செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

திரைப்படங்கள்

இணையத்தில் வைரலாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிரைலர்

இணையத்தில் வைரலாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிரைலர்

HOME SLIDER, Trailer, டிரைலர்கள், திரைப்படங்கள்
இணையத்தில் வைரலாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிரைலர் பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.   https://www.youtube.com/watch?v=oO8TTM2FgIA&t=1s   டிவிவி தனய்யா தயாரிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது...
முதல் இடம் பிடித்து சாதனை படைத்த சூர்யா நடித்த ஜெய் பீம்

முதல் இடம் பிடித்து சாதனை படைத்த சூர்யா நடித்த ஜெய் பீம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
முதல் இடம் பிடித்து சாதனை படைத்த ஜெய் பீம் ஒவ்வொரு ஆண்டும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். இந்தியாவில் 2021-ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்கள் பட்டியலை கூகுள் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சூர்யா நடித்த ஜெய்பீம் முதல் இடம் பிடித்துள்ளது. இந்தி படங்களான ஷேர்ஷா இரண்டாவது இடத்திலும், ராதே 3-வது இடத்திலும், பெல் பாட்டம் 4-வது இடத்திலும், எட்டேர்னல்ஸ் 5-வது இடத்திலும், விஜய்யின் மாஸ்டர் 6-வது இடத்திலும், சூர்யவன்சி 7-வது இடத்திலும், மற்றும் காட்சில்லா காங் 8-வது இடத்திலும், திரிஷ்யம் 2-ம் பாகம் 9-வது இடத்திலும், புஜ் : த பிரைட் ஆப் இந்தியா 10-வது இடத்திலும் உள்ளன....
வித்தியாசமாக உருவாகியுள்ள சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டீசர்

வித்தியாசமாக உருவாகியுள்ள சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டீசர்

CINI NEWS, HOME SLIDER, Trailer, டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
வித்தியாசமாக உருவாகியுள்ள சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டீசர் சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மாநாடு படத்திற்கு பிறகு சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தில் சிம்பு உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் வித்தியாசமாக இருக்கும் சிம்புவின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் ஆவலை கூட்டியுள்ளது.   https://www.youtube.com/watch?v=yuhAAONZvVI&t=4s   இப்படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூர் பகுதியில் ஒரு மாதம் நடைபெற்ற நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்தது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ள இப்படத்தின் பணி...
பீஸ்ட் படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்த பூஜா ஹெக்டே

பீஸ்ட் படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்த பூஜா ஹெக்டே

CINI NEWS, HOME SLIDER, திரைப்படங்கள், நடிகைகள்
பீஸ்ட் படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்த பூஜா ஹெக்டே நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.  அனிருத் இசையமைத்து வருகிறார். விஜய்யின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் இரு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு 100 நாட்களுக்கு மேல் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் 100 நாட்கள் படப்பிடிப்பு நிறைவை அடுத்து படக்குழுவினரின் ஸ்பெஷல் புகைப்படம் வெளியாகி மிகவும் வைரலானது. இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்துள்ளதாகத் தெரிவிக்...
6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன்!

6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன்! கொரோனாவால் முடங்கிய பெரிய நடிகர்கள் படங்களின் படப்பிடிப்புகள் வேகவேகமாக முடிந்து தற்போது அடுத்தடுத்து திரைக்கு வந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில் விஜய்சேதுபதி நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனின் `டான்' ஆகிய 2 படங்களையும் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். ஏற்கனவே 2016-ல் விஜய்சேதுபதியின் றெக்க, சிவகார்த்திகேயனின் `ரெமோ' ஆகிய 2 படங்களும் ஒரே நாளில் மோதின. 6 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் இருவர் படங்களும் மோத வருகின்றன. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த `டாக்டர்' படம் எந்த பெரிய படங்களும் போட்டிக்கு வராத நிலையில் தனித்து வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படம் ரூ.100 கோடி வரை வசூல் பார்த்ததாக கூறப்பட்டது. விஜய்சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ்...
துப்பறிவாளன் 2 படத்தின் முக்கிய அறிவிப்பு!

துப்பறிவாளன் 2 படத்தின் முக்கிய அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
துப்பறிவாளன் 2 படத்தின் முக்கிய அறிவிப்பு! விஷால் ஏற்கனவே பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி செல்லமே படம் மூலம் கதாநாயகன் ஆனார். அந்த படத்தின் வெற்றியால் நடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தினார். இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) முதல் டைரக்டர் அவதாரம் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் 2017-ல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் அதன் 2-ம் பாகமும் இதே கூட்டணியில் உருவானது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்தபோது மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் மோதல் ஏற்பட்டதால் படத்தை இயக்க முடியாது என்று மறுத்து மிஷ்கின் வெளியேறிவிட்டார். இதையடுத்து துப்பறிவாளன் 2-ம் பாகத்தை நானே இயக்குவேன் என்று விஷால் அறிவித்தார். ஆனாலும் பட வேலைகளை தொடங்காமல் வேறு படங்களில் அவர் நடித்து வந்ததால் துப்பறிவாளன்-2 படத்தை கிடப்பில் போட்டு விட்டதாக பேச்சு...
ஜீவி ரைட்டரின் அடுத்த படைப்பு!

