“சக்ரா” விஷாலுக்கு இன்னொரு விருதா – கோடங்கி விமர்சனம்
"சக்ரா" விஷாலுக்கு இன்னொரு விருதா - கோடங்கி விமர்சனம்
டிஜிட்டல் இந்தியாவின் லட்சணம் சந்தி சிரிக்கும் படம் தான் சக்ரா.
இராணுவ அதிகாரியாக விஷால், போலீஸ் அதிகாரியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத். இருவரும் காதலர்கள். ஒரு சின்ன சம்பவத்தால் காதலில் விரிசல்.
சுதந்திர தினத்தில் சென்னையின் முக்கிய பகுதிகளில் தொடர் கொள்ளை நடக்கிறது. 50 வீடுகளில் துப்பாக்கி முனையில் நடக்கும் கொள்ளையில் விஷாலின் பாட்டி வீடும் ஒன்று. அங்கிருந்த விஷாலின் அப்பா வாங்கிய சக்ரா விருதையும் கொள்ளையர்கள் எடுத்து செல்கிறார்கள்.
அந்த வழக்கை ஷ்ரத்தா விசாரிக்கிறார். அவரோடு விஷாலும் கை கோர்க்கிறார்.
கொள்ளை அடித்தவர்கள் யார்? அந்த சக்ரா விருது திரும்ப கிடைத்ததா? இதுதான் கதை.
இன்னொரு நாயகியாக ரெஜினா கசண்ட்ரா பின் பாதியில் எண்ட்ரி கொடுக்கிறார். வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்பதற்காக கொஞ்சம் மெனக்கெடுகிறார்....









