பத்மாவதி படம்: பாஜக ஆளும் மாநிலங்கள் விதித்த தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது ஏன்..?
CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இம்மாதம் 25 ஆம் தேதி, பத்மாவதி திரைப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும், குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்கள் தணிக்கை துறை சான்றிதழ் பெற்ற இப்படத்திற்கு தடை விதித்தன.
இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை அணுகினர் இப்படகுழுவினர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, இப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தது. நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரும் இந்த அமர்வில் இடம் பெற்றிருந்தனர்.
அந்த தீர்ப்பில்,"மாநிலங்கள் படத்திற்கு தடை விதிப்பது, கூட்டாட்சியை ஒழிப்பதற்கு ஒப்பானது. இது ஒரு முக்கியமான விஷயம். யாருக்காவது ஏதேனும் பிரச்னை என்றால், நிவாரணத்திற்காக அதற்கான உரிய தீர்ப்பாயத்தை அணுகலாம். மாநிலங்கள் ஒரு படத்தின் உள்ளடக...