ஜீவி ரைட்டரின் அடுத்த படைப்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜீவி ரைட்டரின் அடுத்த படைப்பு! வெற்றி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் ஜீவி. இந்த திரைப்படத்தில் முக்கோண தொடர்பியல் விதி எனும் கருவை வைத்து, கதை, திரைக்கதை அமைத்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை குவித்தவர் பாபுதமிழ். இவர் தற்போது ‘க்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். ஒரு கால்பந்து விளையாட்டு வீரனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களும் அதனையொட்டி நடக்கும் ஃபேண்டஸி தருணங்களையும் மையமாக வைத்து இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் பாபுதமிழ். இப்படம் குறித்து இயக்குனர் பாபுதமிழ் கூறும்போது, ‘ஊர் பக்கம் பலர் க் வைத்து பேசுவார்கள். அதாவது பொடி வைத்து பேசுவதைத் தான் க் என்பார்கள். இந்த படத்தில் யார் என்ன பொடி வைத்து பேசுகிறார்கள் என்பதை சைக்காலஜி ஃபேண்டஸி வகையில் உருவாக்கி இருக்கிறேன். இந்த படத்தில் யோகேஷ் மற்றும் அனிகா முதன்மை...
ஜெய்பீம் டிவி ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றிய கலைஞர் டிவி 

ஜெய்பீம் டிவி ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றிய கலைஞர் டிவி 

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ஜெய்பீம் டிவி ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றிய கலைஞர் டிவி சூர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ஜெய்பீம். த.செ.ஞானவேல் இயக்கத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தை தமிழக முதல்வர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் பார்த்துவிட்டு பாராட்டியது நினைவுக்கூறத்தக்கது. சமீபத்தில், ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் டிவி உரிமை பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளது. இப்படத்துக்கு குறிப்பிட்ட சாதியினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை கலைஞர் ட...
பாலிவுட்டில் கால் பதிக்கும் நடிகர் ரஹ்மான்.!

பாலிவுட்டில் கால் பதிக்கும் நடிகர் ரஹ்மான்.!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ், தெலுங்கு,மலையாளம் மொழி படங்களில் பிசியாக இருப்பவர் நடிகர் ரஹ்மான். மணிரத்னத்தின் இரண்டு பாகங்கள் கொண்ட பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வனில்  நடித்து முடித்த அவர் பாலிவுட்டின் பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான   விகாஸ் பால் இயக்கும் இரண்டு பாகங்கள் கொண்ட  பிரம்மாண்ட  படைப்பான ' கண்பத்' என்ற ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். லண்டனில் படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்தில் டைகர் ஷெராப், ரஹ்மான், க்ரிதி சநோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். அமிதாப் நடித்த  ' பிளாக் '  படத்தின் மூலம் தயாரிப்பாளராக பாலிவுட் பிரவேசம் செய்த விகாஸ் பால் அதன் பின் நிறைய படங்களுக்கு கதை- திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் 'குயின்' , 'சில்லார் பார்ட்டி', 'சூப்பர் 30' போன்ற ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை இயக்கி மூன்று முறை தேசிய விருதும் மற்றும் பல ...
ரிலீஸ் தேதியில் பின் வாங்கிய பிரபு தேவா!

ரிலீஸ் தேதியில் பின் வாங்கிய பிரபு தேவா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரிலீஸ் தேதியில் பின் வாங்கிய பிரபு தேவா! பிரபுதேவாவை திரைகளில் பார்த்து நீண்ட காலமாகிவிட்ட வருத்தம் அவரது ரசிகர்களுக்கு உள்ளது. கடைசியாக தமிழில் நடித்த தேவி-2 படம் 2019-ல் வெளியானது. பல வருடங்களாக திரைக்கு வராமல் முடங்கி இருந்த பொன்மாணிக்கவேல் படம் தியேட்டரில் ரிலீசாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டுவிட்டனர். இந்த நிலையில் பிரபுதேவா நடித்துள்ள தேள் படம் இந்த வாரம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். ரசிகர்களும் தியேட்டரில் தேள் படத்தை பார்க்கும் ஆவலோடு இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் தேள் படம் ரிலீசை தள்ளிவைத்து விட்டனர். இதுகுறித்து பட நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘எதிர்பாராத காரணத்தினால் ‘தேள்’ திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகிறது. புதிய ரிலீஸ் தேதி விரைவில்...