கபில்தேவ் மனைவி கேரக்டரில் ரஜினி ஜோடி..!
கபில்தேவ் மனைவி கேரக்டரில் ரஜினி ஜோடி..!
இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை முதல்முதலில் வென்ற ஆண்டு 1983. கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, உலகக்கோப்பை இறுதி போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து கோப்பையை வென்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 54.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆனால் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் மேற்கிந்திய தீவுகள் அணி 52 ஓவர்களில் 140 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்திய அணி கோப்பையை வென்றது. இந்த வெற்றியை குறிக்கும் வகையில் பாலிவுட்டில் '83 தி ஃபிலிம்' என்ற டைட்டிலில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர்சிங், கவாஸ்கர் கேரக்டரில் தாஹிர் ராஜ், ஸ்ரீகாந்த் கேரக்டரில் தமிழ் நடிகர் ஜீவா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் கபில்தேவ் மனைவி கேரக்டரான ரூமி பாட்டியா எ...









