மிகப்பெரிய ஊழலை பற்றி பேசும் திரைப்படம் `இரும்புத்திரை’ – விஷால்
CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் `இரும்புத்திரை' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் விஷால், இயக்குநர் பி.எஸ்.மித்ரன், யுவன் ஷங்கர் ராஜா, குட்டி பத்மினி, இயக்குநர் லிங்குசாமி, கில்ட் ஜாகுவார் தங்கம், தயாரிப்பாளர் சத்ய ஜோதி தியாகராஜன், நடிகர் ராஜ் கிரண், தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், ஆர்.கே.செல்வமணி, விஷாலின் தாயார் லட்சுமி தேவி, தந்தை ஜி.கே. ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழா துவங்கியதும் கிட்னி செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட விஷால் வர்ஷனுக்கும், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட மகாலட்சுமியின் கல்விக்கும் உதவும் வகையில் விஷாலின் தாயார் லட்சுமி தேவி நன்கொடை வழங்கினார். மேடையில் அவருடன் நடிகை குட்டி பத்மினியும் இருந்தார்.
விஷால் பேசிய போது, சமூக பிரச்னையை பற்றி படத்தில் பேசும் போது அது மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும். யு...









