பீஸ்ட் படத்தின் இந்தி ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ’அதிரடியான #BeastHindiTrailer-ஐ அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. எப்போதும் விஜய் சாரின் தீவிர ரசிகன் நான்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.
https://youtu.be/0q7bKjLa0Nc
நடிகர் ஆர்யா நடிக்கும் “கேப்டன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
நடிகர் ஆர்யா, டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை போன்ற தொடர்ச்சியாக அழுத்தமான கதையம்சங்கள் கொண்ட, பிளாக்பஸ்டர் திரைப்படங்களை வழங்கியதன் மூலம் புகழின் உச்சத்தை எட்டியுள்ளார்.
அவரது நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் கேப்டன் படத்திற்கு வர்த்தக வட்டாரங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.
“டெடி” என்ற பிரமாண்டமான படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளர்கள் தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்,
இந்த ஃபர்ஸ்ட் லுக், பார்வையாளர்களை ஆச்சர்யத்தின் உச்சிக்கு இட்டு செல்லும் வகையில், அனைவரையும் ஈர்க்கும் படி அமைந்துள்ளது.
நம்பமுடியாத ஆச்சர்யமான உண்மை என்னவென்றால், இந...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், தற்போது சபரி என்ற புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்.
அனில்காட்ஸ் இயக்கும் இப்படத்தை மஹா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் திரு.மகேந்திர நாத் கோண்ட்லா தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பில் வரலட்சுமி சரத்குமார் கலந்துக் கொண்டுள்ளார்.
காதல் மற்றும் கிரைம் கலந்த திரைப்படமாக சபரி படம் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், சஷாங்க் சித்தம்ஷெட்டி, மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு கோபி சுந்தரின் இசையமைக்க, ஒளிப்பதிவாளராக நானி சமிடிசெட்டியும், கலை இயக்குனராக ஆசிஷ் தேஜா புலாலாவும், படத்தொகுப்பாளராக தர்மேந்திரா காக்கர்லால் ஆகியோரும் பணியாற்றுகின்றனர்.
தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு உகாதி தினத...
இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியிருந்தார்.
இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார்.
சமீபத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், தலைவர் 169 என்று பெயரிட்டுள்ள இப்படத்தில் ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் ஆசையை இயக்குனர் நெல்சன் இப்படத்தின் மூலம் பூர்த்தி செய்யவுள்ளார் என கூறப்படுகிறது.
இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....
சரண்ராஜ் இயக்கத்தில், தேவ் சரண்ராஜ் அறிமுகமாகும் புதிய படம். Soni Sri Production வழங்கும், “Production No 1“.
தென்னிந்திய திரைத்துறையின் பிரபல நடிகர் சரண்ராஜ் இரண்டாவது மகன், தேவ் சரண்ராஜ் நாயகனாக அறிமுகமாகிறார்.
பெயர் சூட்டப்படாத இந்த புதிய திரைப்படம் “Production No 1” என தயாராகிறது.
Soni Sri Production நிறுவனம் தயாரிக்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பெங்காலி உட்பட பல 9 மொழிகளில் 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சரண்ராஜ், நாயாகன், குணசித்திரம், வில்லன் என எந்த கதா பத்திரத்திலும் தனி முத்திரை பதித்து, தனக்கென மக்களின் மனதில் தனித்த இடம் பிடித்தவர். ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் இப்படம் மூலம் இயக்குநராக கால் பதிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் அவரே எழுதுகிறார்.
பைலட்டாக இருந்து, கோவிட் காலத்தில் பணியினை விட்டு, நடிப்பு கல்லூரியில...
விஜய் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள பீஸ்ட் திரைப்படம் லைக்குகளை குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள " பீஸ்ட்" திரைப்படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன் என திரையுலக பிரபலங்கள் பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
நடிகர் விஜய் பேசும் அதிரடி வசனங்கள் மற்றும் சண்டை காட்சிகள் இடம்பெற்று இருந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது.
குறிப்பாக டிரைலரில் விஜய் " நான் அரசியல்வாதி அல்ல, நான் போராளி" என பேசிய வசனத்தை ரசிகர்கள் அதிகளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ப...
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரிகளில் ஒருவரான மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரியா.வி இயக்கியுள்ள தொடர் “அனந்தம்”.
இது 1964-2015 வரை அனந்தம் என்ற வீட்டில் வாழ்ந்த 3 தலைமுறைகளின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உணர்ச்சிகரமான தருணங்களை தொகுத்துள்ள இணைய தொடர்.
இந்த தொடரில் பிரகாஷ் ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அரவிந்த் சுந்தர், சம்பத், விவேக் பிரசன்னா, வினோத் கிஷன், ஜான் விஜய், விவேக் ராஜ்கோபால், இந்திரஜா, சம்யுக்தா, அஞ்சலி ராவ், மிர்னா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஹேப்பி யூனிகார்ன் சார்பில் வி.முரளி ராமன் இந்த தொடரை தயாரித்துள்ளார். இதன் திரைக்கதையை பிரியா.வி, ராகவ் மிர்தாத், ப்ரீத்தா ஜெயராமன் மற்றும் ரீமா ரவிச்சந்தர் எழுதியுள்ளனர்.
பகத் ஒளிப்பதிவு பணியாற்றி ஏ.எஸ்.ராம் இசையமைத்து சதீஷ் சூர்யா படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளனர். இந்த...
நடிகர் கார்த்தி, கடந்த 2007-ம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.
இதையடுத்து பையா, மெட்ராஸ், சிறுத்தை, தீரன், கைதி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன், பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் கார்த்தி தற்போது அவருடைய சமூகவலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
அவர் நடிப்பில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பையா, கொம்பன் மற்றும் சுல்தான் ஆகிய மூன்று படங்களும் ஏப்ரல் 2-ஆம் தேதி அன்று வெளியானது.
இந்த மூன்று படங்களின் நினைவுகளை பற்றியும் அவர் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, பையா திரைப்படம் எனக்கு முற்றிலும் புதிய கண்ணோட்டத்தைக் வெளிப்படுத்த வித்திட்டது. நான் அறிமுகமாகி 8 வ...
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள படம் 'ஆர்ஆர்ஆர்'.
இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதி வெளியானது.
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வருகிறது.
இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர்.
இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், ஆர்.ஆர்.ஆர். புதிய வசூல் சாதனை படைத்துள்ளது.
அதன்படி, ஆர்.ஆர்.ஆர். வெளியான ஒரு வாரத்தில் ரூ.710 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்....
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மன்மத லீலை’.
வெங்கட் பிரபுவின் 10 வது திரைப்படமான இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் உள்ளிட் நடிகைகள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மணிவண்ணன் எழுதியுள்ளார்.
இந்த படத்தின் கதை ஒரு இளைஞனின் வாழ்க்கையில் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் இரண்டு முக்கிய சம்பவங்களைப் பற்றியது என்றும் இயக்குனர் பாக்கியராஜின் 'சின்ன வீடு' திரைப்பட பாணியில் இருக்கும் என்றும் படத்தின் கதை குறித்து வெங்கட் பிரபு கூறியிருந்தார்.
பிரேம் ஜி இசையமைத்துள்ள இப்படத்தை ராக்ஃபோர்ட் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது....