பாலாவின் நாச்சியார் படத்தோடு மோதும் கிருஷ்ணவின் வீரா..!
இயக்குனர் ராஜா ராமன் இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா நாயகனாக நடித்துள்ள படம் 'வீரா'. இந்த படத்தில் நடிகர் கருணாகரன் நண்பன் கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பாக்கியம் சங்கர் கதை அமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் கிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் இணைந்துள்ளார். இவர் முன்னதாக தமிழ், கன்னடா, மலையாளம் போன்ற மொழிகளில் ஐந்து படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமான முதல் படம் 'தீயா வேல செய்யணும் குமாரு'. இந்த படத்தில் நாயகி ஹன்சிகாவுக்கு தோழி கதாபத்திரத்தில் நடித்திருந்தார்
இதனை தொடர்ந்து இவர் நாயகியாக அறிமுகமாகும் படம் 'வீரா'. இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாவதாக படக்குழு அறிவித்தது. ஆனால் இந்த படம் வெளியாகும் நாளில் கிட்டத்தட்ட 8 படங்கள் வெளியாக இருந்தது. இதனால் திரையரங்குகள் கிடைக்காமல் தள்ளி போனது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் வெளியீடு தேதியை நட...









