவான்மீயூரிலும் இருந்தார்கள்). அந்த ஏற்பாட்டை எல்லாம் செய்தது #பழ_நெடுமாறன் அவர்களும், அவரோடு இருந்த வழக்கறிஞர் கே.எஸ். #ராதாகிருஷ்ணனும்தான். அதன் பிறகுதான், வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தங்கியிருந்த மயிலாப்பூர் சாலைத்தெருவிற்கு இடமாற்றமானார் தலைவர். அப்போது #முகுந்தன் என்கிற #உமா_மகேஸ்வரனுக்கும், #தலைவர்_பிரபாகரன் அவர்களுக்கும் முரண்பாடு முற்றி மோதலில் நகர்ந்துகொண்டிருந்தது. உமா மகேஸ்வரன் #கோடம்பாக...
கொள்ளை நோய்… அரசின் தொடர் கொள்ளை… வெகுண்டெழு தமிழகமே, வேறு தலைமை தேடு – கமல் ஆவேசம்!

கொள்ளை நோய்… அரசின் தொடர் கொள்ளை… வெகுண்டெழு தமிழகமே, வேறு தலைமை தேடு – கமல் ஆவேசம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
நடிகர், மக்கள் நீதி மய்ய தலைவர கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழர்காள் வணக்கம். ஒரு வைரஸ் கிருமிக்கு இருக்கும் உயிர் வாழும் ஆசை கூட, தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்காது என திண்ணமாக நம்பும் ஒரு அரசு நமக்கு வாய்த்தது ஏன்? ஓட்டுக்கு காசு வாங்கி, 5 வருடம் நம் வாழ்வை இவர்களுக்கு குத்தகைக்கு விட்டோமே அதன் விளைவு தான். பஞ்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில், மதுக்கடைகளை திறந்து விட்டால் மக்களின் கவனம் திரும்பிவிடும் என நம்பும் அரசுக்கு பெயர் “அம்மாவின் அரசா” ? தாயுள்ளம் கொண்டோர் அனைவருக்கும் அவமானமல்லவா அது? இலவசமாக எத்தனை தாலிகள் தந்தாலும், வேலையில்லாத குடிகாரன் வீட்டுத் தாலி பறிக்கப்பட்டு, அடகுக்கடைக்கு போகும், பின் அரசு நடத்தும் சாராய கடைகள் மூலம் அரசுக்கே வந்து சேரும் என்று தெரியும் தமிழ் நாட்டை ஆள்பவர்களுக்கு. ஓட்டுக்கு இத்தனை ஆயிரம், விலையில்லா பொருள் இத்தனை ஆயிரம் ...
அரசு ஊழியர் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது ஏமாற்று வேலை! அரசுக்கு திருமா கடும் கண்டனம்

அரசு ஊழியர் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது ஏமாற்று வேலை! அரசுக்கு திருமா கடும் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அரசு ஊழியர்களிடம் பறித்த உரிமைகளை திருப்பித் தருக! ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது ஏமாற்றுவேலை! தமிழக அரசுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி  கண்டனம் கொரோனா பேரிடர் காலத்தில் அரசு ஊழியர்களின் உரிமைகளை ஒவ்வொன்றாகத் தமிழக அரசு பறித்துக்கொண்டிருக்கிறது. அகவிலைப்படி பறிப்பு, ஈட்டிய விடுப்பைப் பணமாக்கிக் கொள்வதற்குத் தடை என அரசு ஊழியர்கள்மீது அடுத்தடுத்து தமிழக அரசு தாக்குதல் தொடுத்து வருகிறது. இப்போது ஓய்வுபெறும் வயதை 59 என ஆக்கிக் கண்துடைப்பு நாடகம் ஆடுகிறது. மாறாக, பறிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் உரிமைகளை மீள ஒப்படைக்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். ஓய்வு காலப் பலன்களை வழங்காமல் ஒத்திப் போடுவதற்காகவே இந்த நீட்டிப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறதே தவிர, அரசு ஊழியர்களுக்கு உதவுவதற்காக அல்ல என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம். அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை ஓ...